India vs England, Playing XI Prediction: இந்திய அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஆண்டர்சன் டெண்டுல்கர் கோப்பை தொடரில் தற்போது 3 போட்டிகள் நிறைவடைந்துவிட்டன. ஓல்ட் டிராஃபோர்ட் மற்றும் ஓவல் டெஸ்ட் போட்டிகள் மட்டும் பாக்கி.
இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் வென்றால்தான் இந்தியாவால் 2007ஆம் ஆண்டுக்கு பின் முதல்முறையாக இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்ற முடியும். இந்த சூழலில் இந்திய அணியில் பல முக்கிய வீரர்களுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது.
Team India: 3 பேருக்கு காயம்
3வது லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் போதே ரிஷப் பண்டுக்கு இடது கை விரலில் காயம் ஏற்பட்டிருந்தது. அந்த போட்டியிலேயே துருவ் ஜூரேல்தான் விக்கெட் கீப்பிங்கை கவனித்துக்கொண்டார். மேலும் 3வது போட்டியின் நான்காவது நாளில் ஆகாஷ் தீப்பிற்கு இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து வலைப்பயிற்சியில் ஈடுபட்டபோது இடது கை வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கிற்கும் காயம் ஏற்பட்டிருக்கிறது.
Team India: உள்ளே வரும் அன்ஷுல் கம்போஜ்
இதனால், வெற்றிகரமான காம்பினேஷனை அமைப்பதை விட ஒரு சுமாரான காம்பினேஷனை அமைக்கவே இந்தியா திணறும் சூழல் உருவாகி உள்ளது. இதனால் இந்திய அணி நான்காவது டெஸ்ட் போட்டியின் போது சற்று பலவீனமாக காட்சியளிக்கலாம். நான்காவது டெஸ்ட் போட்டியில் நிச்சயம் பிளேயிங் லெவனில் மாற்றம் ஏற்பட இருப்பது உறுதி. மேலும் அதற்கு முன் அன்ஷுல் கம்போஜை இந்திய அணி ஸ்குவாடில் இணைந்திருப்பதையும் உற்றுநோக்க வேண்டும்.
Team India: ரிஷப் பண்ட் – துருவ் ஜூரேல்
ரிஷப் பண்டுக்கு காயம் ஏற்பட்டாலும் அவர் நிச்சயம் பேட்டிங்கிற்காக விளையாடுவார். எனவே துருவ் ஜூரேல் விக்கெட் கீப்பிங்கை கவனித்து கொள்வார். ரிஷப் பண்ட் பீல்டிங்கில் ஈடுபடுவார். துருவ் ஜூரேல் நம்பர் 3 ஸ்பாட்டில் கருண் நாயருக்கு பதில் களமிறங்குவார். ரிஷப் பண்ட் பேட்டிங்கும் தேவை, துருவ்வின் கீப்பிங்கும் தேவை என்பதால் கம்பீர் இந்த முடிவை எடுக்க அதிக வாய்ப்புள்ளது.
தொடர்ந்து பும்ராவும் இந்த போட்டியில் விளையாடுவார். ஆகாஷ் தீப் விளையாடுவதற்கு வாய்ப்பில்லை என்பதால் அந்த இடத்தில் குல்தீப் யாதவ் விளையாட வாய்ப்புள்ளது. இதன்படி பார்த்தோமானால் இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் நடக்க வாய்ப்புள்ளது. கருண் நாயர், ஆகாஷ் தீப்புக்கு பதில் துருவ் ஜூரேல், குல்தீப் யாதவ் இடம்பெறுவார்கள். அன்ஷுல் கம்போஜ் அடுத்த 5வது போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெறுவார் எனலாம்.
இந்திய அணியின் பிளேயிங் லெவன் (கணிப்பு)
யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், துருவ் ஜூரேல், சுப்மான் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட் (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.