பும்ராவை காயப்படுத்துவதே இங்கிலாந்தின் திட்டமாக இருந்தது.. முன்னாள் இந்திய வீரர் கடும் சாடல்!

Ind vs Eng: இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இங்கிலாந்து அணி 2 போட்டிகளும் இந்திய அணி 1 போட்டியிலும் வென்றுள்ளது. லண்டன் லார்ட்ஸில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நெருக்கமாக சென்று தோல்வியை தழுவியது. இறுதி கட்டத்தில், பும்ரா, சீராஜ் ஆகியோ ரன்கள் அடிக்கவில்லை என்றாலும் இங்கிலாந்தின் பந்துவீச்சை திறன்பட எதிர்கொண்டனர். 

குறிப்பாக பும்ரா சுமார் இரண்டு மணி நேரம் வரை களத்தில் நின்று எதிரணியின் பந்து வீச்சாளர்களை சோர்வடைய செய்தார். இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் பும்ராவை காயப்படுத்த திட்டமிட்டதாக முகமது கைஃப் குற்றம்சாட்டி உள்ளார். 

ஜஸ்பிரித் பும்ரா இரண்டாவது இன்னிங்ஸில் 10வது இடத்தில் களம் இறங்கினார். அவர் கடைசி நாளில் 2 மணி நேரம் களத்தில் நிலைத்து நின்று 54 பந்துகளை எதிர்கொண்டார். அவர் குறைவான ரன்களை அடித்திருந்தாலும், அவரது செயல்பாடு மிகவும் முக்கியமானது. மறுமுனையில், ஜடேஜா இருப்பதால், அவருக்கு உதவும் நோக்கில் அவரது அனுகுமுறை இருந்தது. விக்கெட்டை தக்க வைத்தால், ஜடேஜாவால் ரன் சேர்க்க முடியும் என்பதுதான். 

ஸ்டோக்ஸ், ஆர்ச்சரை சாடிய கைஃப்

இது தொடர்பாக முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் தனது யூடியூப் சேனலில் பேசினார். அப்போது, பும்ரா பேட்டிங் செய்யும் போது இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஆர்ச்சர் அவரை ஆட்டமிழக்க செய்ய வேண்டும் என்று பந்து வீசவில்லை. மாறாக அவரின் விரலையோ அல்லது தோள் பட்டையையோ காயப்படுத்த வேண்டும் என்று பந்து வீசினார்கள். அப்படி அவர் காயமடைந்து வெளியேறினால், அடுத்த இரண்டு போட்டிகளில் அவர் பங்கேற்க மாட்டார் என்பதுதான் அவர்களின் திட்டம். 

ஒரு பந்து வீச்சாளருக்கு எதிராக இப்படி தொடர்ச்சியாக பவுன்சர்களை வீசுவது சரியாக வியூகம் கிடையாது. பும்ராவின் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை என்றால், அவரை காயப்படுத்த வேண்டும் என்று அவர்கள் நினைத்தனர். இது கொஞ்சம் கூட ஏற்று கொள்ள முடியாதது என முன்னாள் வீரர் முகமது கைஃப் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோப்ரா ஆர்ச்சரை கடுமையாக சாடினார். 

அடுத்த போட்டி 

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இரு அணிகளுக்கும் எதிரான 4வது டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 23ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இப்போட்டி எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட்டின் மான்செஸ்டரில் நடைபெற இருக்கிறது. அடுத்த இரண்டு போட்டிகளில் வென்றால்தான் இந்திய அணி தொடரை கைப்பற்ற முடியும் என்பதால், பும்ராவுக்கு ஓய்வளிக்காமல், 4வது டெஸ்ட் போட்டியில் விளையாட வைப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிங்க: IPL 2026: சிஎஸ்கே கழட்டிவிடும் 4 வீரர்கள்.. புதிதாக யாருக்கு வாய்ப்பு!

மேலும் படிங்க: Virat Kohli: ஓய்வுக்கு பிறகும் விராட் கோலி சாதனை.. யாருமே செய்யாத ரெக்கார்டு!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.