ஜெ.சி.பி. எந்திரம் மீது அரசு ஜீப் மோதி விபத்து! முசிறி பெண் சப்-கலெக்டர் பலி!

திருச்சி: திருச்சி  அருகே பெண் சப்கலெக்டர் சென்று கொண்டிருந்த அரசு ஜீப், சாலையோரம் நின்றிருந்த ஜெ.சி.பி. எந்திரம் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் பெண் சப்கலெக்டர் சம்பவ இடத்திலேயே பலியானார்.  டிரைவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம் முசிறி உதவி கலெக்டராக (கோட்டாட்சியர்) இருந்தவர் ஆரமுத தேவசேனா (வயது 50). இவர் இன்று காலை அலுவலக ஜீப்பில் முசிறியில் இருந்து திருச்சி நோக்கி புறப்பட்டார்.  … Read more

தொலைத்​தொடர்பு துறை​யில் 120 ஆராய்ச்சி திட்​டங்​களுக்கு ரூ.500 கோடி: மத்திய அரசு அனு​மதி

தொலைத்தொடர்புத் துறை தொழில்நுட்ப மேம்பாட்டுக்காக 120 ஆராய்ச்சி திட்டங்களுக்கு ரூ.500 கோடிக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக மத்திய தொலைத்தொடர்புத் துறை செயலர் நீரஜ் மிட்டல் தெரிவித்தார். மத்திய தொலைத்தொடர்புத் துறை மற்றும் சென்னை ஐஐடி சார்பில் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியம் தொடர்பான 3 நாள் கருத்தரங்கம் தரமணியில் உள்ள ஐஐடி ஆராய்ச்சி பூங்கா வளாகத்தில் நேற்று தொடங்கியது. இக்கருத்தரங்கை மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை செயலர் நீரஜ் மிட்டல் தொடங்கிவைத்து பேசியதாவது: தொலைத்தொடர்பு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி … Read more

ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு ரத்து – வேறு நீதிபதிக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்துள்ள உச்ச நீதிமன்றம், விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு அறிவுறுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு களாம்பாக்கத்தை சேர்ந்த சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி எம்எல்ஏ, முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், நீதிமன்றத்தில் ஆஜரான … Read more

இஸ்ரேல் மருத்துவமனையை நாங்கள் குறிவைக்கவில்லை: ஈரான் விளக்கம்

தெஹ்ரான்: ‘இஸ்ரேலின் ராணுவத் தளத்தையே நாங்கள் குறிவைத்தோம். இஸ்ரேல் மருத்துவமனையை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தவில்லை’ ஈரான் விளக்கம் அளித்துள்ளது. ஈரான் – இஸ்ரேல் மோதலின் 7-வது நாளான இன்று (ஜூன் 19) காலை ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இஸ்ரேலின் சொரோகா மருத்துவமனை சேதமடைந்தது. 47 பேர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல் அவிவ் நகரில் பங்குச் சந்தை கட்டிடம் அமைந்துள்ள பகுதியிலும் ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில், சொரோகா மருத்துவமனை தாக்குதலுக்கு இஸ்ரேல் கடும் … Read more

அப்பட்டமாக பொய் கூறும் அன்புமணி : ராமதாஸ்

சென்னை அன்புமணி அப்பட்டமாக பொய் சொவ்வதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அன்புமணி ராமதாசுக்கு இடையே கருத்து கடந்த சில வாரங்களாக மோதல் நடந்து வருகிறது. இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் சேலத்தில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்று பாமக நிறுவனர் ராமதாஸ்  சென்னை வந்துள்ளார் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக எம்.எல்.ஏ.க்களின் உடல்நிலை குறித்தும் ராமதாஸ் கேட்டறிந்தார். பிறகு ராமதாஸ் செய்தியாளர்களிடம் பாமகவில் ஏற்பட்டுள்ள … Read more

இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | June 20 | Astrology | Bharathi Sridhar | Today Rasi palan |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர். Source link

தமிழகத்தில் ஜூன் 25-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் வரும் 25-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 21 முதல் 25-ம் தேதி வரை ஓரிரு … Read more

கேரளா, குஜராத், பஞ்சாப், மேற்கு வங்கம்: 4 மாநில இடைத்தேர்தல் அமைதியாக நடந்தது

புதுடெல்லி: கேரளா, குஜராத் பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களில் 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. கேரள இடைத்தேர்தலில் அதிகபட்சமாக 73 சதவீத வாக்குகள் பதிவானது. கேரளாவில் நிலம்பூர், மேற்கு வங்கத்தில் காலிகஞ்ச், பஞ்சாபில் மேற்கு லூதியானா, குஜராத்தில் விசாவதர், காடி ஆகிய 5 தொகுதிகளில் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. நிலம்பூரில் சுயேச்சை எம்எல்ஏ பி.வி.அன்வர், விசாவதரில் ஆம் ஆத்மி எல்ஏ புபேந்திர பயானி ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததால் இடைத்தேர்தல் … Read more

இந்தியா – பாக். போர் நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்த பங்கும் இல்லை: முதல்முறையாக ஒப்புக்கொண்ட ட்ரம்ப் – பின்னணி என்ன?

வாஷிங்டன்: ‘இந்​தியா – பாகிஸ்​தான் இடையி​லான போர் நிறுத்​தத்​துக்கு நான்​தான் காரணம்’ என்று தொடர்ந்து கூறிவந்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், முதல்​முறை​யாக ‘இரு நாட்டு தலை​வர்​களே போர் நிறுத்​தத்​துக்கு காரணம். இதில் அமெரிக்கா​வுக்கு எந்த பங்​கும் இல்​லை’ என்று உறு​திபட தெரி​வித்​துள்​ளார். இந்தியாவின் கருத்தை பிரதமர் மோடி தெரிவித்ததை தொடர்ந்து, அவர் இவ்வாறு கூறியுள்ளார். காஷ்மீரின் பஹல்​காம் பகு​தி​யில் கடந்த ஏப்​ரல் 22-ம் தேதி தீவிர​வா​தி​கள் தாக்​குதல் நடத்​தினர். இதில் 26 சுற்​றுலா பயணி​கள் உயி​ரிழந்​தனர். … Read more