தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் பேசி முடிவு செய்யப்படும்: திடீர் பயணமாக சென்னை வந்த ராமதாஸ் தகவல்

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு பாஜகவிடம் இருந்து கூட்டணி அழைப்பு வரவில்லை. யாருடன் கூட்டணி என்பது குறித்து பேசி முடிவு செய்யப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். பாமகவில் அதன் நிறுவனர் ராமதாஸ், கட்சியின் தலைவர் அன்புமணி இடையே அதிகாரப்போட்டி நிலவி வருகிறது. இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இருதரப்பிலும் சமாதான பேச்சுவார்த்தையை, கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினர் நடத்தி வருகின்றனர். தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு வரவுள்ள நிலையில், உட்கட்சி பிரச்சினையை … Read more

சூட்கேஸில் பெண் சடலம் வழக்கு: 48 மணி நேரத்தில் குற்றவாளி கைது

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் பட்டப்பகலில் அனாதையாய் கிடந்த ஒரு சூட்கேஸில் பெண்ணின் சடலம் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கில் 48 மணி நேரத்தில் குற்றவாளியை போலீஸார் கைது செய்துள்ளனர். ஹைதராபாத் பாலாநகர் அருகே உள்ள பூச்சுபல்லி எனும் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன் அனாதையாய் ஒரு சூட்கேஸ் கிடந்தது. அதிலிருந்து துர்நாற்றம் வந்ததால், பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில், பாலாநகர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அந்த சூட்கேஸில் சுமார் 30 … Read more

அரியநாச்சி அம்மன் திருக்கோயில், புதுக்கோட்டை. ,  தமிழ்நாடு

அரியநாச்சி அம்மன் திருக்கோயில், புதுக்கோட்டை. ,  தமிழ்நாடு தல சிறப்பு : சோழர்களால் கட்டப்பட்ட கோயில். பொது தகவல் : கோயிலில் மகா மண்டபம் அமைந்துள்ளது. மற்றும் கோயில் பிரகாரத்தில காவல் தெய்வங்கள் அமைந்துள்ளன. தலபெருமை : இங்கே, தன்னை நாடி வருவோருக்கெல்லாம் அருளையும், பொருளையும் வாரி வழங்கும் அன்னையாகத் திகழ்கிறாள் அரியநாச்சி அம்மன். செவ்வாய் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்ந்து அம்மனைத் தரிசித்துப் பிரார்த்திக்கும் பக்தர்கள் ஏராளம் ஆடி மாதம் வந்துவிட்டால், செவ்வாய் வெள்ளி என்றில்லாமல் தினமும் … Read more

தொழில்நுட்பக் கோளாறு; சாலையில் அவசரமாக தரையிறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு

டேராடூன், உத்தரகாண்ட் மாநிலத்தில் கேதர்நாத் யாத்திரைக்கு சென்ற 5 பயணிகளை ஏற்றிக்கொண்டு பராசு பகுதியில் இருந்து இன்று மதியம் 12.52 மணிக்கு ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டது. கேதர்நாத் செல்வதற்கு சுமார் 45 முதல் 50 நிமிடங்கள் வரை இந்த ஹெலிகாப்டர் பயணம் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், புறப்பட்ட சில நிமிடங்களில் ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானி அந்த ஹெலிகாப்டரை சாலையின் நடுவே அவசரமாக தரையிறக்கினார். அதில் இருந்த 5 பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். விமானிக்கு சிறு … Read more

டி.என்.பி.எல்.: திருச்சியை வீழ்த்தி நெல்லை ராயல் கிங்ஸ் வெற்றி

கோவை, 9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் கோவையில் உள்ள எஸ்.என்.ஆர் கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெற்ற 3வது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் – திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற நெல்லை அணியின் கேப்டன் அருண் கார்த்திக் பந்துவீச்சை தேர்வு செய்தார் . அதன்படி முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் அடித்தது. நெல்லை தரப்பில் கடைசி … Read more

டிரம்ப் குறித்த சர்ச்சைக்குரிய பதிவை நீக்கிய எலான் மஸ்க்

வாஷிங்டன், அமெரிக்க அதிபராக 2-வது முறையாக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், நிர்வாக ரீதியாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக அமெரிக்க அரசு நிர்வாகத்தில் செலவு குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் டாஜ்(DOGE) துறையில் தலைமை ஆலோசகராக டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை இயக்குநரும், தொழிலதிபருமான எலான் மஸ்க்கை நியமித்தார். இவருடைய ஆலோசனையின் பேரில், அமெரிக்க அரசு பணிகளில் ஆட்குறைப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது. மேலும் சர்வதே அளவில் அமெரிக்க அரசு சார்பில் பல்வேறு … Read more

தொகுதி மறுவரையறை அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்த வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த வேண்டும். மாநில அரசுகள் மற்றும் கட்சிகளை கலந்து பேசாமல், மத்திய அரசு எந்த முடிவையும் எடுக்கக் கூடாது என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: மாநிலத்துக்கு மாநிலம் பாஜக மதவாத அரசியல் வடிவத்தை மாற்றி கையிலெடுக்கும். வட இந்தியாவில் விநாயகர், ராமர் அரசியலையும், மேற்கு வங்கத்தில் துர்கா, காளி அரசியலையும் முன்னெடுக்கிறார்கள். தமிழகத்தில் முருகனை கையில் … Read more

உறுதியான ஆதாரங்கள் இல்லாமல் இந்தியா தாக்குதல் நடத்தியிருக்காது: அமெரிக்காவில் சசி தரூர் விளக்கம்

புதுடெல்லி: உறுதியான ஆதாரங்கள் இல்லாமல் இந்தியா, பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்காது என்பதை மிகத் தெளிவாகக் கூறுகிறேன் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யுமான சசி தரூர் தெரிவித்தார். பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர்ப் பதற்றம் நிலவியது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மூலம் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத கட்டமைப்புகள் மீது இந்திய ராணுவப் படைகள் தாக்குதல் நடத்தி அழித்தது. இந்நிலையில் ‘ஆபரேஷன் … Read more

அசாம்: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 23 பேர் பலி

கவுகாத்தி, அசாமில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், அசாம் மாநில பேரிடர் மேலாண் கழகம் வெளியிட்டு உள்ள செய்தியில், நடப்பு ஆண்டில் வெள்ளத்திற்கு 17 பேர் பலியானார்கள். நிலச்சரிவில் சிக்கி 6 பேர் பலியாகி உள்ளனர் என தெரிவித்து உள்ளது. கவுகாத்தியில் நிலச்சரிவில் சிக்கி இன்று ஒருவர் பலியானார். கம்ரூப் மாவட்டத்தின் சந்திராப்பூர் பகுதியில் வெள்ள நீரில் மூழ்கி மற்றொருவர் பலியானார். வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இன்று … Read more

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: பரபரப்பான ஆட்டத்தில் சபலென்காவை வீழ்த்தி கோகோ காப் சாம்பியன்

பாரீஸ், ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் நம்பர் 1 வீராங்கனையான அரினா சபலென்கா (பெலாரஸ்), கோகோ காப் (அமெரிக்கா) உடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் 2 செட்டுகளை ஆளுக்கொன்றாக கைப்பற்றினர். இதனால் 3-வது செட் பரபரப்புக்குள்ளானது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற 3-வது செட்டை கோகோ காப் கைப்பற்றினார். பரபரப்பான … Read more