ரெட் அலர்ட் அறிவிப்பு எதிரொலி: ஊட்டியில் குறைந்த சுற்றுலா பயணிகள்

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் அதி கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்தது. வழக்கமாக வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுகிழமையன்று நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும். இந்நிலையில், ‘ரெட் அலர்ட்’ அறிவிப்பின் காரணமாக ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் சுற்றுலா பயணிகள் வருகையின்றி வெறிச்சோடி … Read more

புனே ஆற்றுப் பாலம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு – பலர் மாயம்

புனேவில் உள்ள இந்திரயானி ஆற்றின் மீது இருந்த இரும்புப் பாலம் இடிந்து விழுந்ததில் சுற்றுலா பயணிகள் பலர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. புனேவில் மாவல் தாலுகாவில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தலமான குண்ட்மாலாவில் உள்ள இரும்புப் பாலம் இடிந்து விழுந்த நேரத்தில், பாலத்தில் இருந்த சுற்றுலாப் பயணிகள் பலரும் பெருக்கெடுத்து ஓடிய ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். தேசிய … Read more

மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பிய 209 பெண் காவலர்களுக்கு விரும்பும் இடத்தில் பணி! முதல்வர் ஸ்டாலின்

சென்னை: மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்களுக்கு விரும்பும் இடத்தில் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு  அரசு உத்தரவிட்டு உள்ளது.  அதன்படி, இதுவரை 209 பெண் காவலர்களுக்கு அவர்கள் விரும்பிய பகுதிக்கு பணி மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். தமிழ்நாட்டில் காவல்துறையில் பணியாற்றி வரும் பெண் காவலர்கள்,  மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்களுக்கு அவர்கள் விரும்பும் மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு பணி ஒதுக்கப்படும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  ஏற்கனவே அறிவித்துள்ளார். அந்த … Read more

DNA மூலம் அடையாளம் காணப்பட்ட 19 உடல்கள்; 6-ம் தேதிக்கு பதில் 12-ம் தேதி பயணித்து இறந்த தம்பதி!

அகமதாபாத்தில் கடந்த 12ம் தேதி நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் 274 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் குஜராத் மாநிலம், ஆனந்த் நகரை சேர்ந்த 33 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனந்த் நகர் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் நகரம் என்று அழைக்கப்படுகிறது. ஆனந்த் நகரத்தை சேர்ந்த சன்னி படேலும், அவரது மனைவி மோனாலியும் லண்டனில் வசித்து வந்தனர். அவர்கள் அங்கு தொழில் செய்கின்றனர். அவர்கள் தங்களது இந்திய பயணத்தை முடித்துக்கொண்டு லண்டன் சென்றபோது விமான விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். … Read more

மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பணிச்சுமையை குறைக்க ஒருங்கிணைக்கப்பட்ட சர்வர் அமைக்க கோரிக்கை

சென்னை: மாநகர போக்குவரத்துக் கழகத்தில் தொழிலாளர்களின் பணிச்சுமையை குறைக்கும் வகையில் ஒருங்கிணைக்கப்பட்ட சர்வர் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக தொழிலாளர்கள் கூறியதாவது: மாநகர போக்குவரத்துக் கழகத்தில் ஆன்லைன், ஆஃப்லைன் முறையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒருங்கிணைக்கப்பட்ட சர்வர் (Centralised server) இல்லாததால் பணிமனை அளவிலும், தலைமை அலுவலக அளவிலும் பல பணிகள் மீண்டும் மீண்டும் செய்யப்பட்டு நேரமும், மனித உழைப்பும் வீணாகிறது. ஆன்லைனில் எடுத்துக் கொள்ள கூடிய தகவல்களை கூட எக்ஸல் மற்றும் … Read more

மணிப்பூர் மாநிலத்தில் நடந்த சோதனையில் 328 துப்பாக்கிகள், 10,600 குண்டுகள் மீட்பு

மணிப்பூர் மாநிலத்தில் நடந்த சோதனையில் 328 துப்பாக்கிகள், 10,600 குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி மற்றும் குகி பழங்குடியினத்தவர்கள் இடையே கடந்த 2023-ம் ஆண்டு மே 3-ம் தேதி மோதல் ஏற்பட்டது. இது வன்முறையாக மாறி பலர் கொல்லப்பட்டனர். அங்கு 2 ஆண்டுகளுக்கும் மேலாக அவ்வப்போது வன்முறை சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளன. போலீஸார் மற்றும் பாதுகாப்புப் படையினரிடமிருந்து கொள்ளை அடிக்கப்பட்ட துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை கலவரக்காரர்கள் வன்முறைக்கு பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், அனைத்து தரப்பினரும் … Read more

இஸ்ரேல் – ஈரானுக்கு இடையே தொடரும் தாக்குதல்கள்; யாருக்கு எவ்வளவு பாதிப்புகள்?

‘ஆபரேஷன் ரைஸிங் லயன்’ என்கிற பெயரில், கடந்த வியாழக்கிழமை (ஜூன் 12) நள்ளிரவில், ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கியது. இதற்கு எதிர்வினையாக, இஸ்ரேல் மீது ஈரானும் தாக்குதல் நடத்துகிறது. இந்தத் தாக்குதலுக்குப் பின்னணியே, ‘ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுப்பது’ ஆகும். இந்தத் தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறுகையில், ‘இஸ்ரேல் தனது உயிர் வாழ்தலுக்காகவும், தனக்கு இருக்கும் அச்சுறுத்தலை அகற்றுவதற்காகவும் இதை நடத்துகிறது’ என்று குறிப்பிட்டிருந்தார். ஈரானின் பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையகம், எண்ணெய்க் … Read more

கடத்தல் வழக்கு: பூவை ஜெகன்மூர்த்தி முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

சென்னை: கடத்தல் வழக்கில் புரட்சிப் பாரதம் கட்சி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்தி முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த அவசர வழக்கை நாளை (ஜூன் 16) விசாரிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார்.பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் இளைஞரின் சகோதரரை புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஜெகன்மூர்த்தி கடத்தியதாக புகார் எழுந்தது. … Read more

கேதார்நாத் அருகே ஹெலிகாப்டர் விபத்து – 7 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத்தில் இருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். உத்தராகண்ட் மாநிலத்தின் புனிதத்தலமான கேதார்நாத்தில் இருந்து ஒரு ஹெலிகாப்டர் இன்று குப்தகாஷிக்கு அதிகாலை 5.30 மணிக்கு கிளம்பியது. இந்த ஹெலிகாப்டர் அதிகாலை 6.00 மணியளவில் ருத்ரபிரயாகையை கடக்க முயன்றபோது பெரும் விபத்துக்குள்ளானது. ருத்ரபிரயாகின் கவுரிகுண்ட் வனப்பகுதியில் அந்த ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில், ஹெலிகாப்டர் விமானி, பயணிகள் என 7 பேர் பலியாகினர். இந்தத் தகவல் கிடைத்ததும், தேசிய பேரிடர் … Read more

இஸ்ரேலின் ‘அயன் டோம்’ வான் பாதுகாப்பு கவசம் செயல்படுவது எப்படி? 

இஸ்ரேல் நாட்டின் ‘அயன் டோம்’ வான் பாதுகாப்பு கவசத்தின் சிறப்புகள், வசதிகள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அந்த பாதுகாப்பு கவசத்தையும் மீறி இஸ்ரேலை ஈரான் ஏவுகணைகள் தாக்கியதும் கவனிக்கத்தக்கது. ஈரான் நாட்டின் அணுசக்தி திட்டங்கள் மற்றும் ராணுவத் தளபதிகளை குறிவைத்து இஸ்ரேல் நேற்று முன்தினம் காலை ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதில் 78 பேர் உயிரிழந்ததாகவும், 320 பேர் படுகாயமடைந்ததாகவும் ஈரான் ஐநா பிரதிநிதி தெரிவித்தார். ஈரானின் நடான்ஸ் அணுசக்தி செறிவூட்டும் … Read more