சிறுநீரால் கண்களை கழுவும் பெண்ணின் வீடியோ வைரல்: மருத்துவர்கள் எச்சரிக்கை

புனே: புனேவைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கண்களை சிறுநீரால் கழுவும் வீடியோவை பதிவிட்டிருந்த நிலையில், பலரும் அவரின் செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். புனேவைச் சேர்ந்தவர் நூபுர் பிட்டி. இவர் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்த வீடியோ மருத்துவ உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்தப் பெண் தினமும் காலையில் தனது சிறுநீரில் கண்களை கழுவுவதாக தெரிவித்துள்ளார். அதோடு, அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், ‘Urine Eye Wash — Nature’s Own Medicine’ என்ற தலைப்பில் … Read more

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்காததால் எஸ்சிஓ கூட்டறிக்கையில் கையெழுத்திட இந்தியா மறுப்பு

குயிங்தவோ: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) கூட்டறிக்கையில் கையெழுத்திட இந்தியா மறுத்துவிட்டது. இதனால் கூட்டறிக்கை வெளியிடப்படவில்லை. கடந்த 2001-ம் ஆண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் சீனா, ரஷ்யா, இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான், ஈரான், பெலாரஸ் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. எஸ்சிஓ அமைப்பின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மாநாடு சீனாவின் குயிங்தவோ நகரில் கடந்த 25, 26-ம் தேதிகளில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பில் பாதுகாப்புத் துறை … Read more

தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழை! சென்னை வானிலை மையம்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு  பல மாவட்டங்களில் மிதமான மழைக்கான வாய்ப்பு உள்ளது என  சென்னை வானிலை மையம்  தெரிவித்து உள்ளது.  தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், ஜூலை 2ம் தேதி வரை மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. வங்கக்கடலில் 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு வங்கக்கடல் மற்றும அதனை ஒட்டிய வடக்கு ஒடிசா- மேற்கு … Read more

இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | June 27 | Astrology | Bharathi Sridhar | Today Rasi palan |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர். Source link

“மதுரையில் நடந்தது மோடி பக்தர்கள் மாநாடு” – திருமாவளவன்

திருச்சி: “மதுரையில் நடைபெற்றது முருக பக்தர்கள் மாநாடு அல்ல, மோடி பக்தர்கள் மாநாடு” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சிக் தலைவர் திருமாவளவன் கூறினார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் இன்று (ஜூன் 26) கூறியதாவது: “வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை பற்றி தற்போது எந்தப் பிரச்சினையும் இல்லை. நாங்கள் பேச்சுவார்த்தையில் அதை பார்த்துக் கொள்வோம். பாஜக, பாமக இருக்கும் கூட்டணியில் நாங்கள் இருக்க மாட்டோம் என்ற கொள்கையில் உறுதியாக உள்ளோம். திரையுலகில் போதை … Read more

‘தேசத்தில் பெரும்பாலானோர் பேசும் இந்தியை முற்றிலுமாக புறக்கணிக்க முடியாது’ – சரத் பவார்

மும்பை: தேசத்தில் பெரும்பாலானோர் இந்தி மொழி பேசி வருவதால் அதை முற்றிலுமாக நாம் புறக்கணிக்க முடியாது. ஆனால், 5-ம் வகுப்புக்கு மேல் மாணவர்கள் விரும்பினால் அந்த மொழியை கற்பிக்கலாம் என மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர் சரத் பவார் கூறியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 வகுப்புகளுக்கு மூன்றாவது மொழியாக, இந்தி கட்டாயம் என அம்மாநிலத்தில் ஆட்சியில் உள்ள பாஜக தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணி அரசு அறிவித்துள்ளது. புதிய கல்விக் கொள்கை … Read more

அமெரிக்காவின் கன்னத்தில் அறைந்தது ஈரான்: அயத்துல்லா கொமேனி ஆவேசம்

துபாய்: அணு ஆயுத தயாரிப்பை ஈரான் தீவிரப்படுத்துவதாக கூறி அந்நாட்டின் மீது இஸ்ரேல் கடந்த 13-ம் தேதி தாக்குதலை தொடங்கியது. ஈரானின் அணு ஆயுத தளங்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதிகள் மற்றும் அணு விஞ்ஞானிகள் பலர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் தன் மீது தாக்குதல் நடத்தலாம் என கருதிய ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி கொமேனி ரகசிய இடத்தில் பதுங்கினார். ஈரான் – இஸ்ரேல் இடையே போர் தீவிரம் அடைந்த நிலையில் … Read more

சேலம் : நில அளவை செய்ய லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர் கைது…

சேலம் மாவட்டத்தில் நில அளவை செய்ய லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி மற்றும் அவரது உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைவாசல் அருகே உள்ள காமக்காப்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி கண்ணையனின் நிலத்தை அளப்பதற்காக காமக்காபாளையம் கிராம நிர்வாக அலுவலர் பிரபு மற்றும் கிராம நிர்வாக அதிகாரியின் உதவியாளர் வேல்முருகன் ஆகியோர் ரூ.10,000 லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவில் புகார் அளித்த விவசாயி கண்ணையனிடம் காவல் ஆய்வாளர்கள் முருகன் மற்றும் ரவிக்குமார் ஆகியோர் … Read more

ரஷ்யா: கோமாவில் ஒன்றரை வயது குழந்தை; இரக்கமின்றி தாக்கிய கொடூரன்; அதிர்ச்சி வீடியோ – என்ன நடந்தது?

ரஷ்யாவின் விமான நிலையம் ஒன்றில் சுற்றுலா பயணி ஒருவர் ஒன்றரை வயது குழந்தையை தரையில் அடித்ததால் குழந்தை கோமா நிலைக்குச் சென்றுள்ளது. குழந்தையின் கபாளத்தில் முறிவு மற்றும் முதுகுத்தண்டில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தி சன் செய்தித் தளம் தெரிவிக்கிறது. குழந்தை குடும்பத்துடன் மாஸ்கோவில் தரையிறங்கிய சில நிமிடங்களிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளதாக சுற்றியிருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாக பகிரப்பட்டுவருகிறது. தனியாக நின்றிருந்த அந்த குழந்தையை நெருங்கிய வெள்ளை டிசர்ட் அணிந்திருந்த நபர், … Read more

‘கருணாநிதியின் விருப்பத்துக்கு முரணானது…’ – ‘கனவு இல்லம்’ அரசாணை திருத்தத்துக்கு ஐகோர்ட் கண்டனம்

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு அரசே வீடு ஒதுக்கீடு செய்து விட்டு, அதை ரத்து செய்தது இலக்கியவாதிகளை அவமதிக்கும் செயல் என சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் 97-வது பிறந்த நாளை முன்னிட்டு, ஞானபீடம், சாகித்திய அகாடமி விருதுகள் பெற்று, தமிழுக்கு தொண்டாற்றிய எழுத்தாளர்களை கவுரவிக்கும் வகையில் கடந்த 2022-ம் ஆண்டு ‘கனவு இல்லம்’ எனும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. … Read more