ஊழலற்ற ஆட்சி உலகில் எங்கும் கிடையாது: திருமாவளவன் கருத்து

திருச்சி: உலகில் ஊழலற்ற ஆட்சி என்பது எங்கும் கிடையாது. ஆட்சி அதிகாரம் இருக்கும் இடத்தில் ஊழல் இருக்கும். ஆனால், அதைவிட மதவாதம், சாதியவாதம் தீங்கானது. அதைத்தான் முதலில் வீழ்த்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார். வக்பு திருத்த சட்டத்தை கண்டித்தும், மத்திய அரசு சிறுபான்மையினர் விரோதப் போக்குடன் நடந்து கொள்வதாகக் கூறியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சியில் இன்று (ஜூன் 14) மாலை பேரணி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க … Read more

தலா ரூ.1 கோடி இழப்பீடு அறிவித்த டாடா குழுமம்; போயிங் நிறுவனத்துக்கு நெருக்கடியா?

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என்று டாடா குழுமம் அறிவித்துள்ளது. குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. வியாழக்கிழமை ஏற்பட்ட இந்த பயங்கர விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட விமானத்தில் சென்ற 241 பேர் உயிரிழந்தனர். தரையில் விழுந்த விமானம், மருத்துவ கல்லூரி விடுதியில் மோதியதில், மருத்துவ … Read more

ஈரான் – இஸ்ரேல் போர்: ஒதுங்கி செல்லும் உலக நாடுகள்!

இதோ… மற்றும் ஒரு போர். ஈரான் நாட்டின் அணு ஆயுதக் களங்களின் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது. அணு ஆயுதத் தயாரிப்பின் முக்கிய அங்கமான ‘யுரேனியம் செறிவூட்டல்’ பணி மேற்கொள்ளப்படும் இடங்களில் முக்கியமான ‘நடான்ஸ்”, குறிவைத்துத் தாக்கப் பட்டுள்ளது. ஈரான் நாட்டின் ராணுவத் தலைமைத் தளபதி மற்றும் அணு விஞ்ஞானிகள், தாக்குதலில் கொல்லப்பட்டு விட்டதாக செய்திகள் கூறுகின்றன. ஈரான் மேற்கொண்டு வரும் அணு ஆயுதத் தயாரிப்பு முயற்சிகள் இறுதிக் கட்டத்தை எட்டி இருப்பதாய் இஸ்ரேல் நம்புகிறது; … Read more

'புரோட்டா கடை வைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை'- பால சரவணன் | Ananda Vikatan Awards

திறமையான திரைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில் வருடந்தோறும் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழா நடைபெற்று வருகிறது. அந்தவகையில் 2024-ம் ஆண்டிற்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள் இன்று( ஜூன் 13) சென்னை டிரேட் சென்டரில் நடைபெற்று வருகிறது. இந்த ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழாவில் , சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதை `லப்பர் பந்து’, `இங்கு நான்தான் கிங்கு’ படங்களில் நடித்ததற்காக, நடிகர் பால சரவணன் பெற்றுக்கொண்டார். அவருக்கு ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் விருதை வழங்கினார். … Read more

விமான விபத்து நடந்த பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பகவத் கீதை

காந்தி நகர், குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து நேற்று மதியம் 1.39 மணியளவில் ஏர் இந்தியா விமானம் இங்கிலாந்தின் லண்டனுக்கு புறப்பட்டது. அந்த விமானத்தில் 230 பயணிகள் 10 பணியாளர்கள், 2 விமானிகள் என மொத்தம் 242 பேர் பயணித்தனர். புறப்பட்ட சில நிமிடங்களில் விமான நிலையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருத்துவ கல்லூரி மாணவர் விடுதி மீது விமானம் விழுந்து வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 241 … Read more

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: தென் ஆப்பிரிக்காவுக்கு 282 ரன்கள் இலக்கு

லண்டன், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா – தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 212 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. ஸ்டீவன் சுமித், வெப்ஸ்டர் அரைசதம் அடித்தனர். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா தொடக்க நாளில் 4 விக்கெட்டுக்கு 43 ரன்களுடன் ஊசலாடியது. கேப்டன் பவுமா (3 ரன்), டேவிட் பெடிங்ஹாம் (8 ரன்) களத்தில் … Read more

பிரான்ஸ் வெளியுறவுத்துறை மந்திரியுடன் ஜெய்சங்கர் சந்திப்பு

பாரிஸ், இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஐரோப்பிய நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்தியாவின் நிலைப்பாட்டை தெரிவிக்க அவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நேற்று பிரான்ஸ் சென்றார். அவர் அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்தார். இதனை தொடர்ந்து இன்று அவர் பிரான்ஸ் வெளியுறவுத்துறை மந்திரி ஜீன் நியல் பெரொட்டை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, … Read more

வானிலை முன்னறிவிப்பு: நீலகிரிக்கு ரெட் அலர்ட், 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

சென்னை: நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், கோவை, நெல்லை மாவட்ட மலைப் பகுதிகள், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை (ஜூன் 14) கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வடக்கு கர்நாடகம், தெலங்கானா மற்றும் ஆந்திரப் பகுதிகளின் மேல் … Read more

விஜய் ரூபானியின் கடைசி புகைப்படமும், மருத்துவ மாணவர்களுக்கு நேர்ந்த துயரமும்

இந்தியாவில் உள்ள தங்கள் குடும்பத்தினர், நண்பர்களை சந்தித்துவிட்டு, பல்வேறு பகுதிகளை சுற்றிப் பார்த்துவிட்டு மகிழ்ச்சியான அனுபவங்களுடன் லண்டன் புறப்பட்ட பயணிகள் மற்றும் குஜராத்தில் படிக்கும் 10 மருத்துவ மாணவர்கள் உயிரிழந்துவிட்டனர். அவர்களின் எதிர்கால கனவுகளை தீக்கிரையாக்கியது துரதிருஷ்டவசமான விமான விபத்து. குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் கடைசி புகைப்படம்: அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் கடைசி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை சக … Read more

ஈரான் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்

ஈரான் நாட்டின் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் மீண்டும் புதிய தாக்குதல்களை நடத்தியுள்ளது. முன்னதாக வெள்ளிக்கிழமை ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது வான்வழி தாக்குதலை தொடுத்தது இஸ்ரேல். இதில் தெஹ்ரான் நகரில் உள்ள குடியிருப்புகள் உட்பட பல்வேறு கட்டிடங்கள் சிதிலமடைந்தன. இந்த தாக்குதலை அடுத்து ஈரான் வான்வெளி மூடப்பட்டது. இதை ஈரான் நாட்டின் அரசு ஊடக நிறுவனமான ஐஆர்என்ஏ உறுதி செய்தது. மேலும் அந்நாட்டின் ராணுவ தளங்கள் மற்றும் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக … Read more