வங்கதேசத்துடனான கங்கை நீர் பகிர்வை மாற்றி அமைக்க மத்திய அரசு பரிசீலனை

புதுடெல்லி: வங்கதேசத்துடன் செய்து கொண்ட கங்கை நீர் பகிர்வு ஒப்பந்தத்தை மாற்றியமைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. சிந்து நிதி நீரை பகிர்ந்து கொள்ள இந்தியா – பாகிஸ்தான் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக அந்த ஒப்பந்தத்தை நிறுத்துவதாக மத்திய அரசு அறிவித்தது. இதனால் பாகிஸ்தானில் வறட்சி ஏற்படும். வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. வங்கதேசத்துடன் இந்தியா கடந்த 1996-ம் … Read more

யுரேனியம் செறிவூட்டலை கைவிட்டால் ஈரானுக்கு பல சலுகை: அமைதி பேச்சுவார்த்தையில் அமெரிக்கா மும்முரம்

யுரேனியம் செறிவூட்டுவதை ஈரான் நிறுத்தினால், அணுமின்சக்தி திட்டத்தில் 30 பில்லியன் டாலர் முதலீடு , தடைகள் நீக்கம், வெளிநாட்டு வங்கிகளில் முடக்கப்பட்ட பணம் விடுவிப்பு உட்பட பல சலுகைகளை அளிக்க அமெரிக்கா முன்வந்துள்ளது. மின்சார உற்பத்திக்கு மட்டுமே அணுசக்தியை பயன்படுத்துவோம் என கூறிவந்த ஈரான், அணு ஆயுதம் தயாரிக்க யுரேனியம் செறிவூட்டும் பணியை தொடங்கியது. இதை தடுத்து நிறுத்துவதற்காக ஈரான் அணு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி வந்தது. இது தொடர்பாக அமெரிக்கா- ஈரான் … Read more

Phoenix: "ரொம்ப வீக்கா ஃபீல் பண்ணினேன்…" – மனம் திறந்த சூர்யா சேதுபதி!

நடிகர் விஜய் சேதுபதி மகன் சூர்யா சேதுபதி நடிப்பில் அனல் அரசு இயக்கியுள்ள பீனிக்ஸ் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய சூர்யா சேதுபதி, “இந்த 2 வருஷ ப்ராசஸ்ல, நிறைய சர்ச்சைகள், ஷூட்டிங், படம் ரிலீஸ் ஆகுமான்னு வந்த பிரச்னைகள் எல்லாத்துல இருந்தும் ஒன்னொன்னு கத்துகிட்டோம். ஒவ்வொன்னையும் பாடமா எடுத்துகிட்டது எனக்கு சந்தோஷமா இருந்தது.  சூர்யா சேதுபதி இந்த பிரஸ், என்னுடைய சக நடிகர்கள், குடும்பம், நண்பர்கள்தான் நான் இன்னைக்கு இங்க … Read more

வாக்குறுதியை நிறைவேற்றாத முதல்வர் ஸ்டாலினிடம் நீதி கேட்கும் போராட்டம்! பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு…

சென்னை:   சட்டசபை தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத  முதல்வர் ஸ்டாலினிடம் நீதி கேட்கும் போராட்டம் நடத்தப்போவதாக பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 2021 ‘சட்டசபை தேர்தலின்போது பகுதிநேர ஆசிரியர்களை நிரத்தரம் செய்வோம் என வாக்குறுதியளித்து, இதுவரை நடவடிக்கை எடுக்காத முதல்வர் ஸ்டாலின் கவனத்தை   ஈர்க்கும் வகையில் நீதி கேட்கும் போராட்டம் நடத்தவுள்ளோம்’ என தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது. இதுகுறித்து கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார்  வெளியிட்டுள்ள அறிவிப்பில்,   கடந்த 2021 தேர்தலின்போது, ‘தி.மு.க., … Read more

Guru Mithreshiva: "இந்த 3 மந்திரங்களை பின்பற்றினால் போதும்…" – இதயவியல் வல்லுநர் சொக்கலிங்கம்

ஆன்மிக குரு, யோகா நிபுணர் மற்றும் எழுத்தாளர் என்று பன்முகம் கொண்ட குரு மித்ரேஷிவா எழுதியுள்ள பணவாசம், கருவிலிருந்து குருவரை, உனக்குள் ஒரு ரகசியம் ஆகிய நூல் வெளியீட்டு விழா சென்னை சர்.பிட்டி தியாகராஜர் அரங்கில் நடைபெற்றது. நூல் வெளியீட்டு விழா இந்த விழாவில் பேசிய இதயவியல் வல்லுநர் மருத்துவர் சொக்கலிங்கம் , “இந்த சொக்கலிங்கம் 80 வயதுவரை ஒரு மாத்திரைக் கூட சாப்பிட்டதில்லை. அதற்காக நீங்கள் உங்கள் மருந்துகளை நிறுத்திக்கொள்ளாதீர்கள். நான் என்னை குருவுடன் இணைத்துக்கொள்ள காரணம், … Read more

அருப்புக்கோட்டை கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்ட இயந்திர யானை ‘கஜா' – நடிகை திரிஷா வழங்கினார்

அருப்புக்கோட்டை: தமிழகத்திலேயே முதல்முறையாக அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு கோயிலுக்கு “கஜா” என்ற இயந்திர யானையை நடிகை திரிஷா வழங்கியுள்ளார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அஷ்டலிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் மற்றும் அஷ்டபுஜ ஆதிசேஷ வராகி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இதன் கும்பாபிஷேக விழா ஜூலை 2-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், இக்கோயிலுக்கு இயந்திர யானை ஒன்றை நடிகை திரிஷா மற்றும் சென்னையைச் சேர்ந்த பீப்புல் ஃபார் கேட்டில் இன் இந்தியா என்ற தன்னார்வ … Read more

காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை: மேலும் 3 பேர் சுற்றிவளைப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் தொலைதூர பசந்த்கர், பிஹாலி வனப் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக அதிகாரிகளுக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ராணுவம் மற்றும் போலீஸ் படையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டை மேற்கொண்டனர். இதில் 4 தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார். வனப் பகுதிக்குள் சிக்கிய எஞ்சிய 3 பேர் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக ஜம்மு போலீஸ் ஐஜி பீம் சென் துதி கூறுகையில், “இந்த … Read more

Phoenix: "வளர்த்துகிட்டே இருக்கிறது இல்ல புள்ள" – மகன் குறித்து நெகிழ்ந்த விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடிப்பில் உருவான பீனிக்ஸ் – வீழான் திரைப்படத்தின் ஆடியோ லான்ச் சென்னையில் நடைபெற்றது. “என் பையன் விஷயங்களை அவன்தான் முடிவு செய்யணும்” இதில் கலந்துகொண்டு மகன் பற்றிப் பேசிய விஜய் சேதுபதி, “2019ல் அனல் அரசு என்கிட்ட கதை சொன்னாரு. ரொம்பநாள் கழிச்சு பாத்துகிட்டதால என்னுடைய குடும்ப புகைப்படங்களைக் காட்டினேன். அவரும் அவரது குடும்ப புகைப்படங்களைக் காட்டினார். பின்னர் ஜவான் பாடப்பிடிப்பில் சந்தித்தபோது இதைப் பற்றி பேசினோம். மகாராஜாவில் எனக்காக … Read more

திருப்பதி,  சீனிவாசமங்காபுரம்,  கல்யாண வேங்கடேச பெருமாள் ஆலயம்

திருப்பதி,  சீனிவாசமங்காபுரம்,  கல்யாண வேங்கடேச பெருமாள் ஆலயம். திருவிழா: மாசியில் பிரம்மோற்ஸவம் 9 தினங்கள் நடக்கிறது. புரட்டாசியில் பவித்ரோத்ஸவமும், வைகுண்ட ஏகாதசியும் சிறப்பானவை. சனிக்கிழமைகளில் பெருமாள் தேவியரோடு மாடவீதியில் உலா வருகிறார். தல சிறப்பு: கருவறையில் பெருமாள் மூன்று கோலங்களில் காட்சி தருகிறார். நடுநாயகமாக சீனிவாசப் பெருமாளாக நின்ற கோலத்திலும், வலப்புறம் லட்சுமி நாராயணராக அமர்ந்த கோலத்திலும், இடப்புறம் ரங்கநாதராக சயன கோலத்திலும் பெருமாள் இருப்பது இத்தலத்தின் மிகப்பெரிய சிறப்பம்சம். பொது தகவல்: திருமலையில் இருக்கும் பெருமாளை … Read more

பேருந்துகளில் சாகசத்துக்காக படிக்கட்டில் பயணிக்கும் மாணவர்கள் மீது வழக்கு: போலீஸாருக்கு கோர்ட் உத்தரவு

மதுரை: பேருந்துகளில் சாகசத்துக்காக படிக்கட்டில் நின்றும், தொங்கியபடியும் பயணம் செய்யும் மாணவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், அரசு ஐடிஐ, பாலிடெக்னிக் மற்றும் அரசுக் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம். இதற்காக … Read more