இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | June 29 | Astrology | Bharathi Sridhar | Today Rasi palan |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர். Source link

தமிழகத்துக்கு திமுக வேண்டாம் என்பதே பாஜக-அதிமுக கூட்டணியின் நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் திட்டவட்டம்

திமுக இனி தமிழகத்துக்கு வேண்டாம் என்பதே எங்கள் கூட்டணியின் நிலைப்பாடு என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். நெல்லை சுத்தமல்லி பகுதியில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்துக்கு திமுக இனி வேண்டாம் என்பதை எங்கள் கூட்டணியின் நிலைப்பாடு. இதை மக்கள் பிரதிபலிப்பார்கள். நிச்சயம் திமுக இனி ஆட்சிக்கு வர முடியாது. டாக்டர் ராமதாஸை, செல்வப்பெருந்தகை சந்தித்தது குறித்து … Read more

பிரதமர் மோடி 5 நாடுகள் பயணம்: பிரேசில் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கிறார்

பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்காக ஜூலை 2 முதல் 9 வரை 5 நாடுகளில் பயணம் மேற்கொள்கிறார். இப்பயணத்தில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்ரிகா உள்ளிட்ட நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட பிரிக்ஸ் அமைப்பின் 17-வது உச்சி மாநாடு பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஜூலை 6,7 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற உள்ளார். இதற்கான பயணத்தில் … Read more

இன்று 11வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது உங்கள் பத்திரிகை டாட் காம்!

டிஜிட்டல் புரட்சியின் வளர்ச்சியால் இன்று உள்ளங்கையில் உலகமே சுழலும் நிலையில், அதே தொழில்நுட்ப உதவியுடன் உங்கள் பத்திரிகை டாட் காம் செய்தி இணையதளமும், இன்று 11வது ஆண்டில் நுழைந்துள்ளது. இணைய செய்தி இணையதளங்களில் தனக்கென தனிபானியுடன் அரசியல் விருப்பு வெறுப்பின்றி வாசகர்கள் ஆதரவுடன் 11வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது உங்கள் பத்திரிகை டாட் காம் (Patrikai.Com) . கடந்த 2015ம் ஆண்டு இதே நாளில் (ஜுன் 29) தொடங்கப்பட்ட பத்திரிகை டாட் காம் இணையதளம், மெல்ல மெல்ல … Read more

“அதிமுகவுக்குள் மோதலை உருவாக்கி கட்சியை காலி செய்ய பாஜக முயற்சி” – முத்தரசன்

திண்டுக்கல்: “தற்போது அதிமுக, பாஜக கூட்டணியில் தேமுதிக, பாமக உள்ளிட்ட யாரும் இல்லை. அவர்களின் கூட்டணி கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். திண்டுக்கல்லில் இன்று (ஜூன் 28) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “தமிழகத்தில் பாஜக, அதிமுக கூட்டணி ஆட்சிதான் நடைபெறும். முதல்வராக அதிமுகவை சேர்ந்தவர்கள் இருப்பார்கள். அது யார் என்பதை அவர்களே முடிவு செய்வார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். … Read more

அரசியலமைப்பு முகவுரையில் இருந்து 'மதச்சார்பின்மை’ வார்த்தையை நீக்க வேண்டும்: அசாம் முதல்வர்

கவுகாத்தி: அரசியலமைப்பின் முகவுரையில் இருந்து ‘மதச்சார்பின்மை’ மற்றும் ‘சோசலிசம்’ ஆகிய வார்த்தைகளை நீக்க வேண்டும் என அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா வலியுறுத்தியுள்ளார். கவுகாத்தியில் உள்ள மாநில பாஜக தலைமையகத்தில் ‘தி எமர்ஜென்சி டைரீஸ்: இயர்ஸ் தட் ஃபோர்ஜ் எ லீடர்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கலந்துகொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஹிமந்த பிஸ்வா சர்மா, “இன்று, அவசர நிலையின்போது ஏற்பட்ட போராட்டம் மற்றும் எதிர்ப்பு பற்றிப் … Read more

சாம்சங் கேலக்சி எம்36 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் கேலக்சி எம்36 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புது புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். இந்நிறுவனத்தின் கேலக்சி சீரிஸ் … Read more

"கட்டா குஸ்தி 2, விஷ்ணு விஷாலுடன் இணைந்து 3 படங்கள்" – தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கொடுத்த அப்டேட்

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான ஐசரி கணேஷின்  வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நெஷனல் தயாரிப்பு நிறுவனம் 2025 to 2027 இரண்டு ஆண்டுகளுக்கான தங்களது அடுத்த 10 படங்களின் இயக்குநர்கள் பட்டியலை வெளியிட்டிருந்தது. அந்தப் பட்டியலில் சுந்தர் சி, வெற்றிமாறன், மாரி செல்வராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், `96′, `மெய்யழகன்’ இயக்குநர் பிரேம்குமார், `2018 – Everyone Is A Hero’ மலையாள திரைப்பட இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப், `கனா’, நெஞ்சுக்கு நீதி இயக்குநர் அருண்ராஜா … Read more

அரசுப் பள்ளிகளில் “வாட்டர் பெல்” நேரம்! பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் சுற்றறிக்கை

சென்னை: தமிழ்நாடு முழுவதும், அரசு பள்ளிகளில் அரசுப் பள்ளிகளில் “வாட்டர் பெல்” நேரம் விட வேண்டும் என அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். ஏற்கனவே இந்த திட்டம் கேரளா, கர்நாடகா உள்பட சில மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது தமிழ்நாட்டிலும் செயல்படுத்த உத்தர விடப்பட்டு உள்ளது. அதன்படி இந்த திட்டம் ஜுலை முதல் அமலுக்கு வருகிறது. அரசு பள்ளிகளில், வாட்டர் பெல் பயன்படுத்தி மாணவர்கள் தண்ணீர் குடிக்க … Read more

`RAW' உளவு அமைப்பின் தலைவராக பராக் ஜெயின் நியமனம்; `ஆபரேஷன் சிந்தூரில் முக்கியப் பங்காற்றியவர்'

இந்தியாவின் ‘Secretary of the Research and Analysis Wing’ என்றழைக்கப்படும் ‘RAW’ உளவு அமைப்பின் தலைவராகப் பதவி வகித்துவரும் ரவி சின்ஹாவின் பதவிக்காலம் இந்த மாதம் ஜூலை 30-ம் தேதியோடு நிறைவடைகிறது. இதையடுத்து இதன் தலைவராக பராக் ஜெயின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 1989‑ஆம் ஆண்டில் இந்திய காவல் பணியில் (IPS) பஞ்சாப் கேடரில் பணியாற்றியவர். காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து பாகிஸ்தான் – இந்திய எல்லைப் பகுதியில் தீவிரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட … Read more