அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறையை எளிதாக்கி அரசு உத்தரவு

சென்னை: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக அரசு ஊழியர் நடத்தை விதிகளில் திருத்தங்கள் செய்து அரசு ஆணையிட்டுள்ளது. இதுதொடர்பாக தலைமைச் செயலர் ந.முருகானந்தம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பாஸ்போர்ட் பெறவும், அதை புதுப்பிக்கவும் அடையாளச் சான்றிதழ் மற்றும் தடையின்மை சான்றிதழ் (என்ஓசி) பெறுவதில் இருந்துவரும் நடைமுறைகளை எளிமைப்படுத்த அரசின் எளிமை ஆளுமை திட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதற்காக ஆய்வுக் குழுவும், அதிகாரக் குழுவும் அமைக்கப்பட்டன. … Read more

விமான விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் இடைக்கால நிவாரணம்: ஏர் இந்தியா அறிவிப்பு

விமான விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.25 லட்சம் வழங்கப்படும் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது. இதுகுறித்து ஏர் இந்தியா எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எங்கள் நிறுவனம் ஆதரவாக இருக்கும். இந்த கடினமான தருணத்தில் அவர்களுக்கு தேவையான ஆதரவை வழங்க எங்கள் நிறுவனம் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது. விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் உயிர் தப்பியவர்களுக்கு உடனடி தேவையை சமாளிப்பதற்காக ரூ.25 லட்சம் இடைக்கால நிவாரணமாக … Read more

அமெரிக்கா தலையிட்டால் கடும் விளைவுகளை சந்திக்கும்: சரணடைய மறுத்து அயதுல்லா அலி கொமேனி எச்சரிக்கை

டெஹ்ரான்: ஈரான் ஒருபோதும் சரணடையாது என்றும் அமெரிக்கா தலையிட்டால் கடும் விளைவுகளை சந்திக்கும் என்றும் அந்நாட்டு மதத் தலைவர் அயதுல்லா அலி கொமேனி எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேல், ஈரான் இடையே கடந்த 6 நாட்களாக தீவிர வான்வழி போர் நடைபெற்று வருகிறது. இரு நாடுகளும் பரஸ்பரம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், ஈரான் சரணடைய வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று முன்தினம் கூறியிருந்தார். இதுகுறித்து ட்ரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்ட … Read more

பால சாகித்ய புரஸ்கார், யுவ புரஸ்கார் விருது: விஷ்ணுபுரம் சரவணன், லட்சுமிஹருக்கு முதல்வர் வாழ்த்து

சென்னை: ‘ஒற்றைச் சிறகு ஓவியா’ நூலுக்காக சாகித்ய அகாடமியின் பால சாகித்ய புரஸ்கார் விருது பெறத் தேர்வாகியிருக்கும் எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன், ‘கூத்தொன்று கூடிற்று & பிற கதைகள்’ சிறுகதைத் தொகுப்புக்காக யுவ புரஸ்கார் பெறத் தேர்வாகி இருக்கும் லட்சுமிஹர் ஆகியோருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் குழந்தைகளுக்கு வலியுறுத்தும் ‘ஒற்றைச் சிறகு ஓவியா’ நூலுக்காக சாகித்ய அகாடமியின் பால சாகித்ய புரஸ்கார் … Read more

உலகின் 50% டிஜிட்டல் பரிவர்த்தனை இந்தியாவில் நடைபெறுகிறது: சைப்ரஸ் கூட்டத்தில் பிரதமர் மோடி பெருமிதம்

லிமாசோல்: உலகின் 50% டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இந்தியாவில் யுபிஐ மூலம் நடைபெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி சைப்ரஸில் நடைபெற்ற கூட்டத்தில் பெருமிதத்துடன் தெரிவித்தார். இந்தியா-சைப்ரஸ் சிஇஓ அமைப்பின் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் மோடி இதுகுறித்து மேலும் கூறியதாவது: இந்தியாவில் ஜிஎஸ்டி, கார்ப்பரேட் வரி மற்றும் பல ஆயிரம் சட்டங்களை குற்றமற்றதாக்குதல் மூலம் வரி சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் அரசு தெளிவான மற்றும் நிலையான கொள்கைகளை உறுதிப்படுத்தியுள்ளது. அதைத்தவிர, வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கு தேவையான முதன்மையான முக்கியத்துவத்தையும் … Read more

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தம்: ட்ரம்ப்பிடம் தெளிவுபடுத்தினார் பிரதமர் மோடி

புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்த விவகாரத்தில் அமெரிக்க நாடு எந்தப் பங்கும் வகிக்கவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக தெளிவுபடுத்தியுள்ளார். இத்தகவலை மத்திய வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். இனிமேலும் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தை இந்தியா ஏற்காது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். கனடா நாட்டில் ஆல்பர்ட்டா மாகாணம் கனானாஸ்கிஸ் பகுதியில் 2 நாள்கள் நடைபெற்ற ஜி 7 உச்சிமாநாடு நேற்று முன்தினம் … Read more

நெஞ்சுவலி காரணமாக பாமக எம் எல் ஏ அருள் மருத்துவமனையில் அனுமதி

சென்னை நெஞ்சு வலி காரணமாக சேலம் மேற்கு தொகுதி பாமக எல் எல் ஏ அருள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீர் நெஞ்சுவலி காரணமாக சேலம் மேற்கு தொகுதி பாமக எம்.எல்.ஏ அருள் நெ சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் தற்போது நலமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாமக எம் எல் ஏ அருள் சபநாயகர் அப்பாவுவை சந்திக்க சென்னை வந்த … Read more

"கூட்டணி பேரம் பேசுவதற்காக கட்சி நடத்தவில்லை; அதிமுகவோடு சேரலாம், ஆனால்" – திருமா சொல்வதென்ன?

தமிழக அரசியல் களத்தில் இப்போதைக்குக் கூட்டணி குறித்த விவாதங்கள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. அதிமுக, பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில் இரண்டு கட்சிகளும் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்கக் களமிறங்கிவிட்டனர். அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் பாஜக கூட்டணியில் தலைமை அதிகாரத்தைக் கைப்பற்ற திட்டங்கள் தீட்டுவதாக சர்ச்சைகள் வெடித்த வண்ணமிருக்கின்றன. விசிக தலைவர் திருமாவளவன் Amit Shah: “இபிஎஸ் தலைமையில் அதிமுக – பாஜக கூட்டணி; நீட் விவகாரம்” – அமித் ஷா சொல்வதென்ன? இதற்கிடையில் … Read more

‘மா’ விவசாயிகள் பிரச்சினை: திண்டுக்கல்லில் ஜூன் 20-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்

சென்னை: கொள்முதல் விலை உள்ளிட்ட ‘மா’ விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாகத் தீர்த்துவைக்க, திமுக ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்தி, அதிமுக சார்பில் வரும் ஜூன் 20-ம் தேதி, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக தென் மாவட்டங்களில், குறிப்பாக திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள … Read more

அணு ஆயுத தயாரிப்பை அதிகரிக்கும் இந்தியா

புதுடெல்லி: இந்தியா அணு ஆயுத கையிருப்பை கணிசமாக விரிவுபடுத்தி உள்ளது. இதன்மூலம் பாகிஸ்தான் உடனான இடைவெளி விரிவடைந்துள்ளது. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி மையம் (எஸ்ஐபிஆர்ஐ) வெளியிட்டுள்ளள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அணு ஆயுத கையிருப்பை இந்தியா தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2024-ம் ஆண்டில் இந்தியாவிடம் 172 அணு ஆயுதங்கள் இருந்த நிலையில் இந்த ஆண்டு இது 180 ஆக அதிகரிக்கும். மேலும் மேம்பட்ட அணுசக்தி விநியோக அமைப்புகளை உருவாக்குவதிலும் இந்தியா குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. … Read more