நாட்டின் பாதுகாப்பு ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கசியவிட்ட கடற்படை ஊழியர் கைது

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் காவல் துறை தலைவர் (சிஐடி-பாதுகாப்பு) விஷ்ணு காந்த் குப்தா கூறியதாவது: டெல்லி கடற்படை தலைமையகத்தில் உள்ள கப்பல்துறை இயக்குநரகத்தில் எழுத்தராக (யுடிசி) விஷால் யாதவ் பணியாற்றி வருகிறார். ஹரியாணாவின் ரேவாரியைச் சேர்ந்த இவர், இந்திய பெண்போல தன்னை காட்டிக் கொண்டு பாகிஸ்தான் பெண் ஒருவருக்கு ராணுவ ரகசியங்களை கசிய விட்டுள்ளார். பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்கள் பற்றிய … Read more

அரக்கோணம் அருகே தண்டவாளம் உடைந்ததால் தடம் புரண்ட மின்சார ரயில் 

ராணிப்பேட்டை: சென்னையில் இருந்து காட்பாடி சென்ற மின்சார ரயில் அரக்கோணம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. 9 பெட்டிகள் கொண்ட அந்த ரயில் சித்தேரி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட நிலையில் மூன்றாவது பெட்டி தண்டவாளத்தை விட்டு இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. தண்டவாளம் உடைந்திருப்பதை கண்டு ரயிலை சாமர்த்தியமாக நிறுத்திய ஓட்டுநரால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஓட்டுநர் அளித்த தகவலின் … Read more

தண்டவாளத்தில் கார் ஓட்டிய பெண் கைது: 2 மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிப்பு

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் ஒரு பெண் தனது காரை ரயில் தண்டவாளத்தின் மீது ஓட்டியதால், அந்த மார்க்கத்தில் சுமார் 2 மணி நேரம் வரை ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. லக்னோவை சேர்ந்தவர் ரவிகா சோனி (33). ஹைதரபாத்தில் ஒரு சாஃப்ட் வேர் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் வைரல் செய்வது வழக்கம். சமீபத்தில் இவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ரீல்ஸ் மோகத்தால் ரவிகா சோனி, ரங்காரெட்டி மாவட்டம், நாகலபல்லி – … Read more

₹430 கோடி செலவில் திருமணம்… 90 தனி ஜெட் விமானங்கள் 30 படகுகள் என வெனிஸ் நகரை அதிரவைத்த ஜெஃப் பெசோஸ் -லாரன் சான்செஸ்

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் மற்றும் பத்திரிகையாளர் லாரன் சான்செஸ் ஆகியோருக்கு வெனிஸ் நகரில் நடைபெற உள்ள திருமணம் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய திருமணம் விழா என்று அழைக்கப்படுகிறது. இந்த திருமண நிகழ்ச்சியின் பெரும்பகுதி யாருக்கும் தெரியாத வகையில் பார்த்துக்கொள்ளப்பட்டுள்ளது. இருந்தபோதும், இந்த திருமண நிகழ்ச்சிக்காக ₹430 கோடி செலவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த திருமணத்தில், ஹாலிவுட் நடிகர்கள், பிரபல பாடகர்கள், விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்கள் அரசியல்வாதிகள், அரச குடும்பத்தினர் என உலகின் பல முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு … Read more

Guru Mithreshiva: "கனவுகளை அழிக்கும் கல்விமுறை" – பாரதி பாஸ்கர் பேச்சு!

ஆன்மிக குரு, யோகா நிபுணர் மற்றும் எழுத்தாளர் என்று பன்முகம் கொண்ட குரு மித்ரேஷிவா எழுதியுள்ள பணவாசம், கருவிலிருந்து குருவரை, உனக்குள் ஒரு ரகசியம் ஆகிய நூல் வெளியீட்டு விழா சென்னை சர்.பிட்டி தியாகராஜர் அரங்கில் நடைபெற்றது. நூல் வெளியீட்டு விழா பாரதி பாஸ்கர் பேச்சு மேடையில் வீற்றிருக்கும் அனைத்து விருந்தினர்களையும் சுவாரசியமாக ரத்தின சுருக்குமாக அறிமுகப்படுத்தி தனது உரையை ஆரம்பித்த பாரதி பாஸ்கர் களைப்புடன் துவங்கும் திங்கள் காலையை துள்ளி குதித்து ஆரம்பிப்பது எப்படி என்ற மனநிலையை … Read more

அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக எப்போது உத்தரவு? – தேர்தல் ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட் அறிவுறுத்தல்

அதிமுக உள்கட்சி விவகாரம் மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக விசாரணை நடத்தி, எப்போது உத்தரவு பிறப்பிக்கப்படும் என்பது குறித்து தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது உள்ளிட்ட பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்கக்கூடாது என்றும், அதிமுக உள்கட்சி விவகாரம் முடிவுக்கு வரும்வரை கட்சிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கூடாது என்றும் கோரி, தேர்தல் ஆணையத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் சூரியமூர்த்தி, வா.புகழேந்தி, ராம்குமார் … Read more

கதாகாலட்சேபம் செய்பவர் மீதும் உ.பி.​யில் 2 வழக்குகள் பதிவு

புதுடெல்லி: உத்தரபிரதேசத்தில் கதாகாலட்சேபம் செய்பவர் தாக்கப்பட்ட விவகாரம் ஒரே நாளில் தலைகீழாக மாறியுள்ளது. இவர் ஒரு பெண்ணை பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாகவும், பிராமணர் என பொய் கூறி மோசடி செய்ததாகவும் இரு வழக்குகள் பதிவாகி உள்ளன. உ.பி.யின் அவுரய்யா நகரை சேர்ந்த முகுந்த்மணி சிங் யாதவ், கடந்த 15 வருடங்களாக கதாகாலட்சேபம் செய்து வருகிறார். இவர், ராமாயணம், மகாபாரதம் தொடர்பான கதாகாலட்சேபங்களில் பிரபலமானவர். இவர், எட்டாவா மாவட்டத்தின் தந்தர்பூர் கிராமத்துக்கு கதாகாலட்சேபம் செய்ய அழைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை … Read more

இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று நீலகிரி மற்றும்  கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் , ”மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 27-06-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட … Read more

இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | June 28 | Astrology | Bharathi Sridhar | Today Rasi palan |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர். Source link

ஒற்றை உள்நுழைவு மூலம் 9 வலைதளங்கள் ஒருங்கிணைப்பு: அமைச்சர் பிடிஆர் தகவல்

பொதுமக்களுக்கு பாதுகாப்பான, ஒருங்கிணைந்த சேவைகளை வழங்க ஒற்றை உள்நுழைவு தளம் மூலம் 9 அரசு வலைதளங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாநில அரசு துறைகளில் மென்பொருள் பயன்பாட்டை முறைப்படுத்தி, ஒருங்கிணைந்த அங்கீகாரத்தை வழங்குவதற்காக, தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் கீழ் தமிழ்நாடு ஒற்றை உள்நுழைவு தளம் (சிங்கிள் சைன்-ஆன்) கடந்த 2023-24 நிதியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தளமானது பல பயனாளிகள் தங்களது … Read more