இமாச்சலில் கனமழையால் நிலச்சரிவு: நள்ளிரவில் நாய் குரைத்ததால் உயிர் தப்பிய 67 பேர்

சிம்லா: கடந்த மாதம்​20-ம் தேதி முதல் ஜூலை 6-ம் தேதி வரை 19 முறை மேகவெடிப்பு ஏற்​பட்டு கனமழை பெய்​தது. இதனால் 16 இடங்​களில் நிலச்​சரிவு ஏற்​பட்​டது. குறிப்​பாக மண்டி பகுதி மிகப்​பெரிய அளவில் பாதிக்​கப்​பட்​டது. இதனிடையே கடந்த மாதம் 30-ம் தேதி நள்​ளிர​வில் மண்டி மாவட்​டம் தரம்​பூர் பகு​தி​யில் உள்ள சியாதி கிராமம் நிலச்​சரி​வால் பாதிக்​கப்​பட்​டது.

நிலச்​சரிவுக்கு முன்பு நள்​ளிர​வில் அங்​கிருந்த ஒரு நாய் கடுமை​யாக குரைத்து சத்​தம் எழுப்​பி​யுள்​ளது. நாய் தொடர்ந்து குரைத்ததால் அந்த சத்​தத்தை கேட்டு கண்​விழித்த அதன் உரிமை​யாளர் நரேந்​திரா தனது வீட்​டின் சுவரில் விரிசல் விழுந்து தண்​ணீர் உள்ளே வரு​வதை பார்த்​துள்​ளார்.

உடனடி​யாக அவர் கிராமத்​தினரை எழுப்பி எச்​சரிக்கை செய்​துள்​ளார். இதனால் அனை​வரும் அங்​கிருந்து பாது​காப்​பான இடத்துக்கு தப்​பிச் சென்​றுள்​ளனர். பின்​னர் சிறிது நேரத்​தில் அந்த கிராமத்​தில் ஏற்​பட்ட பயங்​கர​மான நிலச்​சரி​வில் பல வீடு​கள் தரைமட்​ட​மா​யின. சரி​யான நேரத்​தில் நாய் குரைத்து எச்​சரிக்கை செய்​த​தால் சியாதி கிராமத்​தின் 20 குடும்​பங்​களை சேர்ந்த 67 பேர் அதிர்​ஷ்ட​வச​மாக உயிர் தப்​பியுள்​ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.