வாஷிங்டன்,
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இருந்து ஜெர்மனிக்கு போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் புறப்பட்டு சென்றது. விமானம் 5 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது இடதுபக்க என்ஜினில் பழுது ஏற்பட்டது. இதைக்கவனித்த விமானிகள், உடனடியாக வாஷிங்டன் விமான நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். பின்னர், விமானிகள் ” மே டே” அறிவித்தனர்.
மே டே என்பது விமானம் கடுமையான ஆபத்தில் இருக்கும்போது பயன்படுத்தப்படும் சர்வதேச அவசர அழைப்புச் சொல் ஆகும். மேடே அழைப்பு விடுக்கப்பட்டதால், விமானத்தை உடனடியாக தரையிறக்க விமானக்கட்டுப்பாட்டு அலுவலர்கள் அனுமதி கொடுத்தனர். இதனால் மீண்டும் வாஷிங்டன் விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. உரிய நேரத்தில் விமானத்தை தரையிறக்க அனுமதி கொடுக்கப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
கடந்த ஜூன் 12ம் தேதி குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து பிரிட்டனின் லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 787 – 8 ட்ரீம் லைனர் இரட்டை என்ஜின் விமானம் விபத்தில் சிக்கியது. இதைத்தொடர்ந்து போயிங் விமானம் அடிக்கடி விபத்தில் சிக்கி வருவது பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.