சென்னை: தமிழ்நாட்டில், தெருநாய்களின் தொல்லை அதிகமாகி வரும் நிலையில், நோய்வாய் பட்டுள்ள தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாட்டில் சென்னை உள்பட மாநிலம் முழுவதும் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையும் சுற்றி வளைத்து கடித்து துன்புறுத்தி வருவதுடன், தெருநாய்களில் நோய்வாய்ப்பட்ட தெருநாய்களின் கடிகளால் பலர் ரேபிஸ் நோய் பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்து வரும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன. இதனால் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் […]