துபாய்,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டி20 கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் ஓராண்டுக்கு மேலாக ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் முதலிடத்தில் இருந்தார். சமீபத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடாததால் அதற்குரிய புள்ளிகளை இழந்த டிராவிஸ் ஹெட் 2-வது இடத்துக்கு (814 புள்ளி) இறங்கியுள்ளார்.
இதனால் 2-வது இடத்தில் இருந்த இந்தியாவின் அபிஷேக் ஷர்மா (829 புள்ளி) முதலிடத்தை எட்டியுள்ளார். விராட் கோலி, சூர்யகுமாருக்கு பிறகு டி20 கிரிக்கெட்டில் ‘நம்பர் ஒன்’ அரியணையில் ஏறிய 3-வது இந்தியர் ஆவார். மற்றொரு இந்திய வீரர் திலக் வர்மா 3-வது இடத்தில் (804 புள்ளி) உள்ளார். இதன் பந்து வீச்சாளர் வரிசையில் டாப்-3 இடங்களில் ஜேக்கப் டப்பி (நியூசிலாந்து), அடில் ரஷித் (இங்கிலாந்து), வருண் சக்ரவர்த்தி (இந்தியா) உள்ளனர்.