பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடாவிட்டால் நாதக விரைவில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கும்: சீமான்

சென்னை: பரந்​தூர் விமான நிலை​யத் திட்​டத்தை கைவி​டா​விட்​டால் நாம் தமிழர் கட்சி விரை​வில் மாபெரும் ஆர்ப்​பாட்​டத்தை முன்​னெடுக்​கும் என அக்​கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் அறி​வித்​துள்​ளார். பரந்​தூரில் 2-வது பன்​னாட்டு விமான நிலை​யம் அமைப்​ப​தற்​கான திட்​டத்தை 1000 நாட்​களுக்கு மேலாக ஏகனாபுரம் மற்​றும் அதன் சுற்​று​வட்​டார கிராம மக்​கள் எதிர்த்து வரு​கின்​றனர்.

அதை துளி​யும் மதிக்​காமல் தமிழக அரசு இத்​திட்​டத்தை நிறை வேற்​றியே தீரு​வேன் என்​னும் முனைப்​பில் பொது​மக்​களின் நிலங்​களை கையகப்​படுத்​தும் நடவடிக்​கையை விரைவுபடுத்தி வரு​கிறது. அதன்​படி கடந்த மாதம் வரையறுக்​கப்​பட்ட நிலங்​களுக்​கான மதிப்​பீட்​டுத் தொகைகள் வெளி​யிடப்​பட்​டன.

அதைத்​தொடர்ந்து ஏகனாபுரத்​தில் சுற்​றி​யுள்ள கிராமங்​களில் நிலங்​களை வைத்​திருக்​கும் வெளியூரை சேர்ந்த நில உரிமை​யாளர்​களை அணுகி அவர்​களுக்கு மதிப்​பீட்​டுத் தொகையை வழங்​கி, நிலங்​களை தமிழக அரசு கையகப்​படுத்தி உள்​ளது. இதன்​மூலம் 5750 ஏக்​கர் திட்ட அளவில் வெறும் 17.5 ஏக்​கர் சொற்ப இடங்​களை மட்​டுமே பெற்​று​விட்​டு, பொது​மக்​கள் அவற்றை தாமாகவே முன்​வந்து வழங்​கியது போல போலி​யான ஒரு பிம்​பத்தை உரு​வாக்​கி​யுள்​ளனர்.

போராடிவரும் மக்​களை ஒரு முறை கூடச் சந்​திக்​காத மாவட்ட நிர்​வாகம் இது​போன்ற நடவடிக்​கை​களில் ஈடு​படு​வது மிக​வும் தரமற்ற ஆட்சி முறை​யின் எடுத்​துக்​காட்​டாகும். இத்​திட்​டத்தை எப்​படி​யா​வது கொண்டு வந்​து​விட வேண்​டும் என குறுக்கு வழி​யில் தமிழக அரசு செயல்​படு​வதை விட்​டு​விட்​டு, போராடும் பொது​மக்​களை சந்​தித்து திட்​டத்தை கைவிட வேண்​டும். பரந்​தூர் விமான நிலை​யத் திட்​டத்​தைக் கைவி​டா​விட்​டால் நாம் தமிழர் கட்சி விரை​வில் மிகப்​பெரிய ஆர்ப்​பாட்​டத்தை முன்​னெடுக்​கும்​. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.