புலவாயோ,
ஜிம்பாப்வேயில் நடந்த முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய நியூசிலாந்து அணி அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன்படி நியூசிலாந்து – ஜிம்பாப்வே அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி புலவாயோவில் இன்று தொடங்குகிறது. நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம், இந்த மாத தொடக்கத்தில் ஏற்பட்ட தோள்பட்டை காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததால் முதலாவது டெஸ்டில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சான்ட்னெர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜிம்பாப்வே அணி கிரேக் எர்வின் தலைமையில் களம் இறங்குகிறது.
இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை பேன்கோர்டு செயலியில் பார்க்கலாம். இந்த தொடர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குட்பட்டது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.