காசாவிலிருந்து துருக்கி தப்பி சென்று மறுமணம் செய்து கொண்ட ஹமாஸ் முன்னாள் தலைவர் சின்வரின் மனைவி

டெல் அவிவ்: பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்தவர் யாஹ்யா சின்வர். இவருக்கும் சமர் முகமது அபு ஜாமருக்கும் கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் சின்வர் உயிரிழந்தார்.

சின்வரின் மனைவி சமர் தனது குழந்தைகளுடன் வேறு ஒரு பெண்ணின் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி ரபா எல்லை வழியாக எகிப்துக்கு தப்பிச் சென்றுள்ளார். அங்கிருந்து துருக்கியில் வசித்து வந்த அவர், தனது கணவரின் மரணத்துக்குப் பிறகு அந்நாட்டைச் சேர்ந்த ஒருவரை மறுமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக போக்குவரத்து வசதி, உயர்மட்ட அதிகாரிகள் ஒத்துழைப்பு மற்றும் அதிக அளவு பணம் தேவைப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சின்​வர் மரணத்​துக்​குப் பிறகு அவருடைய சகோ​தரர் முகமது சின்​வர் ஹமாஸ் தலை​வ​ராக பொறுப்​பேற்​றார். பின்​னர் அவரும் இஸ்​ரேல் தாக்​குதலில் கொல்​லப்​பட்​டார். இதனிடையே, முகமது சின்​வரின் மனைவி நஜ்​வா​வும் ரபா எல்லை வழி​யாக காசாவை விட்டு வெளி​யேறி​விட்​ட​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. ஆனால் அவர் எங்கு இருக்​கிறார் என்று தெரிய​வில்​லை. இந்த 2 பெண்​களுமே தங்​களு​டைய கணவரின் மரணத்​துக்கு முன்பே காசாவை விட்டு வெளி​யேறி​யதாக தகவல்​கள் கூறுகின்​றன.

காசா மீதான இஸ்​ரேல் ராணுவத்​தின் போர் 21 மாதங்​களாக தொடர்​கிறது. இது​வரை 59 ஆயிரம் பாலஸ்​தீனர்​கள் உயி​ரிழந்​துள்​ள​தாக காசா சுகா​தார அமைச்​சகம் தெரி​வித்​துள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.