4வது டெஸ்டில் இந்தியாவை தோல்வி பாதைக்கு தள்ளிய இங்கிலாந்து, ஆனால் ஒரு வாய்ப்பு இருக்கு..!!

India vs England, 4th Test : இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டிராஃபோர்ட் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்திய அணிக்கு கட்டாயம் வென்றாக வேண்டிய போட்டி. இல்லையென்றால் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இழக்க நேரிடும். குறைந்தபட்சம் இப்போட்டியை டிரா செய்தால் கூட கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால், அப்படியான சூழல் இப்போதைக்கு இந்திய அணிக்கு இல்லை. மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் கை ஓங்கியுள்ளது, அந்த அணி வெற்றிப்பாதையிலும், இந்திய அணி தோல்விப்பாதையிலும் உள்ளன.

இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 358 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 61 ரன்களும், ஜெய்ஷ்வால் 58, ரிஷப் பந்த் 54 ரன்களும் ஆட்டமிழந்தனர். அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸ் ஆடி வருகிறது. 3ம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 544 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஜோ ரூட் 150 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவருக்கு பக்கபலமாக விளையாடிய கிராவ்லி 84, பென் டக்கெட் 94, ஓலி போப் 71 ரன்களும் குவித்தனர். அதாவது இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எல்லோருமே வெகு சிறப்பாக விளையாடி உள்ளனர், பென் ஸ்டோக்ஸ் 77 ரன்களுடன் விக்கெட் இழக்காமல் உள்ளார். அவர் இன்று பேட்டிங் செய்ய உள்ளார். 

ஒட்டுமொத்தமாக பார்கும்போது இங்கிலாந்து அணியினர் இந்திய அணியின் பந்துவீச்சை சர்வசாதாரணமாக எதிர்கொண்டு விளையாடுகின்றனர். ஒருநாள் போட்டியில் விளையாடுவது போல் அவர்களின் ஷாட்டுகள் இருக்கின்றனர். அவர்களாகவே ஏதாவது தவறு செய்து ஆட்டமிழந்தால் மட்டுமே இந்திய அணிக்கு விக்கெட் என்ற நிலையே நீட்டிக்கிறது. அந்தளவுக்கு இந்திய அணியின் பந்துவீச்சு மிக மோசமாக உள்ளது. ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் முன்னணி பந்துவீச்சாளர்களாக இந்திய அணியில் இருந்தும் எதிர்பார்த்தளவுக்கு விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை. 

இவர்களே இப்படி இருக்கும்போது மற்ற பவுலர்களை பற்றி யோசிக்கவே வேண்டாம், வழக்கம்போல் ரவீந்திர ஜடேஜா தன் பங்குக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது இந்திய அணியின் பேட்டிங், பவுலிங் இரண்டும் மிக மோசமாகவே இருந்திருக்கிறது. இன்று நடக்கும் நான்காவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி திடீர் எழுச்சி அடைந்தால் மட்டுமே இப்போட்டியை குறைந்தபட்சம் டிரா செய்வதற்கான வாய்ப்பு உள்ளது. அதாவது, இன்றும் நாளையும் இந்திய அணி பேட்டிங் செய்ய வாய்ப்புள்ளது. அப்போது விக்கெட்டுகளை சீக்கிரம் இழக்காமல் இருந்தாலே போட்டியை டிரா செய்துவிடலாம். அதையே இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்களும் எதிர்பார்த்துள்ளனர். 

மேலும் படிங்க: குப்பை பந்துவீச்சு’ பும்ராவை விளாசி தள்ளிய ரவி சாஸ்திரி

மேலும் படிங்க: ஆர்சிபி வீரர் மீது POCSO வழக்கு.. கிரிக்கெட் வீராங்கனையை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.