தலைக்கு வந்தது… ஓட்டுநர் இருக்கையை கீழே இறக்கியதால் துப்பாக்கி குண்டில் இருந்து தப்பிய நபர்…

மலேசியாவின் பினாங்கு பகுதியில் நடைபெற்ற ஒரு துப்பாக்கிச் சூட்டில் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த நபர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார். இதுகுறித்து பினாங்கு காவல்துறை கூறியுள்ளதாவது, “பினாங்கின் சுங்கை நியோரில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளிக்கு வெளியே செவ்வாய்க்கிழமையன்று தனது குழந்தையை அழைத்துச் செல்ல ஒருவர் காரில் வந்துள்ளார். குழந்தை வரும் வரை ஓட்டுநர் இருக்கையை சற்று சாய்த்து அமர்ந்திருந்த நிலையில், இருசக்கர வாகனத்தில் அங்கு வேகமாக வந்த இரண்டு இளைஞர்களைக் கண்டதும் தனது காரின் இருக்கையை மேலும் சாய்த்து … Read more

"விஜய் அண்ணா; உங்களை நம்பித்தான்" கந்துவட்டி கொடுமையால் த.வெ.க. பிரமுகர் தற்கொலை! உருக்கமான கடிதம்

புதுச்சேரி, புதுச்சேரி கொசப்பாளையத்தைச் சேர்ந்தவர் விக்ரம். (வயது 34.) த.வெ.க. பிரமுகரான இவர் கறிக்கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி மேரி ஸ்டோரீஸ். கடந்த சில மாதங்களுக்கு முன்பு விக்ரம் மினிலாரி ஒன்றை விலைக்கு வாங்கினார். இதற்காக பல இடங்களில் கந்து வட்டிக்கு கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு விக்ரம் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். எனவே அவரால் சரிவர வேலைக்கு செல்ல முடியவில்லை. இதனால் வருமானம் … Read more

உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் லீக்: யுவராஜ் சிங் தலைமையில் களமிறங்கும் இந்திய அணி

மும்பை, ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் 2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் லீக் தொடர் வரும் 18-ம் தேதி தொடங்க உள்ளது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 6 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. இந்த சீசன் இங்கிலாந்தில் உள்ள பிர்மிங்காம், நார்தாம்டன், லெய்செஸ்டர் மற்றும் லீட்ஸ் ஆகிய மைதானங்களில் நடைபெறவுள்ளது. ஆறு அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் ரவுண்ட்-ராபின் வடிவத்தில் நடைபெறும். … Read more

அமெரிக்கா: நைட் கிளப்புக்கு வெளியே துப்பாக்கி சூடு; 4 பேர் பலி

சிகாகோ, அமெரிக்காவின் சிகாகோ நகரில் ரிவர் நார்த் பகுதியில் உணவு விடுதிகள் மற்றும் பார்களுடன் கூடிய நைட் கிளப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், நைட் கிளப் ஒன்றுக்கு வெளியே திரண்டிருந்த மக்களை நோக்கி நேற்றிரவு சிலர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இதன்பின்பு, வாகனத்தில் வந்த அந்நபர்கள் உடனடியாக தப்பி விட்டனர். இதனை தொடர்ந்து தெருவெல்லாம் அழுகுரலாகவும், ரத்தம் வழிந்தோட மக்கள் அலறியபடியும் நாலாபுறமும் ஓடினர். சிலர், யாரேனும் உயிருடன் இருக்கிறார்களா? என தேடினர். அவர்களில் … Read more

டிரம்ப் கொண்டு வந்த வரிக்குறைப்பு மசோதா! சர்ச்சைகளுக்கு மத்தியில் நிறைவற்றம்..

Donald Trump Tax Big Beautiful Bill Passed : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட வரிக்குறைப்பு மசோதா பிரிதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்ப்பட்டுள்ளது.

டெக் வல்லுநர்களுக்காக புதிய தீவை உருவாக்கும் இந்திய வம்சாவளி – யார் இந்த பாலாஜி ஸ்ரீநிவாசன்?

இந்திய வம்சாவளி தொழில்நுட்ப தொழில்முனைவோரான பாலாஜி எஸ். ஸ்ரீநிவாசன் கடந்த வருடம் சிங்கப்பூர் அருகே உள்ள ஒரு தனியார் தீவை வாங்கியுள்ளார். இந்த தீவு தான் ஒரு நாடாக மாறபோகிறது. இந்த தீவை, புதிய நாடாக உருவாக்கி, தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனர்களுக்காக அளிக்க பணிகள் நடந்து வருகிறது. நெட்வொர்க் ஸ்டேட் கனவு “Network State” என்ற இந்த திட்டம் பாலாஜியின் கனவாக மட்டுமன்றி, ஆன்லைன் மூலமாக ஒரு டிஜிட்டல் சமூகத்தையே ஒருங்கிணைக்கும் நோக்கத்தை கொண்டுள்ளது. … Read more

ஓசூர் அருகே சிறுவனை கடத்திக் கொலை செய்த வழக்கில் கல்லூரி மாணவி உட்பட 3 பேர் கைது

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே 8-ம் வகுப்பு மாணவரை காரில் கடத்திக் கொலை செய்த வழக்கில் கல்லூரி மாணவி மற்றும் இரு இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர். கல்லூரி மாணவி தனது ஆண் நண்பருடன் தனிமையில் இருந்ததை சிறுவன் பார்த்துவிட்டதால், சிறுவனை கடத்திக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகேவுள்ள மாவநட்டியைச் சேர்ந்த சிவராஜ் என்பவர் மகன் ரோகித் (13), இவர் அப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். … Read more

ஸ்ரீநகரில் அமைதியாக நடைபெற்ற மொஹரம் ஊர்வலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநரில் இன்று நடைபெற்ற மொஹரம் ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான ஷியா முஸ்லிம்கள் பங்கேற்றனர். ஏழாம் நூற்றாண்டில் முகமது நபியின் பேரன் இமாம் ஹுசைன் கொல்லப்பட்டதை நினைவுகூரும் வகையில், ஸ்ரீநகரில் இன்று (ஜூலை 4) மொஹரம் ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான ஷியா முஸ்லிம்கள் கலந்து கொண்டு, இஸ்லாமிய ஆதரவு கோஷங்கள் மற்றும் ஈரான் ஆதரவு கோஷங்களை எழுப்பியபடி சென்றனர். மொஹரம் ஊர்வலத்தை முன்னிட்டு ஸ்ரீநகரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தொடர்ந்து 3-வது ஆண்டாகவும், … Read more

திபெத் விவகாரத்தில் தலையிடுவதை இந்தியா நிறுத்திக்கொள்ள வேண்டும்: சீனா

பெய்ஜிங்: திபெத் விவகாரத்தில் தலையிடுவதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சீனா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று (ஜூலை 4) இந்தியாவுக்கான முக்கிய செய்தியை வெளியிட்டுள்ள சீன வெளியுறவு அமைச்சகம், “உள்நாட்டு விவகாரங்களில் தலையிட திபெத் பிரச்சினையைப் பயன்படுத்துவதை இந்தியா நிறுத்தும் என்று சீனா நம்புகிறது. மேலும், இரு நாடுகளுக்கு இடையேயான உறவின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்துவதை இந்தியா தவிர்க்கும் என்றும் நம்புகிறது.” என்று தெரிவித்துள்ளது. திபெத்திய புத்த மதத் தலைவரான 14-வது தலாய் லாமா … Read more

Tatkal Ticket Scam | தட்கல் டிக்கெட் முன்பதிவு எச்சரிக்கை.. ஒரு புதிய மோசடி ஆரம்பித்த முகவர்கள்

Indian Railways Latest News In Tamil: தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள் எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் IRCTC கணக்கை விற்பனை செய்யாதீர்கள். போலி ஆதார் அட்டை மற்றும் போலி ஐ‌ஆர்‌சி‌டி‌சி கணக்கு மூலம் மோசடி செய்யப்படலாம். ரயில் டிக்கெட் கள்ளச்சந்தை குறித்து கவனமாக இருங்கள்.