மாபெரும் சாதனையை படைக்க இருக்கும் கே.எல்.ராகுல்.. இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட்டில் நிகழ்த்துவாரா?

Ind vs Eng 4th Test: இந்திய அணியின் நட்சத்திர வீரர் கே.எல். ராகுல். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். விக்கெட் கீப்பங் ஆக இருந்தாலும் சரி, பேட்டிங்கில் எந்த இடத்தில் களமிறக்கப்பட்டாலும் சரி கே.எல்.ராகுல் அதற்கு ஏற்றவாறு செயல்பட கூடியவர். அவர் இதுவரை 61 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3632 ரன்களையும் 85 ஒருநாள் போட்டிகளில் 3043 ரன்களையும் டி20ல் 72 போட்டிகளில் 2265 ரன்களையும் குவித்துள்ளார். அவர் சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தமாக 58 அரைசதங்களையும் 19 சதங்களையும் விளாசி உள்ளார். அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்சமாக 199 ரன்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்சமாக 112 ரன்களையும் டி20ல் அதிகபட்சமாக 110 ரன்களையும் அடித்துள்ளார். 

புதிய சாதனை படைக்க இருக்கும் கே.எல். ராகுல்

இப்படி அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் ஆதிக்கம் செலுத்தி வந்த அவர், இன்றளவும் இந்திய அணியின் நட்சத்திர வீரராக வலம் வருகிறார். தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடி வருகிறது. இதுவரை மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் அவர் 375 ரன்களை குவித்துள்ளார். இதில் இரண்டு சதங்களும் ஒரு அரைசதமும் அடங்கும். அவரது சராசரி 62ஆக உள்ளது. சிறப்பாக விளையாடி வரும் அவர் இங்கிலாந்து மண்ணில் அதிக சதம் அடித்த இந்திய தொடக்க வீரர் என்ற் சாதனையை நிகழ்த்தி உள்ளார் .தொடர்ந்து மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், கே.எல்.ராகுல் சர்வதேச கிரிக்கெட்டில் சாதனை படைக்க இருக்கிறார். கே.எல். ராகுல் இதுவரை 218 சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார். அதில் அவர் 8940 ரன்களை குவித்துள்ளார். இந்த நிலையில், அவர் இன்னும் 60 ரன்களை குவித்தால், இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் 9000 ரன்களை குவிக்கும் வீரராக மாறுவார். இதன் மூலம் அவர் 9000 ரன்கள் அடித்த 16வது இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார். 

இந்தியாவுக்காக 9000 ரன்கள் அடித்த 15 வீரர்கள் 

முன்னதாக சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், விராட் கோலி, ரோகித் சர்ம, சவுரவ் கங்குலி, திலீப் வெங்கர்க்கார், கபில் தேவ், வீரேந்தர் சேவாக், முகமது அசாருதீன், சுனில் கவாஸ்கர், தோனி, வி வி எஸ் லட்சுமணன், ஷிகர் தவான், கவுதம் கம்பீர், யுவராஜ் சிங் ஆகியோர் இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் 9000 ரன்களை குவித்துள்ளார். 

இங்கிலாந்துக்கு எதிரான 4வது போட்டியில் நிகழ்த்துவாரா?

இச்சாதனையை கே.எல். ராகுல் வரும் இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு இன்னிங்ஸை சேர்த்து அவர் 60 ரன்களை அடித்தாலே இந்த சாதனையை அவர் நிகழ்த்துவார். இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (ஜூலை 23) தொடங்க உள்ளது. இப்போட்டி இங்கிலாந்தின் மான்செஸ்டரில் நடைபெற உள்ளது.

மேலும் படிங்க: IND vs ENG:இந்திய அணிக்கு பேரதிர்ச்சி! காயம் காரணமாக 4 வீரர்கள் விலகல்!

மேலும் படிங்க: இந்திய அணியில் பெரிய மாற்றம்… 4வது போட்டியில் விளையாடும் 11 வீரர்களின் லிஸ்ட் இதோ!

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.