டெல்லி: மத்தியஅரசு தமிழ்நாட்டில் நடத்தும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 687 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு மத்தியஅரசு அளித்துள்ள பதிலில், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத 799 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், இதில் 687 பணியிடங்கள் ஆசிரியர் பணியிடங்கள் எனவும் மத்திய கல்வி அமைச்சகம் கூறியுள்ளது. இதுகுறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர் ரஞ்சித் ரஞ்சன் நாடு […]
