தமிழ்நாடு அரசின் இலவச மடிக்கணினி திட்டம்! டெண்டரை  கைப்பற்ற பன்னாட்டு நிறுவனங்கள் போட்டி…

சென்னை:  தமிழ்நாடு அரசு கல்லூரி மாணவர்களுக்கு  இலவசமாக வழங்க உள்ள  20 லட்சம் மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்கான  டெண்டரில் பங்கேற்க பன்னாட்டு நிறுவனங்கள் ஆர்வம்காட்டி வருகின்றன. 2025/26ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரில், அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி அல்லது டேப்லெட் பிசி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.  அதைத்தொடர்ந்து அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டது.  இதையடுத்து,   தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.20ஆயிரம் மதிப்பிலான மடிக்கணினி வாங்க டெண்டர் கோரப்பட்டு உள்ளது. இந்த … Read more

ஓய்வூதியர்களின் மாற்றுத்திறன் மகன், மகளுக்கு குடும்ப ஓய்வூதியம்: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

மதுரை: ஓய்வூதியர்களின் மாற்றுத்திறன் மகன் மற்றும் மகளுக்கு மருத்துவச் சான்றிதழ் அடிப்படையில் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்ட வனத் துறையில் வனவராகப் பணிபுரிந்தவர் வறுவேல். 1982-ல் மருத்துவத் தகுதியின்மை காரணமாக இவர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். 1998-ல் இறக்கும் வரை அவர் ஓய்வூதியம் பெற்று வந்தார். பின்னர், அவரது மனைவி மரியரோஸ் குடும்ப ஓய்வூதியம் பெற்று வந்தார். அவர் 2016-ல் இறந்தார். இவர்களின் மகன்கள் ஜெரால்டு, தர்சியஸ். … Read more

பள்ளியில் சேர விரும்பிய ஏழை சிறுமி: உதவிய உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்

லக்னோ: பள்ளியில் சேர விரும்பிய ஏழைச் சிறுமிக்கு அவர் விரும்பிய பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார். உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், அவ்வப்போது ஜனதா தர்ஷன் என்ற பெயரில் மக்கள் குறைதீர்ப்பு நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு நிகழ்ச்சியில், முதல்வர் யோகியை ஏழைச் சிறுமி வஷி என்பவர் சந்தித்து தனக்கு உதவுமாறு கேட்டார். அப்போது அவரது கோரிக்கை என்ன என்று முதல்வர் … Read more

தேர்தல் ஆதாயத்துக்காக மக்களின் கவனத்தை மதரீதியாக திசை திருப்பும் பாஜக : சிபிஐ

சென்னை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் முத்தரசன் தேர்தல் ஆதாயத்துக்காக மக்களின் கவனத்தை மதரீதியாக பாஜக திசை திருப்புவதாக கூறியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மத்திய பா.ஜ.க. அரசு, அதிகாரத்தில் அமர்ந்த ஆரம்ப நாளிலிருந்து இந்தி, சமஸ்கிருத மொழிகளை தமிழ்நாட்டில் திணிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அண்மையில் வெளியான தகவலின்படி 2014 முதல் 2024 வரையான பத்தாண்டு காலத்தில் வழக்கொழிந்து வரும் சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக இரண்டாயிரத்து … Read more

கோயில் நிதியில் வணிக வளாகங்கள் கட்ட தடை: கட்டுமானப் பணிகளை நிறுத்திவைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

கோயில் நிதியில் இருந்து வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் போன்றவற்றை கட்டுவதற்கு தடை விதித்துள்ள உயர் நீதிமன்றம், கட்டுமானப் பணிகளை நிறுத்திவைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. ஆலய வழிபடுவோர் சங்கத் தலைவர் மயிலாப்பூர் டி. ஆர். ரமேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: கோயில்களின் உபரி நிதியைக் கொண்டு வணிக வளாகம் கட்டுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளக் கூடாது என உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றமும் அதை உறுதி செய்துள்ளது. ஆனால், இதை … Read more

ராகுல் அடிக்கடி வெளிநாடு செல்வது ஏன்? – பாஜகவின் கேள்விக்கு காங்கிரஸ் பதில்

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அடிக்கடி ரகசியமாக வெளிநாடு செல்வது ஏன் என்று பாஜக மூத்த தலைவர் அமித் மாளவியா கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து ‘எக்ஸ்’ வலைதளத்தில் அமித் மாளவியா வெளியிட்ட பதிவில், “ராகுல் காந்தி கடந்த வாரம் ரகசிய வெளிநாட்டு பயணத்தில் இருந்தார். இப்போது அவர் மீண்டும் வெளிநாடு சென்று, மற்றொரு வெளிப்படுத்தப்படாத இடத்துக்கு சென்றுள்ளார். அவர் இவ்வாறு அடிக்கடி ரகசியப் பயணம் செல்வது ஏன்? அடிக்கடி வெளிநாடு செல்வதற்கு அவரை கட்டாயப்படுத்துவது … Read more

இன்றும் நாளையும் 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

சென்னை இன்றும் நாளையும் தமிழ்கத்தின் 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது/ சென்னை வானிலை ஆய்வு மையம். :மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக என்று தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் கனமழைக்கான … Read more

ஒருநாள் முழுக்க நீயும் நானும் மட்டும் நிறைய பேசனும் அப்பா! – மகனின் அன்பு வேண்டுகோள் #உறவின்கடிதம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் என் தந்தைக்கு மகனான நான் எழுதுவது.. நான் ஒரு எழுத்தாளனாக இருந்து கொண்டு அம்மாவைப் பற்றி ஆயிரம் கவிதைகளை நான் எழுதி உள்ளேன் ஆனால் உனக்காக ஒரு கவிதையோ இல்லை ஒரு கடிதமோ இதுவரை எழுதி கொண்டதே இல்லை.. நான் எழுத்தாளர் என்று ஊர் … Read more

​முன் அனுமதியின்றி எடுத்த விடுப்புக்கு நிர்வாகம் ஊதியம் வழங்கினால் தொழிலாளர் மீது குற்றம்சாட்ட முடி​யாது: ஐகோர்ட்

முன்அனுமதியின்றி எடுத்த விடுப்புக்கு நிர்வாகம் ஊதியம் வழங்கினால், அதற்காக தொழிலாளர் மீது குற்றம் சாட்ட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் நாகப்பட்டினம் கிளை மேலாளராக பணியாற்றியவர் இளங்கோவன். இவர் கடந்த 2006-08 காலகட்டத்தில் முன்அனுமதியின்றி 117 நாட்கள் விடுப்பு எடுத்துள்ளார். தடையில்லா சான்று (என்ஓசி) பெறாமல் சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு 7 முறை பயணம் மேற்கொண்டுள்ளார். விடுப்பு எடுத்த நாட்களுக்கு ரூ.1 லட்சம் ஊதியமாக பெற்று நிறுவனத்துக்கு … Read more

மிசோரம், கோவாவுக்கு அடுத்து முழு கல்வியறிவு பெற்ற மாநிலம் திரிபுரா

குவாஹாட்டி: மிசோராம், கோவாவுக்கு அடுத்தபடியாக 3-வது முழு கல்வியறிவு பெற்ற மாநிலமாக திரிபுரா உருவாகியுள்ளது. யுனெஸ்கோ விதிமுறைப்படி ஒரு மாநிலத்தில் கல்வியறிவு பெற்றோர் சதவீதம் 95 என்ற இலக்கை தாண்டினால் அந்த மாநிலம் முழு கல்வியறிவு பெற்ற மாநிலமாக கருதப்படும். கடந்தாண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் திரிபுராவில் கல்வியறிவு பெற்றோர் சதவீதம் 93.7 சதவீதமாக இருந்தது. 23,184 பேர் மட்டுமே கல்வியறிவு பெறாதவர்களாக இருந்தனர். இந்தாண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் திரிபுராவின் கல்வியறிவு பெற்றோர் சதவீதம் 95.6 சதவீதமாக உள்ளதாக … Read more