டெல்லி: இந்திய வங்கிகளில் உரிமை கோரப்படாத வைப்புத்தொகை மட்டும் ரூ.67ஆயிரம் கோடி இருப்பதாக மத்தியஅரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்து உள்ளது. அதிக பட்சமாக பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ-ல் மட்டுமே ரூ.19,239 கோடி இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த அமர்வில் உறுப்பிர்களின் கேள்விக்கு பதில் அளித்த மத்திய நிதித்துறை இணையமைச்சர், இந்திய வங்கிகளில் ரூ.67,000 கோடி மதிப்புள்ள வைப்புத்தொகைகள்(deposit) உரிமை கோரப்படாமல் கிடப்பில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளார். மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் […]
