புதுடெல்லி,
பீகார் மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த ப்பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டது. இந்த பணியின் போது ஏராளமான வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.
இந்த திருத்த பணிகளுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு ஆதார், வாக்காளர் அட்டை, அடையாள ரேஷன்கார்டு ஆகியவற்றை செல்லுபடியாகும் ஆவணங்களாக சேர்ப்பது குறித்து பரீசிலிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறும் நோட்டீசு அனுப்பபட்டது.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் இந்த கருத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ளவில்லை. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் கூறி இருப்பதாவது:-
வாக்காளர் சிறப்பு திருத்தத்தின் போது ஆதார் கார்டு, ரேஷன்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் நம்பகத்தன்மையற்றவை . ஆதார் என்பது ஒரு நபரின் அடையாள சான்று மட்டுமே. ஒரு நன்மையை பெற விரும்பும் ஒருவர் தான் யார் ? என்பதை காட்ட ஆதார் அட்டையை பயன்படுத்தலாம். பிரிவு 362-ன் கீழ் தகுதியை சரி பார்க்க ஆதாரை பயன்படுத்தும் சான்றாக உள்ளது. நாட்டில் ஏராளமான போலி ரேஷன் கார்டுகள் சுற்றி வருகின்றன.
பரவலாக இருப்பதால் 11 ஆவணங்களின் பட்டியலில் இது பரிந்துரைக்கப்பட வில்லை. தற்போதைய வாக்காளர் அடையாள போலி ரேஷன் கார்டுகள் அட்டையை பயன்படுத்துவது சிறப்பு இயக்கத்தை பயனற்றதாக்கும். இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இதனிடையே பீகாரில் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தின் மகர் துவார் என்ற பகுதியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.