டாக்கா,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் ஆட்டத்தில் வங்காளதேசம் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது போட்டி நேற்று நடைபெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 20 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 133 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக ஜேக்கர் அலி 55 ரன் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் சல்மான் மிர்சா, அகமது டேனியல் , அப்பாஸ் அப்ரிடி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து 134 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் 19.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 125 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 8 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்காளதேசம் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக பஹீம் அஷ்ரப் 51 ரன் எடுத்தார். வங்காளதேசம் தரப்பில் ஷோரிபுல் இஸ்லாம் 3 விக்கெட் வீழ்த்தினார். இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி நாளை நடக்கிறது.