துணை முதல்வர் உதயநிதி திருப்புவனத்தில் தடுப்பணை கட்டுமான பணிகள் ஆய்வு

சிவகங்கை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று திருப்புவனத்தில் தடுப்பணை கட்டுமான பணிகளை ஆய்வு செய்துள்ளார். தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று (17.6.2025) சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டத்தில் 40.27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வைகை ஆறானது தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு முக்கியமான குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக விளங்குகிறது. வைகை … Read more

சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான ஆளுநர் விருதுகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான தமிழக ஆளுநர் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக ஆளுநர் மாளிகையின் சார்பில் 2025-ம் ஆண்டுக்கான ஆளுநர் விருதுகளுக்கு விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. ‘சமூக சேவை’ மற்றும் ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு’ ஆகிய இரு பிரிவுகளில் சமூக நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிப்பதற்கும் முன்மாதிரியான பங்களிப்புகளை அளித்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. தலைசிறந்த … Read more

சிந்து நதிகளின் நீரை ராஜஸ்தானுக்கு திருப்ப திட்டம்: 113 கி.மீ. தொலைவுக்கு கால்வாய் கட்ட ஆய்வு

புதுடெல்லி: சிந்து நதி​களின் நீரை பஞ்​சாப், ஹரி​யா​னா, ராஜஸ்​தானுக்கு திருப்ப புதிய திட்​டம் தீட்​டப்​பட்டு உள்​ளது. இதற்​காக 113 கி.மீ. தொலை​வுக்கு கால்​வாய் அமைக்க முதல்​கட்ட ஆய்வு மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது. சிந்து நதி கட்​டமைப்​பில் சிந்​து, ஜீலம், செனாப், ரவி, பியாஸ், சட்​லஜ் ஆகிய 6 நதி​கள் உள்​ளன. இந்த நதி கட்​டமைப்பு நீரை பகிர்ந்து கொள்​வது தொடர்​பாக கடந்த 1960-ம் ஆண்​டில் இந்​தி​யா, பாகிஸ்​தான் இடையே ஒப்​பந்​தம் கையெழுத்​தானது. இதன்​படி கிழக்கு பகு​தி​யில் பாயும் ரவி, … Read more

“இப்போதைக்கு கமேனியை கொல்லப் போவதில்லை” – ஈரானுக்கு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை!

“ஈரானின் உச்சபட்ச தலைவர் என்று அழைக்கப்படுபவர் எங்கு மறைந்திருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் அவரை இப்போதைக்கு கொல்லப் போவதில்லை” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில், “ஈரானின் உச்சபட்ச தலைவர் என்று அழைக்கப்படுபவர் எங்கு மறைந்திருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும். அவர் எங்களுக்கு ஒரு எளிதான இலக்கு. ஆனால் அங்கு பாதுகாப்பாக இருக்கிறார். நாங்கள் அவரை கொல்லப் போவதில்லை. குறைந்தபட்சம் இப்போதைக்கு இல்லை. … Read more

ஏடிஜிபி ஜெயராம் கைது உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு

சென்னை ஏடிஜிபி ஜெயராம் தன் மீது பிறப்பிக்கப்பட்டுள்ள கைது உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். திருத்தணி அருகே உள்ள களம்பாக்கத்தில் காதல் திருமணம் செய்த இளைஞரின் சகோதரன் கூலிப்படை மூலம் கடத்தப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஜெகன் மூர்த்தி, ஏடிஜிபி ஜெயராமன் உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. நேற்று இது தொடர்பாக கோர்ட்டு உத்தரவின்பேரில் ஏடிஜிபி ஜெயராமன் நீதிமன்ற வளாகத்தில் வைத்தே கைது செய்யப்பட்டார். … Read more

வெள்ளிதான் அடுத்த தங்கமா? 2025-ல் முதலீடு செய்வது எப்படி? – விகடன் லாபம் நடத்தும் இலவச வெபினார்

வெள்ளிதான் அடுத்த தங்கமா? 2025-ல் முதலீடு செய்வது எப்படி? கடந்த ஓராண்டாக தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு படு லாபம். ஆனால் இந்தக் கட்டுரை தங்கம் பற்றியதல்ல. வெள்ளை உலோகமான வெள்ளி பற்றியது. கடந்த சில வாரங்களில் முதல்முறையாக ஒரு அவுன்ஸ் தங்கம், சர்வதேச அளவில் 35 அமெரிக்க டாலர் எனும் உச்சத்தைத் தொட்டுள்ளது. நிபுணர்களைப் பொறுத்தவரை, வெள்ளி புலிப்பாய்ச்சலுக்கு காத்திருப்பதாக கூறுகிறார்கள். ஏன் எப்போதும் இல்லாமல் தற்போது வெள்ளிக்கு இவ்வளவு மவுசு? நீங்கள் எப்படி இந்த வாய்ப்பை பயன்படுத்தி … Read more

கூடங்குளம் அருகே இளைஞரை வெடிகுண்டு வீசி கொன்ற வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை – வழக்கின் முழு விவரம்

திருநெல்வேலி: கூடங்குளம் அருகே இளைஞரை வெடிகுண்டு வீசி கொன்ற வழக்கில், 10 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட 4-வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் 17 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகேயுள்ள கூத்தங்குழி கிராமத்தில் 2007 நவம்பர் மாதம் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின்போது, அப்பகுதியை சேர்ந்த ஜேசு அருளப்பன் மகன் ரீகன்(22), கணேசன் ஆகிய இரு தரப்பி னரிடையே மோதல் ஏற்பட்டது. … Read more

கமலை​ மன்னிப்பு கேட்க சொல்வதுதான் நீதிபதியின் பணியா? – ‘தக் லைஃப்' வழக்கில் உச்ச நீதிமன்றம் கண்டனம்

துடெல்லி / பெங்களூரு: நடிகர் கமல்​ஹாசனின் ‘தக் லைஃப்’ படத்தை கர்​நாட​கா​வில் வெளி​யிட அனு​மதி அளித்த உச்ச நீதி​மன்​றம், கமல்​ஹாசனை மன்​னிப்பு கேட்க வலி​யுறுத்​திய நீதிபதிக்கு கண்​டனம் தெரி​வித்​துள்​ளது. ‘த‌மிழில் இருந்து கன்னட மொழி பிறந்​தது’ என்று `தக் லைஃப்’ பட இசை வெளி​யீட்டு விழா​வில் கமல் பேசி​யதற்கு எதி​ராக க‌ர்​நாடகா உயர் நீதி​மன்​றத்​தில் தொடரப்​பட்ட வழக்கை விசா​ரித்த நீதிபதி நாகபிரசன்​னா, ‘‘கமல்​ஹாசன் கருத்​தால் கன்னட மக்​களின் மனம் புண்​பட்​டுள்​ளது. அவர் மன்​னிப்பு கேட்​கா​விட்​டால் படத்தை திரை​யிட … Read more

இஸ்ரேல் தொடர் தாக்குதலால் டெஹ்ரானில் அணுக்கதிர் வீச்சு அபாயம்: ஈரானின் புதிய ராணுவ தளபதி உயிரிழப்பு – பின்னணி என்ன?

டெஹ்ரான்: இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் ஈரானின் புதிய ராணுவத் தளபதி அலி ஷத்மானி உயிரிழந்தார். அணுகுண்டு தயாரிப்பில் ஈரான் தீவிரம் காட்டி வரும் நிலையில், அந்நாட்டின் மீது இஸ்ரேல் விமானப்படை கடந்த 13-ம் தேதி திடீர் தாக்குதல் நடத்தியது. இதில், ஈரான் ராணுவத் தளபதி முகமது பகேரி, ஐஆர்ஜிசி படை தளபதி உசைன் சலாமி, ஈரான் போர் கட்டளை தலைமையக தளபதி கோலாம் அலி ரஷீத் ஆகியோர் உயிரிழந்தனர். தொடர்ந்து, ஈரானின் புதிய தளபதியாக அலி … Read more

இன்று 3 சட்டசபை தொகுதி நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று 3 சட்டசபை தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளார் அடுத்தாண்டு (2026)தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் திமுக, கடந்த ஆண்டிலிருந்தே தேர்தலுக்கான அடிப்படை பணிகளை தொடங்கி விட்டது. மதுரை பொதுக்குழு கூட்டத்தில் அறிவித்தபடி, ‘ உடன்பிறப்பே வா’ என்ற பெயரில், தொகுதிவாரியாக நிர்வாகிகளை சந்திக்கும் நிகழ்வை கடந்த 13-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் முதல்நாள் அன்று சிதம்பரம், விழுப்புரம், … Read more