இந்த 3 வீரர்கள் நீக்கப்படுவது உறுதி! ஏலத்தில் எடுக்கப்படுவதும் சந்தேகம் தான்!

ஐபிஎல் 2025 சீசன் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பை உருவாக்கி இருந்தாலும், பல சீனியர் கிரிக்கெட் வீரர்களின் கரியை முடிவுக்கு கொண்டு வந்தது. 2025 சீசனில் ஜேக் பிரேசர்-மெக்ர்க், மேக்ஸ்வெல் போன்ற வீரர்கள் தங்கள் திறமையை வெளிக்கொண்டு வர தடுமாறினர். இந்நிலையில் சில சீனியர் வீரர்களை வெளியிட அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அனைத்து சீனியர் வீரர்களும் விடுவிக்கப்பட மாட்டார்கள் என்றாலும், 2025ல் மோசமான செயல்பாடு காரணமாக, 2026 ஐபிஎல் ஏலத்திற்கு முன் விடுவிக்கப்பட உள்ள 3 வீரர்களை பற்றி பார்ப்போம். இவர்கள் கடந்த சில சீசன்களில் சிறப்பாக விளையாடியிருந்தாலும், இந்த ஆண்டு பெரும் ஏமாற்றமாக இருந்தனர்.

ஜேக் பிரேசர்-மெக்ர்க் (Jack Bracer-Makrk)

ஆஸ்திரேலியாவின் இளம் அதிரடி பேட்ஸ்மேன் ஜேக் பிரேசர்-மெக்ர்க், 2024ல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இணைந்தார். இதுவரை 9 இன்னிங்ஸ்களில் 32 பவுண்டரிகள் மற்றும் 28 சிக்ஸர்கள் அடித்துள்ளார். ஆனால் 2025ல், அவர் ரன்கள் அடிக்க முற்றிலும் சிரமப்பட்டார். 6 இன்னிங்ஸ்களில் வெறும் 55 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 105.76ஆக குறைந்தது, இது கடந்த ஆண்டு 234.04 ஆக இருந்தது. இதனால் சில போட்டிகளில் அவருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. 9 கோடி ரூபாய் விலைக்கு வாங்கப்பட்ட அவரது இடத்தில் 2 இளம் வீரர்களை வாங்கலாம் என்பதால் இவரை கழட்டிவிட அதிக வாய்ப்பு உள்ளது. 

டெவான் கான்வே (Devon Conway)

தென்னாப்பிரிக்காவில் பிறந்து நியூசிலாந்து அணிக்காக விளையாடி வரும் டெவான் கான்வே, ஐபிஎல் தொடரில் ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடினார். 2022ல் 252 ரன்களும், 2023ல் 672 ரன்களும் அடித்தார். ஆனால் 2024ல் காயம் காரணமாக விளையாடாத அவர் 2025ல் ரன்கள் அடிக்க மிகவும் சிரமப்பட்டார். 6 போட்டிகளில் 156 ரன்கள் மட்டுமே எடுத்தார், சராசரி 26 ஆக மட்டுமே இருந்தது. மேலும் 2025ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வெறும் 6 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். 34 வயதான அவர், சமீபத்தில் நியூசிலாந்து அணியிலும் அவரது இடத்தை இழந்துள்ளார், அடுத்த ஆண்டு மினி ஏலத்திற்கு முன்பு சென்னை அணி இவரை கழட்டிவிடலாம்.

பாசல்ஹக் பாரூக்கி (Pasalhak Barooki)

ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் பாசல்ஹக் பாரூக்கி, ஒரு காலத்தில் போட்டியை மாற்றும் வீரராக கருதப்பட்டார். ஆனால் 2025ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 5 போட்டிகளில் விளையாடி ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. அவரது இகானமி ரேட் 12.35ஆக இருந்தது, இது டெத் ஓவர்களில் பெரும் பிரச்சினையானது. 2024 ஜனவரி முதல் 2025 மார்ச் வரை 57 போட்டிகளில் 89 விக்கெட்டுகள் எடுத்திருந்தாலும், இந்த சீசனில் அவர் முற்றிலும் தோல்வி அடைந்தார். இது அணி நிர்வாகத்திற்கு பெரும் ஏமாற்றம் அளித்தது. இதனால், ராயல்ஸ் அணியிலிருந்து அவர் விடுவிக்கப்பட அதிக  வாய்ப்புள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.