காந்தி நகர்,
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக விமான நிலையத்திற்கு இமெயில் மூலம் மிரட்டல் வந்தது.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள், விமான நிலைய பாதுகாப்புப்படையினருடன் இணைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையின் இறுதியில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இதையடுத்து, இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :