தமிழ் மாநில பகுஜன் சமாஜ் – புதிய கட்சியை தொடங்கினார் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்!

சென்னை: மறைந்த ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, ‘தமிழ் மாநில பகுஜன் சமாஜ்’ என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளார். கட்சியின் கொடியையும் அவர் இன்று அறிமுகம் செய்தார். பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5-ம் தேதி சென்னையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவரது உடல் சென்னைக்கு அருகில் உள்ள பொத்தூரில் அடக்கம் செய்யப்பட்டது. ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்து இன்றுடன் … Read more

20 ஆண்டுகளுக்குப் பிறகு 'மராத்தி'யால் ஒன்றிணைந்த உத்தவ் – ராஜ் தாக்கரே: பின்னணி என்ன?

மும்பை: சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தவ் தாக்கரேவும், ராஜ் தாக்கரேவும் பொது மேடையில் ஒன்றாக இணைந்து தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினர். தொடர்ந்து ஒன்றிணைந்து செயல்படப் போவதாகவும் அறிவித்துள்ளனர். மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ் தலைமையிலான, பாஜக – சிவ சேனா – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு, சமீபத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மும்மொழிக் கொள்கையை அறிமுகப்படுத்தியது. 3-வது மொழியாக இந்தி மொழி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு, உத்தவ் தாக்கரே … Read more

இனி ரயிலில் குப்பை போட்டால் அபராதம்! எவ்வளவு தெரியுமா?

ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் குப்பை போடுவது குற்றம் ஆகும். இதற்காக நீங்கள் அபராதம் செலுத்த வேண்டி இருக்கும். எவ்வளவு என்று தெரிந்து கொள்ளுங்கள்!

பறந்து போ, 3BHK, ஃபீனிக்ஸ்-ஒரே நாளில் வெளியான 3 படங்கள்! வசூலில் யார் டாப்?

Paranthu Po 3BHK Phoenix Box Office Collection : ஜூலை 4ஆம் தேதியான நேற்று, தமிழ் திரையுலகில் 3 திரைப்படங்கள் வெளியாகின. இதில், ரசிகர்களுக்கு எந்த படம் பிடித்தது என்பதையும், எந்த படம் அதிக வசூல் பெற்றிருக்கிறது என்பதையும் இங்கு பார்ப்போம்.  

Amazon Prime Day 2025: ரூ.10,000 -க்கும் குறைந்த விலையில், 5ஜி ஸ்மார்ட்போன்கள், இன்னும் பல சலுகைகள்

Amazon Prime Day Sale 2025: பிரபல ஆன்லைன் ஷாப்பிங் தளமான அமேசான் இந்தியா மீண்டும் ஒருமுறை தனது பிரைம் உறுப்பினர்களுக்காக இந்த ஆண்டின் மிகப்பெரிய விற்பனையான பிரைம் டே சேல் 2025 ஐக் கொண்டுவருகிறது. இந்த விற்பனை ஜூலை 12 ஆம் தேதி நள்ளிரவு முதல் தொடங்கி ஜூலை 14 ஆம் தேதி இரவு 11:59 மணி வரை நடைபெறும். இந்த முறை வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போன்கள், இயர்பட்ஸ் மற்றும் பல தயாரிப்புகளில் சிறந்த சலுகைகள் மற்றும் … Read more

அமெரிக்க விசா வைத்திருக்கும் இந்திய பயணிகள்… 17 நாடுகளுக்குள் விசா இல்லாமல் நுழையலாம்…

அமெரிக்காவுக்கு சென்று வரக்கூடிய விசா வைத்திருக்கும் இந்தியர்கள் தென் அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பா மற்றும் ஒரு சில ஆசிய நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும். இதற்கு, இந்திய பாஸ்போர்ட்டுடன் அமெரிக்காவுக்குள் பலமுறை சென்று வரத்தக்க காலாவதியாகாத விசா இருப்பது அவசியம். மேலும் அந்த விசாவை பயன்படுத்தி ஒருமுறையாவது அமெரிக்கா சென்றிருக்க வேண்டும் என்பது மட்டுமன்றி அந்த விசா முடிவதற்கு 6 மாத காலமாவது இருக்கவேண்டும். அவ்வாறு விசா வைத்திருக்கும் இந்திய பயணிகள் கூடுதலாக நிதி, சென்று … Read more

பீகாரில் அதிர்ச்சி; மகனை போன்று பிரபல தொழிலதிபர் 6 ஆண்டுகளுக்கு பின் படுகொலை

பாட்னா, 6 ஆண்டுகளுக்கு முன்பு, இவருடைய மகன் சுட்டு கொல்லப்பட்ட நிலையில், கெம்காவும் படுகொலை செய்யப்பட்டு உள்ளார். பீகாரின் பாட்னா நகரில் பா.ஜ.க.வின் மூத்த தலைவர் மற்றும் பிரபல தொழிலதிபரான கோபால் கெம்கா மர்ம நபர்களால் நேற்றிரவு சுட்டு கொல்லப்பட்டார். பாட்னாவின் காந்தி மைதான் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள டுவின் டவர் சொசைட்டி பகுதியில் அவருடைய வீடு அமைந்துள்ளது. அவர் ஒரு வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு திரும்பியபோது, வீட்டுக்கு வெளியே படுகொலை செய்யப்பட்டார். … Read more

அமெரிக்கா: தொடர் மழை, வெள்ளத்திற்கு 13 பேர் பலி

நியூயார்க், அமெரிக்காவின் தெற்கு-மத்திய டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் கூடிய தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. குவாடலூப் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு, நகரங்களுக்குள் புகுந்தது. இதில் பலர் சிக்கி கொண்டனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு உள்ளது. தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி 13 பேர் வரை பலியானார்கள். இந்நிலையில், 700-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கோடை கால முகாமுக்கு சென்றுள்ளனர். அவர்களில், 20-க்கும் … Read more

“அமித் ஷா பேசிய பிறகு வேறு பேசினாலும் அது சரியல்ல'' – முதலமைச்சர் வேட்பாளர் குறித்து இபிஎஸ்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு கால இடைவெளிகூட இல்லாததால், ஆளுங்கட்சியான தி.மு.க-வும், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க-வும் தேர்தல் வேலையை மும்முரமாகத் தொடங்கிவிட்டன. இப்போதைக்கு தி.மு.க கூட்டணி அப்படியேதான் இருக்கிறது. மறுபக்கம், அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி மட்டும் உறுதியாகியிருக்கிறது. ஒரு கட்டத்தில் அ.தி.மு.க-வுடன் தமிழக வெற்றி கழகம் கூட்டணிக்கு செல்லும் என்று பேச்சு அடிபட்ட வேளையில், அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி மீண்டும் உருவானதால் இனி விஜய், பா.ஜ.க அங்கம் வகிக்கும் அ.தி.மு.க கூட்டணியில் இணைவாரா … Read more

வானிலை முன்னறிவிப்பு: நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (ஜூலை 5) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூலை 5 ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு … Read more