Tamil Nadu Government, Free AI training : தமிழ்நாடு அரசு 18 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கும் மிகப்பெரிய குட் நியூஸை வெளியிட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவைப் (Artificial Intelligence) பயன்படுத்தி இலவசமாக செயிலியை உருவாக்கும் பயிற்சியை வழங்க உள்ளது. இதன் மூலம் மிகப்பெரிய தொழில் வாய்ப்புகளை இளைஞர்கள் உருவாக்கிக் கொள்ள முடியும். வெளிச்சந்தையில் பல ஆயிரங்கள் செலவழித்துக் கற்றுக்கொள்ள வேண்டிய பயிற்சியை தமிழ்நாடு அரசின் தொழில் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் இலவசமாக வழங்க உள்ளது.
இது தொடர்பாக தொழில் முயற்சி மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு இரண்டு நாள் “செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி செயலி உருவாக்கம்” பயிற்சி முகாம் நடக்க உள்ளது என தெரிவித்துள்ளது. இந்த பயிற்சியானது சென்னையில் உள்ள தொழில் முயற்சி மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் (EDII), நடக்க உள்ளது.
தொழில் முயற்சி மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மற்றும்மற்றும் StratSchool இணைந்து, “செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி செயலி உருவாக்கம்” எனும் இரண்டு நாள் முழுநேர பயிற்சி முகாமை 05.08.2025 முதல் 06.08.2025 வரை (காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை), EDII-TN வளாகத்தில், நடக்கிறது.
பயிற்சி முகாம்
பங்கேற்பாளர்கள் தங்கள் யோசனைகளை செயலில் பயனடையும் Al prototypes (App) ஆக மாற்றக் கற்றுக்கொள்வார்கள். முன்னணி ஸ்டார்ட்அப்கள் பயன்படுத்தும் No-Code / Low-Code Al கருவிகள் பற்றிய பயிற்சி.
கீழ்க்கண்ட பிரபலமான தளங்களை கொண்டு நேரடி பயன்பாட்டு செயலிகள் உருவாக்கம்:
– ChatGPT / Gemini Pro / NotebookLM
– Firebase/Glide / Zapier / Lovable / Replit / Bolt
– Prompt Engineering முறைகள்
செயல்முறை பயிற்சி – வழிகாட்டியுடன் படிப்படியாக கற்றல்
– AI அடிப்படையிலான வலைத்தளங்கள் மற்றும் செயலிகள் உருவாக்கம்
– தனிப்பட்ட மற்றும் தொழில்துறை தேவைகளுக்கான தானியங்கி முறைகள்
-கல்வி, சுகாதாரம், நிதி, சில்லறை வணிகம் போன்ற துறைகளில் பயன்பாட்டு மாதிரிகள் உருவாக்கம்
– தயாரிப்பு சிந்தனை மற்றும் ஸ்டார்ட்அப் மனப்பாங்கு
– உலகளாவிய சிக்கல்களுக்கு தீர்வு காணும் AI MVP உருவாக்கம்
-Problem-Solution Fit, JTBD போன்ற ஸ்டார்ட்அப் கோட்பாடுகள்
– உங்கள் App-இன் prototype-ஐ முதன்மை வழிகாட்டிகள், முதலீட்டாளர்கள் முன் சமர்ப்பிக்கும் திறன்
தொழில் வளர்ச்சி வழிகள்
– மாணவர்கள், நிறுவனர் ஆனவர்கள், content creators, ஆரம்ப நிலை தொழிலாளர்கள் ஆகியோருகேற்ப்ப பொருத்தமானது
– உங்கள் பேராசிரியர் சான்றிதழ் / போட்டிப் பதிவுகளில் காண்பிக்க AI மாதிரிகள் / Product Managers, Solopreneurs பயன்படுத்தும் கருவிகள் கற்றல்
– வேலை வாய்ப்பு, ஹேக்கத்தான் போட்டிகள் மற்றும் லிங்க்ட்இன் தளங்களில் செயல்படுத்தும் வாய்ப்புகள்
தொழில் முனைவு பாதைகள்
– AI அடிப்படையிலான வணிகம் அல்லது ஃப்ரீலான்சிங் தொடங்க அடித்தளம் அமைத்தல்.
– குறைந்த செலவில், விரைவில் உங்கள் ஸ்டார்ட்அப் யோசனைகளை பரிசோதித்தல்
தகுதியுடையவர்கள்:
மாணவர்கள், பட்டதாரிகள், தொழில் தொடங்க விரும்பும் நபர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் – 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். முன்பதிவு அவசியம. அரசு சான்றிதழ் வழங்கப்படும்.