பிரளய் ஏவுகணை சோதனை வெற்றி: டிஆர்டிஓ-வை பாராட்டிய அமைச்சர்

புதுடெல்லி: இந்​தி​யா​வின் பாது​காப்பு அமைப்பை மேலும் பலப்​படுத்​தும் வகை​யில், பிரளய் ஏவு​கணை சோதனை வெற்​றிகர​மாக பரிசோ​திக்​கப்​பட்​டுள்​ளது. பாது​காப்பு ஆராய்ச்சி மற்​றும் மேம்​பாட்டு அமைப்பு (டிஆர்​டிஓ), ஒடிசா கடற்​கரை​யில் உள்ள டாக்​டர் ஏபிஜே அப்​துல் கலாம் தீவில் இருந்து இந்த சோதனை வெற்​றிகர​மாக நடத்​தப்​பட்​ட​தாக மத்​திய பாது​காப்பு அமைச்​சர் ராஜ்​நாத் சிங் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து பாது​காப்பு அமைச்​சகத்​தின் அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ள​தாவது: பிரளய் ஏவு​கணை​யின் இரண்டு தொடர்ச்சியான சோதனை​கள் அப்​துல் கலாம் தீவில் ஜூலை 28 மற்​றும் 29 தேதி​களில் வெற்​றிகர​மாக நடத்தி முடிக்​கப்​பட்​டுள்​ளன. ஏவு​கணை அமைப்​பின் அதி​கபட்ச மற்​றும் குறைந்​த​பட்ச தாக்​கும் திறனை மதிப்​பிடு​வதன் ஒரு பகு​தி​யாக இந்த சோதனை​கள் நடத்​தப்​பட்​டன.

குறிப்​பிட்ட இலக்​கு​களை துல்​லிய​மாக தாக்கி அழித்​ததையடுத்து இந்த ஏவு​கணை சோதனை​யின் அனைத்து நோக்​கங்​களும் பூரத்தி செய்​யப்​பட்​டன. இவ்​வாறு அந்த அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

பிரளய் உள்​நாட்​டில் உரு​வாக்​கப்​பட்ட திட எரிபொருள் குவாசி-​பாலிஸ்​டிக் ஏவு​கணை​யாகும். இது, பல்​வேறு இலக்​கு​களை குறி​வைத்து பல வகை​யான ஆயுதங்​களை சுமந்து சென்று தாக்​கும் திறன் கொண்​டது. ஏவு​கணை சோதனையை வெற்​றிகர​மாக நடத்திக் காட்​டிய டிஆர்​டிஓ-வுக்கு மத்​திய அமைச்​சர் ராஜ்​நாத் சிங் பாராட்டு தெரி​வி்த்​தார். இந்த ஏவு​கணை எதிரி​களிட​மிருந்து வரும் அச்​சுறுத்​தல்​களை ஆயுதப்​படைகள் வலிமை​யாக எதிர்​கொள்ள உதவும்​ என்​று அவர் தெரி​வித்​துள்​ளார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.