நாளை திருநெல்வேலியில் மின்தடை

நெல்லை நாளை திருநெல்வேலியில் சில பகுதிகளின் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது/ திருநெல்வேலி நகர்ப்புற கோட்டம் செயற்பொறியாளர் , பழையபேட்டை மற்றும் பொருட்காட்சிதிடல் துணை மின் நிலையத்தில் நாளை (11.6.2025, புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பின்வரும் இடங்களில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. அதன்படி திருநெல்வேலி டவுன், மேல ரதவீதி மேல் பகுதிகள், தெற்கு ரதவீதி தெற்கு பகுதிகள், … Read more

பெங்களூரு கூட்ட நெரிசல் விவகாரம்; சஸ்பெண்ட் ஆன ஐ.பி.எஸ். அதிகாரி மத்திய அரசிடம் மேல்முறையீடு

பெங்களூரு, 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி.) அணியினருக்கு சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பாராட்டு விழா நடந்தது. இதை காண ரசிகர்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்பட்டது. லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு 5 பெண்கள், 6 ஆண்கள் என மொத்தம் 11 பேர் உயிரிழந்தனர். 56 பேர் காயம் அடைந்தனர். இந்த துயர சம்பவத்துக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாததும், … Read more

ஐ.சி.சி.யின் 'ஹால் ஆப் பேம்' பட்டியலில் இணைந்த எம்.எஸ் தோனி

துபாய், சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சாதித்த வீரர், வீராங்கனைகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ‘ஹால் ஆப் பேம்’ என்ற பட்டியலில் இணைத்து கவுரவம் அளித்து வருகிறது. அதன்படி அந்த கவுரவமிக்க பட்டியலில் புதிதாக 7 வீரர்களை சேர்த்து ஐசிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி, ஆஸ்திரேலியாவின் முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ ஹைடன், சவுத் ஆப்பிரிக்காவின் ஹாசிம் ஆம்லா, கிரேம் ஸ்மித் மற்றும் நியூசிலாந்தின் டேனியல் வெட்டோரி … Read more

அமெரிக்கா: போராட்டத்தின்போது பெண் செய்தியாளர் மீது போலீஸ் துப்பாக்கி சூடு

வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு நிர்வாகத்தில் பல்வேறு-அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அதன்படி அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்ற கொள்கையை கடைபிடிக்கும் அவர், சட்ட விரோதமாக குடியேறியவர்கள் அந்நாட்டைவிட்டு வெளியேறவும் உத்தரவிட்டார். இதனையடுத்து அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு பல உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனாலும் ஜனாதிபதி டிரம்ப் தனது முடிவில் உறுதியாக இருக்கிறார். இதையடுத்து நாடு முழுவதும் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிய குடியேற்ற அதிகாரிகளுக்கு … Read more

‘இந்து தமிழ் திசை’ செய்தி வெளியிட்ட நிலையில் தமிழகத்தில் போலீஸ் எஸ்ஐ-க்கான போட்டி தேர்வு தள்ளிவைப்பு

சென்னை: தமிழக காவல்துறையில் உதவி ஆய்வாளர் பணிக்கு வரும் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், 1,299 காவல் உதவி ஆய்வாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 4-ம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இதையடுத்து, சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர். வழக்கமாக காவல் துறையில் 2-ம் நிலை, முதல்நிலை மற்றும் தலைமைக் காவலர்களாக பணியில் உள்ளவர்களும் உதவி ஆய்வாளர் … Read more

உ.பி. கோயிலில் ம.பி. நீதிபதியின் தாலி சங்கிலி திருட்டில் 10 பெண்கள் கைது

மதுரா: உத்தர பிரதேச மாநிலம் மதுரா நகரில் உள்ள கோயிலுக்கு வந்த பெண் நீதிபதியிடம் தாலி சங்கிலி திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, 10 பெண்கள் கொண்ட திருட்டு கும்பலை போஸீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதுகுறித்து காவல் துறை கண்காணிப்பாளர் ஷ்லோக் குமார் கூறியுள்ளதாவது: மத்திய பிரேதச மாநிலம் உஜ்ஜைனில் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாக பணியாற்றுபவர் பிரேமா சாகு. இவர், பிருந்தாவனில் உள்ள ஸ்ரீ ராதா கிருஷ்ணா கோயிலுக்கு குடும்பத்துடன் சாமி … Read more

தவெக வில் இணைந்த முன்னாள் ஐ ஆர் எஸ் அதிகாரிக்கு முக்கிய பொறுப்பு

சென்னை தவெக கட்சியில் இணைந்த  முன்னாள் ஐ ஆர் எஸ் அதிகாரி அருண் ராஜுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு மற்றும் செயல்திட்டங்களை மேம்படுத்தும் வகையில் டாக்டர் K.G. அருண்ராஜ் Ex IRS., கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர் (Propaganda & Policy General Secretary) பொறுப்பில் நியமிக்கப்படுகிறார். இவர், எனது உத்தரவு மற்றும் ஆலோசனைக்கு இணங்க  கட்சி பொதுச் செயலாளர் என்.ஆனந்தின் வழிகாட்டுதலின்படி, … Read more

ஆக்சியம்-4 விண்கலம் ஜூன் 11ம் தேதி ஒத்திவைப்பு

புதுடெல்லி, அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஆக்சியம் ஸ்பேஸ் என்னும் தனியார் நிறுவனத்தின் ஆக்சியம் -4 நான்காவது மனித விண்வெளி பயணம் நாளை மறுநாள் ஜூன் 10ம் தேதி திட்டமிடப்பட இருந்தது. இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா மற்றும் 3 விண்வெளி வீரர்கள் என மொத்தம் 4 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்தநிலையில், வானிலை காரணமாக ஆக்சியம்-4 விண்கலம் ஏவுவது ஜூன் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நாசா, இஸ்ரோ … Read more

விஜய் சங்கர், ஸ்வப்னில் சிங் அதிரடி… சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 212 ரன்கள் குவிப்பு

கோவை, 9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் முதற்கட்ட லீக் சுற்று ஆட்டங்கள் கோவையில் உள்ள எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும் 6-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் ஆடி வருகின்றன. … Read more

இத்தாலியில் கைவிடப்பட்ட எண்ணெய் கப்பலில் இருந்த 50 அகதிகள் கைது

ரோம், ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் ஏராளமானோர் ஐரோப்பிய நாடுகளில் குடியேற விரும்புகின்றனர். இதற்காக பெரும்பாலும் சட்ட விரோத படகு பயணத்தையே தேர்ந்தெடுக்கின்றனர். அவற்றில் பல பயணங்கள் ஆபத்தில் முடிகிறது. இதனை கட்டுப்படுத்த எல்லையோர பகுதியில் ஐரோப்பிய நாடுகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றன. இந்தநிலையில் இத்தாலி கடற்பகுதி அருகே கைவிடப்பட்ட எண்ணெய் கப்பல் ஒன்று நின்று கொண்டிந்தது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் தங்கி இருந்தனர். கடலோர போலீசார் அங்கு சென்று விசாரித்தபோது அவர்கள் லிபியாவில் … Read more