2036-ல் ஒலிம்பிக்கில் பதக்கங்களை குவிக்க 3,000 விளையாட்டு வீரர்களுக்கு மாதம் ரூ.50,000 நிதியுதவி: அமித் ஷா தகவல்

புதுடெல்லி: 2036 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை மனதில் கொண்டு தேர்வு செய்யப்பட்ட 3 ஆயிரம் விளையாட்டு வீரர்களுக்கு மாதந்தோறும் ரூ.50 ஆயிரம் உதவியை மத்திய அரசு வழங்கி வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

அண்மையில் அமெரிக்காவில் 21-வது உலக போலீஸ் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பில் கலந்துகொண்டு பதக்கம் பெற்ற போலீஸாருக்கு பாராட்டு விழா டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

விழாவில் கலந்துகொண்ட மத்​திய அமைச்​சர், பதக்​கம் பெற்​றவர்​களுக்கு பாராட்​டு​களை தெரி​வித்​ததோடு பரிசுகளை​யும் வழங்​கி​னார். பின்​னர் விழா​வில் அவர் பேசி​ய​தாவது:

பதக்​கம் வாங்கி நமது நாட்டை கவுர​வப்​படுத்​திய அனைத்து போலீ​ஸாருக்​கும் பாராட்​டு​கள். அடுத்த உலக போலீஸ் விளை​யாட்டு விழா குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத், காந்​திநகர், கெவாடியா ஆகிய நகரங்​களில் நடை​பெறவுள்​ளது.

இந்​தப் போட்​டி​யில் பங்​கேற்​கும் அனைத்து போலீ​ஸாரும், பதக்​கம் பெறு​வதை குறிக்​கோளாக கொண்டு களமிறங்க வேண்​டும். இந்த உலக போலீஸ் விளை​யாட்​டுப் போட்​டி​யில் இந்​தி​யா​வுக்கு 613 பதக்​கங்​கள் கிடைத்​தன. அடுத்த போட்​டி​யில் இந்த பதக்க எண்​ணிக்​கையை போலீ​ஸார் முறியடிக்க வேண்​டும்.

தற்​போது பதக்​கம் வென்ற போலீ​ஸாருக்கு ஒட்​டுமொத்​த​மாக ரூ.4.4 கோடி ஊக்​கத்​தொகை வழங்​கப்​பட்​டுள்​ளது. விளை​யாட்​டில் வெற்றி தோல்வி என்​பது சகஜம். எனவே, இந்​தப் போட்​டி​யில் வெற்றி பெறாதவர்​கள் கவலைப்​படக்​கூ​டாது. அடுத்த விளை​யாட்​டுப் போட்​டி​யில் பங்​கேற்று பதக்​கங்​களை கைப்​பற்​ற வேண்​டும்.

2036-ம் ஆண்டு ஒலிம்​பிக் போட்​டியை நடத்த இந்​திய அரசு விருப்​பம் தெரி​வித்​துள்​ளது. போட்​டியை இந்​தி​யா​வில் நடத்​து​வ​தில் உறு​தி​யாக இருக்​கிறோம். அதே​போல் ஆசிய விளை​யாட்​டு, காமன்​வெல்த் விளை​யாட்​டுப் போட்​டியை​யும் இந்​தி​யா​வில் நடத்த முயற்சி செய்து வரு​கிறோம்.

ஒலிம்​பிக் போட்​டியை மனதில் கொண்டு இந்​திய விளை​யாட்டு வீரர்​கள் 3 ஆயிரம் பேரைத் தேர்வு செய்து மாதந்தோறும் ரூ.50 ஆயிரத்தை வழங்கி வரு​கிறோம். தங்​கள் விளை​யாட்டை மேம்​படுத்​திக் கொள்ள இந்​திய வீரர், வீராங்​க​னை​களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்​பு. கடந்த 10 ஆண்​டு​களில் விளை​யாட்​டுத்​துறைக்​கான நிதி ஒதுக்​கீடு 5 மடங்​கு அதி​கரித்​துள்​ளது. இவ்​வாறு மத்​தி​ய அமைச்​சர்​ அமித்​ ஷா தெரி​வித்​தார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.