POCSO Against RCB Player: ஜூன் மாதம் தொடக்கத்தில் முடிவடைந்த ஐபிஎல் 2025 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்றியது. ஆர்சிபி அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக அந்த அணி வீரர் யாஷ் தயாள் இருந்தார். பலரின் பாராட்டையும் அவர் பெற்றார். இந்த கொண்டாட்டம் முடிவடைவதற்குள்ளேயே அவர் மீது ஒரு புகார் எழுந்தது. அதாவது காசியாபாத்தை சேர்ந்த ஒரு பெண்ணை அவர் 5 ஆண்டுகள் காதலித்து பின்னர் திருமணம் செய்துக்கொள்வதாக கூறி ஏமாற்றியதாக புகார் எழுந்தது. யாஷ் தயாள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.
போக்சோ வழக்கு
இந்த நிலையில், மற்றொரு புகார் அவர் மீது அளிக்கப்பட்டுள்ளது. யாஷ் தயாள் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெய்ப்பூரை சேர்ந்த 17 வயது இளம் கிரிக்கெட் வீராங்கனை ஒருவர் யாஷ் தயாள் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரில், கிரிக்கெட்டில் அந்த பெண்ணை பெரிய அள்ளாக்குவதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக, ஜெய்ப்பூரை சேர்ந்த இளம் பெண் தெரிவித்துள்ளார்.
10 ஆண்டுகள் சிறை தண்டனை
தற்போது அந்த வீராங்கனைக்கு 18 வயதை தாண்டி இருக்கலாம். ஆனால் அந்த பெண் பாதிக்கப்பட்டபோது, அவருக்கு 17 வயதே ஆனதால், இந்த வழக்கு போக்சோ சட்டத்தின் கீழ் பதியப்பட்டுள்ளது. இதன் காரணமாகா யாஷ் தயாள் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. மேலும், அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக அவரது கிரிக்கெட் எதிர்காலமே கேள்விக்குறியாகி இருக்கிறது. 17 ஆண்டுகளாக கோப்பையை வெல்லாத ஆர்சிபி அணி 18வது ஆண்டில் கோப்பையை வெல்ல காரணமாக இருந்த முக்கிய வீரர்களின் ஒருவராக திகழ்ந்த யாஷ் தயாள் அடுத்தடுத்து பெண்கள் தொடர்பான விவகாரத்தில் சிக்கி இருப்பது கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிங்க: கள்ள உறவில் சிக்கிய 4 பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள்… அதில் 2 பேர் கேப்டன்கள் வேறு!
மேலும் படிங்க: வெளியேறும் ரிஷப் பண்ட்… உள்ளே வரும் இன்னொரு அதிரடி வீரர் – வலுபெறும் இந்திய அணி!