திருவாரூர்: திருவாரூர் அருகே அரசு பள்ளியின் குடிநீர்த் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரம் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த சம்பவத்திற்கு மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். திருவாரூர் அருகே அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சட்டம் ஒழுங்கைச் சீரழித்து சமூக விரோதிகளின் அழிச்சாட்டியத்தை நிலைநாட்டுவது […]
