490Km ரேஞ்ச் வழங்கும் கியா காரன்ஸ் கிளாவிஸ் EV ஜூலை 15ல் அறிமுகம் | Automobile Tamilan

கியா இந்தியாவில் தயாரித்துள்ள காரன்ஸ் கிளாவிஸ் EV (Carens Clavis) எம்பிவி ரக மாடல் 51.4Kwh பேட்டரி பேக்குடன் முழுமையான சார்ஜில் 490கிமீ கொண்டதாக விற்பனைக்கு ஜூலை 15 ஆம் தேதி வரவுள்ளது. 7 இருக்கை கொண்ட கேரன்ஸ் எலக்ட்ரிக் மாடலில் ஏற்கனவே சந்தையில் உள்ள ஹூண்டாய் க்ரெட்டா இவி காரில் உள்ள பேட்டரி பேக்கினை பகிர்ந்து கொள்ளுகின்ற கியா கிளாவிஸ் இவி மாடல் 51.4Kwh பேட்டரி பேக் 490 கிமீ வெளிப்படுத்தும் என டீசர் மூலம் … Read more

“தமிழகத்தில் 4 ஆண்டுகளில் 63.6% மின் கட்டணம் உயர்வு” – தொழில்முனைவோர் கூட்டமைப்பினர் விரக்தி

கோவை: “தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மின்கட்டணம் 63.6 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அரசு உடனடியாக இந்த ஆண்டு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்” என தமிழ்நாடு அனைத்து தொழில்முனைவோர் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு அனைத்து தொழில்முனைவோர் கூட்டமைப்பின் தலைவர் முத்து ரத்தினம், செயலாளர் ஜெயபால் ஆகியோர் கோவை பிரஸ் கிளப் வளாகத்தில் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழ்நாட்டில் ‘எம்எஸ்எம்இ’ தொழில்துறை சார்ந்தவர்கள் எண்ணிக்கை 46 லட்சத்து 45 … Read more

பெண்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றும் தமிழகம் உள்ளிட்ட 18 மாநிலங்கள்: செலவு என்ன?

புதுடெல்லி: பெண்களை மையப்படுத்தி தேர்தல் வாக்குறுதிகளை தமிழகம் உள்ளிட்ட 18 மாநிலங்கள் நிறைவேற்றி வருகின்றன. இதற்கான செலவு 2025 – 26 நிதியாண்டில் ரூ.1 லட்சம் கோடியை தாண்டும் என கிரிசில் ரேட்டிங்ஸ் எனும் தனியார் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. ஒவ்வொரு முறை தேர்தலிலும் போட்டியிடும் அரசியல் கட்சிகள் பெண்களுக்கான வாக்குறுதிகளை அதிகரிப்பது வழக்கமாகி வருகிறது. இதன் பின்னணியில் பெண்களின் வாக்குகளால் ஆட்சியை கைப்பற்ற முடியும் என்பது நம்பிக்கையாக உள்ளது. ஆண்களை விட பெண்கள் அதிகமாக வாக்குப்பதிவு செய்ய … Read more

‘கடையை சாத்திக் கொண்டு தென் ஆப்பிரிக்கா செல்ல நேரிடும்’ – மஸ்க்கை மிரட்டும் ட்ரம்ப்?

வாஷிங்டன்: உலகின் ‘நம்பர் 1’ பணக்காரரும் டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ-வுமான எலான் மஸ்க்கை அமெரிக்காவில் இருந்து நாடு கடத்துவது தொடர்பான பத்திரிகையாளர் கேள்விக்கு ‘அது குறித்து பார்க்க வேண்டும்’ என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதில் அளித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் எலான் மஸ்க் என இருவரும் உற்ற நண்பர்களாக இருந்தனர். அதிபர் தேர்தலில் ட்ரம்ப் தரப்புக்கு நேரடியாக உதவி இருந்தார் மஸ்க். அந்த நட்புறவு அண்மையில் முறிவுக்கு வந்தது. அமெரிக்க அரசு … Read more

கொலை செய்தது உங்கள் அரசு.. "SORRY" என்பது தான் உங்கள் பதிலா? எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி!

முதல்வர் மு.க. ஸ்டாலினின் தொலைபேசி உரையாடல் அலட்சியத்தின் உச்சம் என்றும் கொலை செய்தது உங்கள் அரசு “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். 

11 பேர் இறப்புக்கு ஆர்சிபி அணியே முழு காரணம்.. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு தடையா?

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 17 ஆண்டுகள் காத்திருப்பை 18ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி நிறைவு செய்தது. தங்களது முதல் கோப்பையை விமர்சையாக கொண்டாட நினைத்து நிகழ்ச்சிகளை பெங்களூருவில் ஏற்பாடு செய்தனர். அவசர அவசரமாக நடத்தப்பட்ட இந்த வெற்றி விழா சரியான திட்டமிடல் இல்லாமல் நடத்தப்பட்டது. இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. 11 ரசிகர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர். இச்சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாகியது.  இந்த தூயர சம்பவத்தை தொடர்ந்து விசாரணை நடைபெற்று … Read more

Desinguraja 2 : “உன்னையெல்லாம் யார்டா வில்லனா போட்டது என எழில் சார் திட்டினார்" – ரவி மரியா

இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் பி.ரவிசந்திரன் தயாரிப்பில், இயக்கிய இயக்குநர் எழில் இயக்கியிருக்கும் படம் தேசிங்கு ராஜா-2. ஜூலை 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார். நேற்று இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. Desinguraja-2 audio launch அதில் பேசிய ரோபோ சங்கர், “கால் நூற்றாண்டையும் கடந்து காமெடியில் டஃப் கொடுக்கும் ஒரே இயக்குநர் எழில்சார். குழந்தைகளுக்கு மத்தியில் எனக்கான அங்கீகாரம் கிடைத்தது ‘வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில்தான். … Read more

திருப்புவனம் இளைஞர் காவல் நிலைய மரண வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…

திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் மரண வழக்கை சிபிஐக்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில், கடந்த 28-6-2025 அன்று வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்பவர், திருப்புவனம் காவல் நிலையத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு நிலையில் அதனை சிபிஐக்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் : விசாரணையின் போது காவலர்கள் நடத்திய தாக்குதல்தான் அஜித்குமார் மரணத்துக்குக் … Read more

விம்பிள்டன் டென்னிஸ்: நம்பர் 1 வீராங்கனை சபலென்கா 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

லண்டன், ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் மிகவும் கவுரவமிக்கதும், முதன்மையானதுமான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நேற்று தொடங்கியது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் நம்பர் 1 வீராங்கனை அரினா சபலென்கா (பெலாரஸ்), கனடாவின் கார்சன் பிரான்ஸ்டின் உடன் மோதினார். இதில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய … Read more