விமான விபத்து; விசாரணை வெளிப்படையாக நடைபெறும் – டாடா குழும தலைவர்

புதுடெல்லி, குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து நேற்று மதியம் 1.38 மணிக்கு லண்டன் புறப்பட்ட ‘ஏர் இந்தியா’ பயணிகள் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தின் ‘போயிங் 787-8 டிரீம்லைனர்’ விமானத்தில் மொத்தம் 242 பேர் இருந்தனர். இந்த கோர விபத்தில் 241 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயங்களுடன் உயிர் பிழைத்தார். விமானத்தில் இருந்த பயணிகளில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் இங்கிலாந்து நாட்டவர்கள், கனடாவை … Read more

டிஎன்பிஎல்: சேலத்திற்கு 178 ரன்கள் இலக்கு நிர்ணயித்த திருப்பூர்

சேலம் நடப்பு தமிழ்நாடு பிரீமியர் லீக் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அதில் சேலத்தில் இன்று நடைபெற்றுவரும் 9வது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ், ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இதில், டாஸ் வென்ற சேலம் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய திருப்பூர் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் துஷார் ரஹ்ஜா 28 பந்துகளில் 5 சிக்சர்கள், … Read more

தென்னாப்பிரிக்காவில் கனமழை, வெள்ளம்: 78 பேர் பலி

ஜோகன்ஸ்பெர்க், தென்னாப்பிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அம்மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. வீடுகளுக்குள் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். கனமழை, வெள்ளப்பெருக்கால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். கனமழையால் பலர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். கனமழையால் பல சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அந்நாட்டில் பெய்துவரும் … Read more

Border: நெதர்லாந்தில் தூங்கி, பெல்ஜியத்தில் விழிக்கும் மக்கள்; வீடுகளில் இருக்கும் எல்லை கோடுகள்!

இரு நாட்டின் எல்லைகள் என்றாலே, அங்கு பலத்த பாதுகாப்பும் பதற்றமும் இருக்கும். ஆனால் இங்கு உள்ள இரு நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள எல்லை கூலாக உள்ளது. கடைகள், வீடுகள், தெருக்களுக்கு இடையே எல்லைகள் பிரிகின்றன கேட்கவே ஆச்சரியமாக உள்ளது அல்லவா? பெர்லி என்ற நகரம் நெதர்லாந்துக்கும் பெல்ஜியமிற்கும் இடையே அமைந்துள்ளது. இந்த இருநாட்டுக்கு இடையேயான எல்லை, வெள்ளை கோடு மூலம் பிரிக்கப்பட்டுள்ளது. அதில் இருக்கும் பல ஹோட்டல்கள், வீடுகள் இந்த கோட்டில் உள்ளது. பாதி கஃபேகள் பெல்ஜியத்திலும் … Read more

கோயிலுக்கு சொந்தமான இடத்தில் உடல்களை அடக்கம் செய்ய கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: கோயிலுக்கு சொந்தமான இடத்தில், இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யக் கூடாது என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. திருச்செந்தூரைச் சேர்ந்த எஸ்.வெங்கடேஷ், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “திருச்செந்தூர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில், இறந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்படுகின்றன. கோயில் இடத்தை அடக்க ஸ்தலமாக பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியகிளாட் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி … Read more

மேகாலயா தேனிலவு கொலை வழக்கு: ராஜா ரகுவன்சியை கொல்ல 3 முறை முயற்சி – போலீஸார் அதிர்ச்சி தகவல்

ஷில்லாங்: மேகாலயாவுக்கு தேனிலவு கொண்டாட சென்ற இடத்தில் கணவனை கூலிப்படை வைத்து மனைவி கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கணவனை கொலை செய்ய அவர் ஏற்கெனவே மூன்று முறை முயற்சித்துள்ளது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால், நான்காவது முயற்சியில் கணவரின் கதையை திட்டமிட்டபடி அவரது மனைவி காதலனுடன் சேர்ந்து முடித்துள்ளார் இதுகுறித்து கிழக்கு காசி ஹில்ஸின் காவல் கண்காணிப்பாளர் விவேக் சையம் கூறியதாவது: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த … Read more

"சமீப காலத்துல என்னை ரொம்ப பாதிச்ச படம்..!" – பி.சி. ஸ்ரீராம் | Ananda Vikatan Cinema Awards 2024

கடந்தாண்டு தமிழ் சினிமாவில் வெளியான நல்ல படைப்புகளின் மூலமாக நமக்குத் திறமையான பல நடிகர்களும், இயக்குநர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் கிடைத்திருக்கிறார்கள். மேலும், பல மூத்த கலைஞர்களும் கடந்தாண்டு வெளியான படைப்புகளில் ஜொலித்திருந்தனர். அப்படியான கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில், வருடந்தோறும் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழா நடைபெறும். அந்த வரிசையில், கடந்த 2024-ம் ஆண்டுக்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள் இன்று சென்னையில் நடைபெறுகிறது. தேனி ஈஸ்வர் இதில், 2024-ம் ஆண்டுக்கான சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை, வாழை … Read more

7 மாதமாக பெண் போலீசாரை ஆபாசமாக படம் பிடித்து ஆசைக்கு இணங்குமாறு மிரட்டல் – போலீஸ்காரர் கைது

மூணாறு, கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியார் பகுதியில் போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணி புரியும் பெண் போலீஸ் ஒருவர் வண்டிப்பெரியார் மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், “வண்டிப்பெரியார் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் பெண் போலீசார் உடை மாற்றவும், கழிவறை செல்லவும் போலீஸ் குடியிருப்பு பகுதியில் ஒரு கழிவறையை பயன்படுத்தி வந்தனர். அந்த கழிவறையில் 4 ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண் போலீசார் உடை மாற்றும் … Read more

டிஎன்பிஎல்: சேலம் அணி பந்து வீச்சு தேர்வு

சேலம், தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 9ஆவது ஆட்டம் சேலத்தில் இன்று நடக்கிறது. இதில் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ்- சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் சேலம் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. 1 More update தினத்தந்தி Related Tags : டிஎன்பிஎல்  சேலம்  TNPL 2025  Salem 

ஆமதாபாத் விமான விபத்து: சீன அதிபர் ஜின்பிங் இரங்கல்

பீஜிங், ஆமதாபாத்தில் இருந்து நேற்று முன்தினம் லண்டன் கிளம்பிய விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விழுந்து ெநாறுங்கியது. இதில் விமானத்தில் இருந்தவர்கள் உள்பட சுமார் 265 பேர் கொல்லப்பட்டனர். உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள இந்த விபத்து தொடர்பாக சர்வதேச தலைவர்கள் இரங்கல் வெளியிட்டு உள்ளனர். அந்தவகையில் சீன அதிபர் ஜின்பிங்கும் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடிக்கு தனது அனுதாபத்தை தெரிவித்து இருக்கிறார். அவர் தனது … Read more