ஆந்திர மதுபான ஊழல் வழக்கில் ஜெகன் கட்சி எம்.பி. மனு தள்ளுபடி

விஜயவாடா: ஆந்​தி​ரா​வில் ஜெகன் மோகன் தலை​மையி​லான ஒய்எஸ்​ஆர் காங்​கிரஸ் ஆட்சி காலத்​தில் அரசே மது​பான கடைகளை ஏற்று நடத்​தி​யது. அப்​போது, ஜெகன் கட்​சியை சேர்ந்த சிலரின் மது தயாரிப்பு தொழிற்​சாலைகள் மூல​மாக தரம் குறைந்த மது​பானங்​களை மார்க்​கெட்​டில் விற்​றது. இதனால் பலரின் உடல் நலம் பாதிக்​கப்​பட்​ட​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது. சிலர் உயி​ரிழந்​த​தாக​வும் கூறப்​படு​கிறது.

மேலும், ஜெகன் ஆட்​சி​யில் அரசுக்கு ரூ.3,500 கோடி வரை மது விற்​பனை​யால் நஷ்டம் ஏற்​பட்​டது சிறப்பு விசா​ரணை குழு​வின் ஆய்வில் தெரிய​வந்​துள்​ளது. அதன்​பேரில் இது​வரை பலரை இக்​குழு கைது செய்து விசா​ரணை நடத்தி வரு​கிறது.

இதில், ஜெகன் கட்​சியை சேர்ந்த ராஜம்​பேட்டை நாடாளு​மன்ற உறுப்​பினர் மிதுன் ரெட்​டியை விசா​ரணை குழு 4 வது குற்​ற​யாக சேர்த்​துள்​ளது. இந்த நிலை​யில் மிதுன் ரெட்​டி, தனக்கு இந்த வழக்​குக்​கும் எவ்​வித தொடர்​பும் இல்லை என்​றும், தனக்கு இவ்​வழக்கில் முன் ஜாமீன் வழங்​கிட வேண்​டுமென​வும் வழக்​கறிஞர்​கள் மூலம் ஆந்​திர உயர்​நீதி மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தார்.

இந்த மனு குறித்து விசா​ரணை​யின்​போது இருபக்க வாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி, மிதுன்​ரெட்​டி​யின் முன் ஜாமீன் மனுவை தள்ளு​படி செய்து உத்​தர​விட்​டார். இதனால் ஜெகன் கட்​சியை சேர்ந்த எம்பி மிதுன் ரெட்டி விரை​வில் கைது செய்​யப்​படலாம் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இந்த நிலை​யில், டெல்லி உச்ச நீதி​மன்​றத்​தில் மிதுன் ரெட்டி மேல் முறை​யீடு செய்​வார் என தகவல்​கள்​ தெரிவிக்​கின்​றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.