குயின்ஸ் கிளப் டென்னிஸ்: டாட்ஜானா மரியா சாம்பியன்

லண்டன், பல நட்சத்திர வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள குயின்ஸ் கிளப் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாட்ஜானா மரியா (ஜெர்மனி), அமண்டா அனிசிமோவா (அமெரிக்கா) உடன் மோதினார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய மரியா 6-3 மற்றும் 6-4 என்ற நெர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினார். 1 More update தினத்தந்தி Related Tags : Tennis  … Read more

அமெரிக்காவில் டிரம்பின் குடியேற்ற கொள்கைக்கு எதிராக வலுக்கும் போராட்டம்

வாஷிங்டன் அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இதனை தொடர்ந்து நாட்டின் குடியேற்ற கொள்கையில் பல்வேறு திருத்தங்களைச் செய்து உத்தரவிட்டார்.அதன்படி விசாக்காலம் முடிந்தும் அமெரிக்காவில் தங்கியிருப்பவர்கள், சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சட்ட விரோதமாக குடியேறியவர்களில் ஒரு நாளைக்கு 3 ஆயிரம் பேரை கைது செய்ய டிரம்ப் உத்தரவிட்டார். எனவே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்கிடையே கடந்த 7-ந் தேதி … Read more

என் மீது ஏதாவது கோபம் இருந்தால் தயவுசெய்து மன்னித்து கொள்ளுங்கள்: ராமதாஸிடம் மன்னிப்பு கேட்ட அன்புமணி

​திரு​வள்​ளூர் / மது​ராந்​தகம்: ‘என் மீது ஏதாவது கோபம் இருந்​தால் தயவு செய்து மன்​னித்​துக் கொள்​ளுங்​கள்’ என பாமக நிறுவனர் ராம​தாஸிடம் அக்​கட்​சித் தலை​வர் அன்​புமணி மன்​னிப்பு கேட்ட சம்​பவம் அரசி​யல் வட்​டாரத்​தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்​ளது. பாமக​வில் அதன் நிறு​வனர் ராம​தாஸுக்​கும், கட்​சித் தலை​வர் அன்​புமணிக்​கும் இடையே மோதல் போக்கு நிலவி வரு​கிறது. இதற்​கிடையே, பாமக​வின் உறுப்​பினர் சேர்க்​கை, வாக்​குச் சாவடி குழுக்​கள் அமைப்பு உள்​ளிட்​டவை குறித்து விவா​திக்க முதல் மாவட்ட பொதுக்​குழு கூட்​டம் நேற்று திரு​வள்​ளூரில் … Read more

சைப்ரஸ், கனடா, குரேஷியா ஆகிய நாடுகளுக்கு 5 நாள் அரசுமுறை பயணம் புறப்பட்டார் பிரதமர் மோடி

புதுடெல்லி: அரசு​முறை பயண​மாக பிரதமர் மோடி நேற்று சைப்​ரஸ் நாட்​டுக்கு புறப்​பட்டு சென்​றார். சைப்​ரஸ், கனடா, குரேஷியா ஆகிய நாடு​களில் அவர் 5 நாள் பயணம் மேற்​கொள்​கிறார். ஜம்மு காஷ்மீரின் பஹல்​காமில் தீவிர​வா​தி​கள் நடத்​திய கொடூர தாக்​குதலில் 26 சுற்​றுலா பயணி​கள் கொல்​லப்​பட்​டனர். அதற்கு பதிலடி​யாக, பாகிஸ்​தானில் உள்ள விமானப்​படை தளங்​கள் மற்​றும் தீவிர​வாத முகாம்​கள் மீது இந்​தியா தாக்​குதல் நடத்​தி​யது. இதை தொடர்ந்​து, இந்​தி​யா​வின் பல்​வேறு கட்​சிகளை சேர்ந்த எம்​.பி.க்​கள் குழு​வினர் உலகின் பல்​வேறு நாடு​களுக்​கும் … Read more

சோனியா காந்தி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

புதுடெல்லி, கடந்த சில நாட்களுக்கு முன்னர், உயர் ரத்த அழுத்தம் காரணமாக இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். பிறகு, டெல்லி வந்து மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார். இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மீண்டும் டெல்லியிலுள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயிறு தொடர்பான பிரச்சினை காரணமாக மருத்துவமனையின் இரைப்பை சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏஎன் ஐ செய்தி நிறுவனம் … Read more

ஈரானில் உள்ள இந்தியர்களுக்காக உதவி எண்கள் அறிவிப்பு

தெஹ்ரான், ஈரானின் தெஹ்ரானில் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தலைமையகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் ராணுவத்தின் இந்த தாக்குதல் நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என பெயரிடப்பட்டுள்ளது. ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதேநேரம் இந்த தாக்குதல் மூலம் இஸ்ரேல் போர் பிரகடனம் செய்திருப்பதாக ஈரான் தெரிவித்து உள்ளது. இதையடுத்து இஸ்ரேலுக்கு எதிரான பதிலடியை ஈரானும் தொடங்கி உள்ளது. … Read more

முதல்போக பாசனத்துக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு: 45,041 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்

தேனி: ஆண்டிபட்டி அருகேயுள்ள வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள விளைநிலங்களின் முதல் போக பாசனத்திற்காக அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மூர்த்தி ஆகியோர் இன்று (ஜூன் 15) தண்ணீரை திறந்து வைத்தனர். தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முன்னதாகவே துவங்கியதால் வைகை அணையின் நீர்மட்டம் கணிசமாக உயரத்துவங்கியது. அணையின் மொத்தம் நீர்மட்டம் 71 அடியாக உள்ளநிலையில் தற்போது அணையின் நீர்மட்டம் 60 அடியை கடந்துள்ளது. இதையடுத்து பெரியாறு பிரதான கால்வாயின் கீழ் உள்ள இரு போக பாசன … Read more

ருத்ராஸ்திரா ட்ரோனை வெற்றிகரமாக பரிசோதனை செய்தது இந்திய ராணுவம்

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘ருத்ராஷ்ட்ரா’ என்ற ட்ரோனை இந்திய ராணுவம் நேற்று வெற்றிகரமாக பரிசோதனை செய்தது. இந்த ட்ரோனால் செங்குத்தாக மேலெழும்பி பறந்து சென்று, இலக்கை நெருங்கியதும் செங்குத்தாக தரையிறங்கி துல்லிய தாக்குதல் நடத்த முடியும். ‘ருத்ராஷ்ட்ரா’ என்ற ட்ரோனை சோலார் ஏரோஸ்பேஸ் அண்ட் டிபன்ஸ் லிமிடெட்(எஸ்டிஏஎல்) நிறுவனம் உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயார் செய்தது. இது செங்குத்தாக மேலெழும்பி மற்றும் தரையிறங்கும் திறன் படைத்தது. இந்த ஏவுகணை போக்ரானில் கள பரிசோதனைகளை வெற்றிகரமாக முடித்தது. பரிசோதனையில் 50 … Read more

காவிரி டெல்டா பாசனத்துக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்தார் முதல்வர் ஸ்டாலின்

காவிரி டெல்டா மாவட்டங்களின் குறுவை, சம்பா சாகுபடி பாசனத்துக்காக முதல்வர் ஸ்டாலின் நேற்று கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார். காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த சாகுபடிக்கு தேவையான தண்ணீர் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ம் தேதி திறந்து விடப்படுவது வழக்கம். அதன்படி, மேட்டூர் அணையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் கடந்த 12-ம் தேதி தண்ணீர் திறந்துவிட்டார். இந்த தண்ணீர் கரூர், … Read more