Ind vs Eng: இந்திய அணிக்குள் வரும் சிஎஸ்கே வீரர்.. பிளேயிங் 11 இதுதான்!

India Prodicted Playing XI: இந்தியா அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் தொடரை விளையாடி வருகிறது. இத்தொடர் கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 3 போட்டிகள் முடிவடைந்துள்ளது. அதில் இங்கிலாந்து 2 போட்டிகள் வென்று 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இத்தொடரில் இன்னும் இரண்டு போட்டிகள் மீதமுள்ள நிலையில், இந்திய அணி தொடரை கைப்பற்ற இந்த இரண்டு போட்டிகளையும் வெல்ல வேண்டும். 

அணிக்குள் வந்த இரண்டு வீரர்கள்

அதற்காக இந்திய அணி தீவிரமாக பயிற்சி செய்து வருகிறது. மறுபக்கம் இங்கிலாந்து அணியும் வரும் 4வது போட்டியை வென்றால் தொடரை கைப்பற்றிவிடலாம் என நோக்கில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நான்காவது டெஸ்ட் போட்டி நாளை (ஜூலை 23) மான்செஸ்டரில் தொடங்க இருக்கிறது. இச்சூழலில் இந்திய அணியில் இருந்து நிதிஷ் குமார் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் காயம் காரணமாக விலகி உள்ளனர். இதனால் அன்ஷுல் கம்போஜ் மற்றும் அபிமன்யூ ஈஸ்வரன் சேர்க்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில், நாளை (ஜூலை 23) மான்செஸ்டரில் தொடங்க இருக்கும் நான்காவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் பிளேயிங் 11 என்னவாக இருக்கும் என்பதை இங்கு பார்க்கலாம். 

வழக்கமாக தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்றாவது இடத்தில் கடந்த இரண்டு டெஸ்ட் போட்டியில், கருண் நாயர் களமிறங்கினார். ஆனால் அவரது செயல்பாடு சரி இல்லாத காரணத்தினால், இவரது இடத்தில் யார் விளையாடுவார் என்ற கேள்வி எழும்பி உள்ளது. கருண் நாயர் சிறப்பக செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. இதனால் மீண்டும் இந்த இடத்தில் சாய் சுதர்சன் களம் இறக்க அதிக வாய்ப்புள்ளது. 

துருவ் ஜுரேல் இறங்க வாய்ப்பு

நான்காவது இடத்தில் வழக்கம்போல் கேப்டன் சுப்மன் கில் களம் இறங்குவார். இதையடுத்து ஐந்தாவது இடத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை ரிஷப் பண்ட் வெறும் பேட்ஸ்மேனாக மட்டும் களம் இறக்கப்பட்டால், கருண் நாயர் இடத்தில், துருவ் ஜுரேலை களம் இறக்கப்படலாம். ஆறாவது இடத்தில் வழக்கம்போல் ஜடேஜா களம் இறங்குவார். 

நிதீஷ் குமார் குமார் காயம் காரணமாக தொடரை விட்டு விலகி உள்ள நிலையில், 7வது இடத்தில் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பளிக்கலாம். இதையடுத்து 8வது இடத்தில் குல்தீப் யாதவ் அல்லது ஷர்துல் தக்கூர் களம் இறக்கப்படலாம். 9வது இடத்தில் சிராஜும், 10வது இடத்தில் பும்ராவும் களம் இறங்குவார்கள். ஆனால் 11வது இடத்தில் யாரை களம் இறக்குவது என்ற குழப்பம் உள்ளது. ஆகாஷ் தீப் மற்றும் அர்ஷ்தீப் சிங் இருவரும் காயம் காரணமாக வெளியேறி இருப்பதால், பிரசித் கிருஷ்ணா அல்லது புதிதாக அணியில் சேர்ந்திருக்கும் சிஎஸ்கே வீரர் அன்ஷுல் கம்போஜை சேக்கலாம். 

இந்திய அணியின் உத்தேச பிளேயிங் 11

யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே. எல். ராகுல், கருண் நாயர் / சாய் சுதர்சன், சுப்மன் கில், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாத்வ், முகமது சீராஜ், ஜஸ்பிரித் பும்ரா, அன்ஷுல் கம்போஜ்.    

மேலும் படிங்க: கோலி, ரோகித் ஓய்வுக்கு இதுதான் காரணம்.. மெளனம் கலைத்த பிசிசிஐ!

மேலும் படிங்க: IND vs ENG: தொடரை வெல்ல பென் ஸ்டோக்ஸ் எடுத்த முக்கிய முடிவு! அணியில் அதிரடி மாற்றம்!

 

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.