வேட்பாளர் படிவங்களில் கையெழுத்திட பழனிசாமிக்கு அதிகாரமில்லை: புகழேந்தி

சென்னை: அதிமுக சார்பில் மாநிலங்களவை வேட்பாளர்களின் ஏ மற்றும் பி படிவங்களில் பழனிசாமி கையெழுத்திட்டது தவறு. அதற்கு அவருக்கு அதிகாரமில்லை என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்குக்கு புகழேந்தி மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட 2 வேட்பாளர்களின் மனுக்களில், ஏ மற்றும் பி படிவத்தில் அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமி கையெழுத்திட்டதை ஏற்க கூடாது. மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பு குழுவைச் சேர்ந்த வா.புகழேந்தி தலைமை தேர்தல் … Read more

ராணுவத்துக்கு ரூ.30,000 கோடி மதிப்பில் வான்வழி பாதுகாப்பு: ஏவுகணைகள் வாங்க திட்டம்

புதுடெல்லி: இந்திய ராணுவத்துக்கு ரூ.30,000 கோடி மதிப்பில் அதி விரைவு வான் பாதுகாப்பு ஏவுகணைகளை (க்யூஆர் – எஸ்ஏஎம்) வாங்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் விரைவில் ஒப்புதல் அளிக்கவுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பாகிஸ்தான் பதில் தாக்குதலில் இறங்கியபோது தரைவழி தாக்குதலைவிட வான் வழி தாக்குதல்தான் அதிகமாக இருந்தது. இந்தியா மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் அனுப்பிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் எல்லாம் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டன. இவற்றில் பெரும்பாலனவை துருக்கி மற்றும் சீன ட்ரோன்கள். இவற்றை உள்நாட்டு … Read more

பாஜக இயக்கும் எடுப்பார் கைப்பிள்ளை விஜய் : ஜவாஹிருல்லா விமர்சனம்

மதுரை மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார். இன்று மதுரையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம் “ஜூலை 6 ஆம் மனிதநேய மக்கள் கட்சி இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் பேரணி & மாநாடு நடைபெறுகிறது, இஸ்லாமியர்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும், வக்ஃபு திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநாடு நடைபெறுகிறது. இந்தியாவில் 15 சதவீத இஸ்லாமியர்கள் உள்ளன. ஆனால், சதவீதத்துக்கு … Read more

கீழடி விவகாரம்: தமிழ்நாடு அரசு ஏன் ஒத்துழைக்கத் தயங்குகிறது..? – மத்திய மந்திரி கேள்வி

புதுடெல்லி, மத்திய கலாசாரத் துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் அவர்களே, நாங்கள் எந்த அறிக்கையையும் வெளியிட சிறிதும் தயங்கவில்லை. உண்மையில், இதுபோன்ற ஆராய்ச்சிகள், அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால், நாங்களும் தங்களுடன் சேர்ந்து பெருமைகொள்வோம். ஆனால் இன்றைய அறிவியல் உலகின் ஏற்றுக்கொள்ளலுக்கு, எங்களுக்கு இன்னும் அறிவியல்பூர்வமான, வலுவான ஆதாரங்கள் தேவை. அதனால்தான், அகழ்வாராய்ச்சி தரவுகளை அரசியலாக்க அவசரப்படுவதற்குப் பதிலாக, அறிவியல் பூர்வமான கூடுதல் தரவுகள் கிடைக்கும் அளவிற்கு ஆராய்ச்சியினை … Read more

ஐ.சி.சி டி20 தரவரிசை: முதலிடத்தை நெருங்கும் அடில் ரஷித்

துபாய், இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நடந்து முடிந்துள்ள நிலையில், சர்வதேச டி20 வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி இன்று வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் முதலிடத்திலும், இந்திய வீரர் அபிஷேக் சர்மா இரண்டாம் இடத்திலும் நீடிக்கும் நிலையில், மற்றொரு இந்திய வீரர் திலக் வர்மா ஒரு இடம் முன்னேறி மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார். இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை … Read more

தைவானில் 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தைபே, தைவானின் கிழக்கு கடற்கரையில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 30.9 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இதனால் தலைநகர் தைபேவில் கட்டிடங்கள் குலுங்கின. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் தைவானில் சுனாமி ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுவதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. 1 More update தினத்தந்தி Related … Read more

‘பாமக பதவியில் கே.பாலு தொடர்வார்’ – ராமதாஸ் நடவடிக்கைக்கு எதிராக தீர்மானம்

சென்னை: பாமக வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவையின் தலைவராக வழக்கறிஞர் கே.பாலு தொடர்வார் எனவும், புரவலராக அன்புமணி ராமதாஸ் நியமிக்கப்படுவதாகவும் வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவையின் சிறப்புச் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவையின் சிறப்புச் செயற்குழுக் கூட்டம் சென்னையில் இன்று (ஜூன் 11) புதன்கிழமை மாலை 4.00 மணிக்கு நடைபெற்றது. பேரவையின் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட அறங்காவலர்கள், மாவட்ட செயலாளர்கள், மாவட்டத் தலைவர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் … Read more

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின் 11 ஆண்டுகள் – அஸ்வினி வைஷ்ணவ்

கடந்த 11 ஆண்டு கால மோடி தலைமையிலான ஆட்சி குறித்து ரயில்வே, தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எழுதிய கட்டுரையின் முழு வடிவம்… ஒரு புதிய பாரதம் உருவாகிறது – இங்கு வளர்ச்சி என்பது உள்நாட்டு மொத்த உற்பத்தியால் (ஜிடிபி) அளவிடப்படுவதில்லை. கவுரவம் மற்றும் வாய்ப்புகளால் அளவிடப்படுகிறது. கடப்பாவைச் சேர்ந்த அன்னம் லட்சுமி பவானி சணல் பை தயாரிக்கும் அலகை தொடங்குவதற்கு முத்ரா கடன் பெற்றார். ஹரியானாவில் உள்ள ஜக்தேவ் சிங், செயற்கை … Read more

பாதுகாப்புக்கான பட்ஜெட்டை 20 சதவீதம் உயர்த்தியது பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா தீவிர தாக்குதல் நடத்தியது. இந்தநிலையில், ராணுவத்தை வலுப்படுத்த ஏதுவாக அதற்கான பட்ஜெட்டை பாகிஸ்தான் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் பாகிஸ்தானின் ஒட்டுமொத்த கடன் 270 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது. ஆனால், ஒட்டுமொத்த செலவினம் 7 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நிதியமைச்சர் முகமது அவுரங்கசீப் கூறுகையில், “ கடந்த 2023-ம் ஆண்டிலேயே கடனை திருப்பிச் செலுத்த … Read more

நான் அதிமுக வுக்கு பிரசாரம் செய்வேன் : டிடிவி தினகரன்

புதுக்கோட்டை நான் அதிமுக வுக்கு பிராசாரம் செய்வேன் என அமமுக தலைவர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். அடுத்த ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு தேர்தல் வியூகங்களை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. பா.ஜ.க. கூட்டணியில் உள்ள அ.ம.மு.க. கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் புதுக்கோட்டையில் … Read more