Airplane Mode : மொபைல் போன் ஏர்ப்ளேன் மோட் பற்றிய 5 நன்மைகள்..!!

Airplane Mode : மொபைல் போனில் உள்ள ஏர்ப்ளேன் மோட் ஆப்சன் பற்றி பலரும் அறிந்திருப்பதில்லை. அதனை எப்போது பயன்படுத்த வேண்டும், எதற்காக பயன்படுத்த வேண்டும், அதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன, எந்த நேரத்தில் பயன்படுத்துவது உபயோகமாக இருக்கும் என தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை இந்த ஆப்சன் உங்களுக்கு இக்கட்டான சூழலில் உதவியாக இருக்கும்.

ஏர்ப்ளேன் மோட் விமானத்தில் மட்டுமா பயன்படுத்துவதா?

பலருக்கு ஏர்ப்ளேன் மோட் என்பது விமானப் பயணத்தின்போது மட்டுமே பயன்படுத்துவதாகத் தெரியும். ஆனால், இந்தச் சிறிய அமைப்பு (Feature) உங்கள் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை முழுமையாக மாற்றும் அளவுக்கு பல பயன்களைக் கொண்டது. இதன் முக்கியமான 5 மறைக்கப்பட்ட பயன்களை இங்கு பார்க்கலாம்.

1. கவனத்தை மையப்படுத்தவும் (Focus Mode)

படிக்கும்போது அல்லது முக்கியமான வேலை செய்யும்போது தொடர்ந்து வரும் அறிவிப்புகள் (Notifications), கால், மெசேஜ்கள் தொந்தரவாக இருந்தால், ஏர்ப்ளேன் மோட் ஆன் (On) செய்யுங்கள். இதனால் இணையம், கால், மெசேஜ்கள் அனைத்தும் தடைப்படும். நீங்கள் ஒரு வேலையில் முழுக்கவும் கவனம் செலுத்தலாம்.

2. ஃபோன் அதிக வெப்பத்தைக் குறைக்கும் (Reduce Overheating)

நீண்ட நேரம் ஃபோன் பயன்படுத்தினால், பல ஆப்ஸ் ஒரே நேரத்தில் இயங்கினால் அல்லது பலவீனமான நெட்வொர்க்கில் ஃபோன் அதிகம் வெப்பமடையும். இதைத் தடுக்க ஏர்ப்ளேன் மோட் ஒன் செய்யவும். பின்னணியில் இயங்கும் நெட்வொர்க் செயல்பாடுகள் நிறுத்தப்படுவதால், ஃபோன் குளிர்ச்சியாகும்.

3. பேட்டரி லைஃப் அதிகரிக்கும் (Save Battery)

பலவீனமான சிக்னல் பகுதிகளில் ஃபோன் தொடர்ந்து நெட்வொர்க் தேடும் செயல்பாட்டால் பேட்டரி வேகமாக drain ஆகும். ஏர்ப்ளேன் மோட் இயக்கினால், நெட்வொர்க் தேடுதல் நிறுத்தப்படும். இதனால் பேட்டரி அதிக நேரம் நீடிக்கும்!

4. குழந்தைகளை இணையத்திலிருந்து தூர வைக்க (Keep Kids Away from Internet)

குழந்தைகள் தொடர்ந்து ஃபோன் கேம்கள், வீடியோக்கள் பார்த்தால், அவர்களை இணையத்திலிருந்து தற்காலிகமாக தூர வைக்க ஏர்ப்ளேன் மோட் பயன்படுத்தலாம். இதனால் ஆன்லைன் விளம்பரங்கள், தேவையற்ற காண்டெண்ட்டுகள் தடுக்கப்படும்.

5. வேகமாக சார்ஜ் செய்யும் (Fast Charging)

ஃபோன் மெதுவாக சார்ஜ் ஆகிறது என்றால் ஏர்ப்ளேன் மோட் ஆன் செய்து சார்ஜ் செய்யுங்கள். பின்னணியில் இயங்கும் நெட்வொர்க்குகள் மூடப்படுவதால், பேட்டரி வேகமாக சார்ஜ் ஆகும். 

ஏர்ப்ளேன் மோட் விமானத்திற்கு மட்டுமல்ல, உங்கள் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை எளிதாக்கும் ஒரு சூப்பர் டூலாகும். இந்த மறைக்கப்பட்ட பயன்களைப் பயன்படுத்தி உங்கள் மொபைல் போனின் பேட்டரி ஆயுள் மற்றும் தனிப்பட்ட நன்மைகளை பெற்றுக்கொள்ளுங்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.