தவெக மற்றும் தவாக இடையே கடும் போஸ்டர் யுத்தம்

விழுப்புரம் நடிகர் விஜய்யின் தவெக மற்றும் வேல்முருகனின் தவாக ஆகிய கட்சிகள் இடையே போஸ்டர் யுத்தம் கடுமையாகி உள்ளது. அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அரசு பொதுத்தேர்வுகளில் சாதித்த மாணவ, மாணவிகளுக்கு அக்கட்சி தலைவர் நடிகர் விஜய் பரிசுகளை வழங்கி பாராட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. விஜய் நடத்திய அந்த நிகழ்ச்சியில் ஹார்டின், அம்பு விடுவது போன்ற நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருந்ததை தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் விமர்சித்து பேசியிருந்தார்.  எனவே இரு கட்சி நிர்வாகிகளிடையே … Read more

சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்த டாக்டர் கைது

லக்னோ, உத்தரபிரதேசம் மாநிலம் முசாபர்நகர் அருகே போபா கிராமத்தை சேர்ந்தவர் விர்பால் ஷெராவத். டாக்டரான இவர் அங்கு கிளீனிக் அமைத்து சிகிச்சை அளித்து வருகிறார். மேலும் விர்பால் பா.ஜனதா கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ளதாக தெரிகிறது. இந்தநிலையில் அப்பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் தனது 15 வயது தம்பியுடன் சிகிச்சைக்காக விர்பாலின் கிளீனிக்குக்கு சென்றார். அப்போது அந்த இளம்பெண்ணை விர்பால் பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் இதனை தடுக்க முயன்ற தம்பியை அடித்து உதைத்தார். மேலும் … Read more

கால்பந்து நட்சத்திர வீரர் நெய்மாருக்கு கொரோனா தொற்று உறுதி

பிரேசிலியா, பிரேசில் நாட்டை சேர்ந்த கால்பந்து விளையாட்டின் நட்சத்திர வீரர் நெய்மார். பாரீஸ் செயின்ட்-ஜெர்மைன் மற்றும் பார்சிலோனா அணிக்காக விளையாடிய அனுபவம் கொண்ட இவர், சான்டோஸ் கால்பந்து அணிக்காக விளையாடி வருகிறார். எனினும், காயம் ஏற்பட்டு 2 ஆண்டுகளாக அவர் சரிவர விளையாட முடியாமல் இருந்து வருகிறார். இந்நிலையில், நெய்மாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனை, சான்டோஸ் கால்பந்து அணி வெளியிட்ட அறிக்கை உறுதி செய்துள்ளது. கடந்த வியாழக்கிழமை அவருக்கு அறிகுறிகள் ஏற்பட்டன. இதனால், அணியின் … Read more

அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவன்: சிகிச்சைக்கு உதவுமாறு முதல்-அமைச்சருக்கு பெற்றோர் கோரிக்கை

சார்ஜா, சார்ஜாவில், அரிய வகை தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் தமிழக சிறுவனுக்கு உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் செயலிழந்து வரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே, அவரது மருத்துவ சிகிச்சைக்கு உதவுமாறு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். சார்ஜாவில் திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலைச் சேர்ந்த ஜகுபர் மற்றும் ஜாஸ்மின் தம்பதியினர் வசித்து வருகின்றனர். ஜகுபர் துபாய் அரசு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் ஆகிய … Read more

டிக்கெட் பரிவர்த்தனை தோல்வியடைந்தால் பயணிகளுக்கு அரை மணி​ நேரத்தில் பணம் திரும்ப வரும்

சென்னை: பேருந்துகளில் பயணச்சீட்டுக்கான டிஜிட்டல் பரிவர்த்தனை தோல்வியடைந்தால், அரை மணி நேரத்தில் பயணியின் வங்கி கணக்கில் பணத்தை திருப்பி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு சில்லறை என்பது பெரும் பிரச்சினையாக உள்ளது. இதையடுத்து, யுபிஐ, கிரெடிட், டெபிட் கார்டுகள் போன்றவற்றை பயன்படுத்தும் வகையிலான பயணச்சீட்டு கருவிகளை பாரத ஸ்டேட் வங்கி உதவியுடன் கொள்முதல் செய்ய போக்குவரத்து கழகங்கள் திட்டமிட்டன. … Read more

ஆர்சிபி கொண்டாட்டத்துக்கு கர்நாடக அரசே ஏற்பாடு: உயர் நீதிமன்றத்தில் கிரிக்கெட் சங்கம் முறையீடு

பெங்களூருவில் ஆர்சிபி அணி வெற்றி கொண்டாட்ட நிகழ்வுக்கு கர்நாடக அரசே ஏற்பாடு செய்தது. இதில் எங்களை பலிகடாவாக ஆக்க முயற்சிப்பது அநீதியானது என கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி அணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஏற்பாடு செய்த வெற்றி விழாவில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். 64 பேர் … Read more

மணிப்பூர்: பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்திய 3 ஊடுருவல்காரர்கள் கைது

புதுடெல்லி, மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதத்தில் மெய்தி மற்றும் குகி என இரு குழுவினருக்கு இடையே மோதல் வெடித்தது. இது வன்முறையாக பரவியதில் இரு தரப்பிலும் 240 பேர் கொல்லப்பட்டனர். வன்முறையை தொடர்ந்து, 60 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றனர். இதனை தொடர்ந்து, ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும், சிலர் வன்முறையில் ஈடுபடும் சம்பவங்களும் தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில், மணிப்பூரில் பாதுகாப்பு … Read more

டிஎன்பிஎல்: திண்டுக்கல் அணியை வீழ்த்தி திருப்பூர் வெற்றி

கோவை, 9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர், கோவையில் உள்ள எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். இந்த தொடரில் இன்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்- திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற திருப்பூர் அணியின் கேப்டன் சாய் … Read more

கொலம்பியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு

வாஷிங்டன் அமெரிக்க புவி ஆய்வு மையம் தெரிவித்ததாவது: தென்அமெரிக்க நாடான கொலம்பியாவில் இன்று பொகோட்டா அருகே 10 கிலோமீட்டர் (6.2 மைல்) ஆழத்தில் 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி காலை 9:08 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, மேலும் இது மத்திய கொலம்பியா முழுவதும் உணரப்பட்டதாக தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்ததால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த … Read more

வேலூர் அடுத்த தீர்த்தகிரி முருகன் கோயிலில் உலகின் 3-வது உயரமான முருகன் சிலை பிரதிஷ்டை

வேலூர் அடுத்த புதுவசூர் தீர்த்தகிரி வடிவேல் சுப்பிரமணிய சுவாமி கோயில் மலை மீது 92 அடி உயரத்தில் முருகன் சிலை நிறுவப்பட்டு நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. வேலூர் அடுத்த ரங்காபுரத்தை யொட்டியுள்ள சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வெங்கடாபுரம் அடுத்த புதுவசூர் என்ற இடத்தில் 500 அடி உயர தீர்த்தகிரி மலை உள்ளது. இந்த மலையில் பழமையான வடிவேல் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயில் முன்பு 92 அடி உயரத்தில் உலகிலேயே … Read more