கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் உயிரிழப்பு – நடந்தது என்ன?
உத்தராகண்டின் கேதார்நாத் கோயில் அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் விமானி உட்பட 7 பேர் உயிரிழந்தனர். உத்தராகண்டில் சார்தாம் என்றழைக்கப்படும் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்திரி, யமுனோத்திரி ஆகிய புனித தலங்கள் அமைந்துள்ளன. இதில் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் அமைந்துள்ள கேதார்நாத் கோயில் 12 ஜோதிர்லிங்கங்களில் முதன்மையானது. சுமார் 1,000 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பனிக் காலத்தில் மூடப்பட்டிருக்கும். கோடைக்காலத்தில் 6 மாதங்கள் மட்டுமே திறந்திருக்கும். இந்த ஆண்டு கடந்த மே 2-ம் தேதி கேதார்நாத் கோயில் திறக்கப்பட்டது. … Read more