613 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பெற்றனர்: சேர்க்கை ஆணைகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்

சென்னை: எம்​பிபிஎஸ், பிடிஎஸ் படிப்​பு​களுக்​கான கலந்​தாய்​வில் 7.5 சதவீத உள் இடஒதுக்​கீட்​டில் 613 அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்​லூரி​களில் சேரு​வதற்​கான ஆணை​களை சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் வழங்​கி​னார். தமிழகத்​தில் அரசு மற்​றும் தனி​யார் மருத்​து​வக் கல்​லூரி​களில் அரசு ஒதுக்​கீட்​டுக்கு 6,600 எம்​பிபிஎஸ் இடங்​கள், 1,583 பிடிஎஸ் இடங்கள் உள்​ளன.

இதில் 7.5 சதவீத உள் இடஒதுக்​கீட்​டில் அரசு பள்ளி மாணவர்​களுக்கு 494 எம்​பிபிஎஸ் இடங்​கள், 119 பிடிஎஸ் இடங்​கள் வழங்​கப்படுகின்​றன. இந்​நிலை​யில், சிறப்பு பிரிவு (மாற்​றுத்​திற​னாளி, முன்​னாள் ராணுவ வீரர்​களின் வாரிசு, விளை​யாட்டு வீரர்) சிறப்பு பிரிவு கலந்​தாய்வு மற்​றும் 7.5 சதவீத உள் இடஒதுக்​கீட்டு இடங்​களுக்கு அரசு பள்ளி மாணவர்​களுக்​கான கலந்​தாய்வு நேரடி​யாக நேற்று சென்னை அண்ணா சாலை​யில் உள்ள அரசு பன்​னோக்கு உயர் சிறப்பு மருத்​து​வ​மனை வளாகத்​தில் நடந்​தது.

இதில் தேர்​வான மாணவ, மாணவி​களுக்கு கல்​லூரி​களில் சேரு​வதற்​கான ஆணை​களை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் வழங்கினார். இதன்​படி 7.5 சதவீத உள் இடஒதுக்​கீட்​டின் கீழ் விவ​சா​யி, கூலி தொழிலாளி உட்பட ஏழை குடும்​பத்தை சேர்ந்த 613 அரசு பள்ளி மாணவர்​கள் மருத்​துவ படிப்​பில் சேர்ந்​துள்​ளனர்.

மருத்துவம் படிக்க தேர்வான தாய் அமுதவல்லி.
உடன் மகள் சம்யுக்தா. படம்: எல்.சீனிவாசன்

இந்​நிகழ்​வில் சுகா​தா​ரத்​துறை செயலர் ப.செந்​தில்​கு​மார், மருத்​து​வக்​கல்வி மற்​றும் ஆராய்ச்சி இயக்​குநர் (பொ) தேரணி​ராஜன், தமிழ்​நாடு அரசு பன்​னோக்கு உயர்​சிறப்பு மருத்​து​வ​மனை இயக்​குநர் மணி உள்​ளிட்​டோர் உடன் இருந்​தனர். இதே​போல் முதல் சுற்று பொது கலந்​தாய்வு https://tnmedicalselection.net/ என்ற சுகா​தா​ரத்​துறை இணை​யதளத்​தில் நேற்று காலை காலை 10 மணிக்கு தொடங்​கியது.

ஆக.5-ம் தேதி தரவரிசை பட்​டியல் அடிப்​படை​யில் கல்​லூரி​களில் இடங்​கள் ஒதுக்​கீடு செய்​யப்​பட​வுள்​ளது. இடஒதுக்​கீடு விவரங்​கள் ஆக.6-ம் தேதி வெளி​யாகும். ஆக.11-ம் தேதி மாலை 5 மணிக்​குள் இடஒதுக்​கீடு பெற்​ற கல்​லூரி​களில்​ சேர வேண்​டும்​.

மருத்துவராகும் 49 வயது பெண்: தென்​காசி மாவட்​டத்தை சேர்ந்த பிசி​யோதெரபிஸ்ட் அமுதவல்லி (49). இவரது மகள் சம்​யுக்தா கிரு​பாலனி. நீட் தேர்​வுக்கு சம்​யுக்தா தயா​ராகி வந்த நிலை​யில், மகளின் வழி​காட்​டு​தலின்​படி, மாற்​றுத் திற​னாளி தாயா​ரான அமுதவல்​லி​யும் நீட் தேர்​வு எழுதி 147 மதிப்​பெண் பெற்றார். மகள் 450 மதிப்​பெண்​களும் பெற்​றார்.

இரு​வரும் எம்​பிபிஎஸ் படிப்​புக்கு ஆன்​லைனில் விண்​ணப்​பித்​தனர். அமுதவல்லி மாற்​றுத்​திற​னாளி என்​ப​தால், சிறப்பு பிரிவு கலந்​தாய்​வில் அவருக்கு விருதுநகர் அரசு மருத்​து​வக் கல்​லூரி​யில் எம்​பிபிஎஸ் இடம் கிடைத்​துள்​ளது. மகள் சம்​யுக்தா ஆன்​லைனில் நடை​பெறும் பொது பிரிவு கலந்​தாய்​வில் பங்​கேற்​கிறார். அவருக்​கும் இடம் கிடைக்க வாய்ப்​புள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.