சாலை விபத்தில் தம்பதி உயிரிழப்பு – மகனின் திருமண அழைப்பிதழ் கொடுத்துவிட்டு திரும்பியபோது சோகம்

பிஜ்னோர், உத்தரபிரதேசத்தின் பிஜ்னோர் மாவட்டத்தில் மகனின் திருமண அழைப்பிதழ் கொடுத்துவிட்டு பைக்கில் வீடு திரும்பிய தம்பதி சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குப் சிங் (62 வயது) – லலிதேவி (56 வயது) தம்பதியின் மகனுக்கு வருகிற 9-ந்தேதி திருமணம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் உறவினர்களுக்கு மகனின் திருமண அழைப்பிதழை கொடுத்துவிட்டு இருவரும் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். நாகினா – தாம்பூர் சாலையில் வந்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் அவர்கள் … Read more

இறுதிப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும்..? – யோக்ராஜ் சிங் கணிப்பு

மும்பை, 10 அணிகள் பங்கேற்றிருந்த 18-வது ஐ.பி.எல். தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது. அதன்படி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணியளவில் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. ஐ.பி.எல். வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்லாததால் முதல் கோப்பையை வெல்லப்போகும் அணி … Read more

இஸ்ரேல் தாக்குதல்: பாலஸ்தீனியர்கள் 14 பேர் பலி

காசா, இஸ்ரேல் மீது காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, 2023ம் ஆண்டு அக்டோபரில் தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து, ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இஸ்ரேல்- ஹமாஸ் இடையே நடக்கும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா நீண்ட முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் காசா பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர், அதில் பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் … Read more

தமிழகத்தில் மழை வாய்ப்பு குறைந்துள்ள நிலையில் மீண்டும் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு

தமிழகத்தில் மழை வாய்ப்பு குறைந்துள்ள நிலையில், வெப்பநிலை மீண்டும் உயரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த 24-ம் தேதி தொடங்கியது. இதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. வானமும் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பநிலையும் குறைந்தது. எங்கும் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டவில்லை. இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது மழை வாய்ப்பு குறைந்துள்ளதால், வெப்பநிலை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதுகுறித்து … Read more

ஒடிசா அரசு அதிகாரி வீட்டில் ரூ.2.5 கோடி ரொக்கம் பறிமுதல்: ரூ.500 நோட்டுகளை ஜன்னல் வழியாக வீசினார்

புவனேஸ்வர்: ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் மூத்த அரசு அதிகாரி பைகுந்த நாத் சாரங்கியின் வீடுகளில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. அப்போது ரூ.2.5 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. லஞ்ச வழக்கில் இருந்து தப்பிக்க 500 ரூபாய் நோட்டுகளை ஜன்னல் வழியாக அவர் அள்ளி வீசினார். ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் ஊரக வளர்ச்சி துறையின் தலைமை அலுவலகம் செயல்படுகிறது. அந்த அலுவலகத்தில் சாலை திட்ட தலைமை பொறியாளராக பைகுந்த நாத் சாரங்கி பணியாற்றி வருகிறார். அவர் அதிகமாக லஞ்சம் … Read more

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இருமடங்காக அதிகரிப்பு..! கல்வித்துறை தகவல்

சென்னை: சென்னையில் செயல்பட்டு  மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இருமடங்காக  அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும்  தனியார் பள்ளிகளின் எண்ணிக்கையும், தனியார் பள்ளிகள் மீதான மோகம்  அதிகரித்து   வந்தாலும், அரசு வழங்கும் பல்வேறு சலுகைகள் காரணமாக, அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.  அரசுப் பள்ளிகளில் தங்களது பிள்ளைகளை சேர்க்க பெற்றோர் அதிக ஆர்வம் காட்டி வருகின்றர். மேலும் ஆசிரியர்களும் வீடு வீடாக சென்று மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி வருகின்றனர். மேலும், … Read more

டெல்லி: திரவுபதி முர்முவுடன் பராகுவே ஜனாதிபதி சந்திப்பு

புதுடெல்லி, பராகுவே நாட்டின் அதிபர் சான்டியாகோ பெனா பலாசியோஸ் இந்தியாவில் 3 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவர் இந்தியாவில் டெல்லி, மும்பை நகரங்களில் பயணம் மேற்கொள்கிறார். இதற்காக டெல்லி பாலம் விமான நிலையத்தில் இன்று வந்திறங்கிய அவரை மத்திய இணை மந்திரி ஹர்ஷ வர்தன் மல்கோத்ரா நேரில் சென்று வரவேற்றார். இதன்பின்னர், அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பிரதமர் மோடியை நேரில் சந்தித்து இருதரப்பு உறவுகள் பற்றி ஆலோசனை மேற்கொண்டார். … Read more

ஐ.பி.எல்.: மழை காரணமாக இறுதிப் போட்டி கைவிடப்பட்டால் என்ன நடக்கும்…?

அகமதாபாத், 10 அணிகள் பங்கேற்றிருந்த 18-வது ஐ.பி.எல். தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடரின் இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ளது. அதன்படி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நாளை இரவு 7.30 மணியளவில் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்நிலையில் இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. போட்டி நடைபெறும் சமயத்தில் மழை … Read more

சிறுமிக்கு பாலியல் தொல்லை; இந்திய வம்சாவளி நபருக்கு சிறை தண்டனை

சிங்கப்பூர், சிங்கப்பூரில் வசித்து வருகிறார் 27 வயதான மார்க் ஜஸ்டின் லாண்ட்ரியோ சந்திரமோகன். இவர் இந்திய வம்சா வளியாவார். இவர் சிங்கப்பூரை சேர்ந்த ஒரு 16 வயது பெண்ணிடம் பாலியல் ரீதியாக துன்புறித்தியதாகவும் வீடியோ எடுத்து வைத்து மிரட்டி பணம் பறித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தை நாடினார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் பாதிக்கப்பட்ட பெண்ணைத் தவிர, சந்திரமோகன் மேலும் இருவருடன் பாலியல் தொல்லை கொடுத்து … Read more

உயர் நீதிமன்றத்தில் புதிய நீதிபதி பதவியேற்பு

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இருந்து மாறுதலாகி வந்துள்ள ஹேமந்த் சந்தன்கவுடர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நேற்று பதவியேற்றுக் கொண்டார். கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த ஹேமந்த் சந்தன் கவுடரை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இடமாறுதல் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி சென்னை உயர் நீதிமன்றம் வந்த அவருக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் சேர்த்து உயர் நீதிமன்றத்தில் பணியில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்தது. … Read more