மிசோரத்தின் அதிக வயதான பெண்மணி காலமானார்

அய்சோல்,

மிசோரம் மாநிலம் லாங்தலாய் மாவட்டம் பங்குவா கிராமத்தை சேர்ந்தவர் பமியங் (வயது 117). இவர் 1908ம் ஆண்டு பிறந்தார்.

பமியங் மிசோரம் மாநிலத்தின் அதிக வயதான பெண்மணியாக திகழ்ந்தார். பமியங்கிற்கு மொத்தம் 8 பிள்ளைகள், 51 பேரன் – பேத்திகள், 122 கொள்ளுப்பேரன் – கொள்ளுப்பேத்திகள், 22 எள்ளுப்பேரன் – எள்ளுப்பேத்திகள் உள்ளனர்.

இந்நிலையில், மிசோரத்தின் அதிக வயதான பெண்மணியாக திகழ்ந்த பமியங் வயது மூப்பு காரணமாக நேற்று அவரது வீட்டில் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.