33-வது பருவநிலை மாற்ற மாநாட்டை இந்தியா தலைமையேற்று நடத்தும்: பிரிக்ஸ் கூட்டறிக்கை

ரியோ டி ஜெனீரோ, பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில், 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில், இந்தியா, ரஷியா, பிரேசில், தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட உறுப்பு நாடுகள் கலந்து கொள்கின்றன. இதில் பங்கேற்பதற்காக, இந்தியா தரப்பில் பிரதமர் மோடி சென்றுள்ளார். பிரேசிலின் ஜனாதிபதி லுலா அழைப்பின்பேரில், அந்நாட்டுக்கு சென்ற பிரதமர் மோடி, பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் அவரை சந்தித்து உரையாடுவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கூட்டறிக்கை ஒன்று … Read more

மும்பை அருகே கடலில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் படகு மாயம்: தேடும் பணியில் ஹெலிகாப்டர்கள்

நேற்று இரவு மகாராஷ்டிரா மாநிலம் ராய்கட் அருகில் ரேவ்தந்தா என்ற இடத்தில் பாகிஸ்தான் கப்பல் ஒன்று இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தது. இதனை இந்திய கடற்படையினர் ரேடார் மூலம் கண்டுபிடித்தனர். இதையடுத்து கடலோர பாதுகாப்பு படை உஷார்படுத்தப்பட்டது. முப்படைகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு அக்கப்பலை தேட ஆரம்பித்தனர். அது பாகிஸ்தான் மீன்பிடி படகாக இருக்கலாம் என்று கடலோர பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். கடல் சீற்றம் மற்றும் காற்று, மழை போன்ற காரணங்களால் பாகிஸ்தான் படகு இந்திய எல்லைக்குள் இழுத்து … Read more

போதைப் பொருள் வழக்கு: நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் மனுக்கள் மீது நாளை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமீன் மனுக்கள் மீது நாளை (ஜூலை 8) உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. போதைப் பொருள் வழக்கில், கடந்த மாதம் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள், நீதிபதி நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்ரீகாந்த் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் … Read more

கேரளாவில் செவ்வாய்க்கிழமை தனியார் பேருந்துகள் ஸ்டிரைக், புதன்கிழமை பொது வேலை நிறுத்தம்!

திருவனந்தபுரம்: கேரளாவில் நாளை தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளதாலும், புதன்கிழமை பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதாலும் இரண்டு நாட்களும் போக்குவரத்து பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள தனியார் பேருந்து உரிமையாளர்களின் கூட்டுக் குழு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. பேருந்து உரிமையாளர்களின் பிரதிநிதிகளுக்கும் போக்குவரத்து ஆணையருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், திட்டமிடப்பட்டபடி செவ்வாய்க்கிழமை மாநிலம் தழுவிய அடையாள வேலைநிறுத்தம் நடைபெறும் என தனியார் பேருந்து … Read more

பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கு கூடுதல் வரி விதிப்பதாக அச்சுறுத்திய ட்ரம்ப்: சீனா எதிர்வினை

புதுடெல்லி: பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கு கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ள நிலையில், ‘பிரிக்ஸ் நாடுகள் மோதலை விரும்பவில்லை’ என்று சீனா எதிர்வினையாற்றியுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் கூடுதல் வரி அச்சுறுத்தலுக்கு பதிலளித்துள்ள சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், “வர்த்தகம் மற்றும் வரிவிதிப்பு போர்களில் வெற்றியாளர்கள் இல்லை. அதிகளவில் வரி விதிக்கும் போக்கு முன்னேற்றத்துக்கான எந்த வழியையும் வழங்காது என்று சீனா தனது நிலைப்பாட்டை மீண்டும், … Read more

உள்ளே மினி பார், செயற்கைகோள் போன்-விஜய்யின் பிரைவேட் ஜெட்டின் விலை என்ன தெரியுமா?

Actor Vijay Private Jet Price : நடிகர் விஜய் பிரைவேட்டாக ஜெட் வைத்திருக்கிறார். அதில், இருக்கும் சிறப்பம்சங்கள் என்னென்ன, அந்த விமானத்தின் விலை என்ன என்பதை இங்கு பார்ப்போம்.  

விஜய்க்கு நர்சரி பள்ளிக்கு கூட முதல்வராக தகுதியில்லை – திண்டுக்கல் லியோனி!

Dindigul I Leoni: விஜய்க்கு நர்சரி பள்ளிக்கு கூட முதல்வராக தகுதியில்லை என திண்டுக்கல் லியோனி கூறியுள்ளார்.

சகோதரிக்கு புற்றுநோய்.. இந்த வெற்றியை அவருக்கு சமர்ப்பிக்கிறேன்.. ஆகாஷ் தீப் உருக்கம்!

Akash Deep: இந்திய டெஸ்ட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. தற்போது இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. தற்போது, 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமமான் நிலையில் உள்ளது.  இப்போட்டியில், வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் … Read more

முதல்வர் மு க ஸ்டாலின் இரட்டை மலை சீனிவாசனுக்கு புகழாரம் 

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இரட்டை மலை சீனிவாசனுக்கு புகழாரம் சூட்டியுள்ளார். தம்ழக முதல்வர்ர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் “கல்வியை மட்டும் பெற்றுவிட்டால், அதைக் கொண்டு எந்த அளவுக்குச் சமூக இழிவுகளைக் களைந்து புரட்சி செய்யலாம், நம் உரிமைகளை வென்றெடுக்கலாம் என்பதற்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டு திராவிடமணி இரட்டைமலை சீனிவாசனார்! அவரது பிறந்தநாளில், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவர் ஆற்றிய ஒப்பற்ற பணிகளைப் போற்றி நினைவுகூர்கிறேன்! அவர் பிறந்த செங்கல்பட்டு மாவட்டத்தில், கடந்த ஆண்டு … Read more

இந்தியாவில் முடங்கிய ராய்ட்டர்ஸ் எக்ஸ் வலைதள கணக்கு சீரானது

புதுடெல்லி, சர்வதேச செய்தி வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இருந்து வருகிறது. இங்கிலாந்து நாட்டை அடிப்படையாக கொண்டு செயல்படும் இந்நிறுவனம் பல்வேறு நாடுகளுக்கும் தகவல்களை வழங்கி வருகின்றது. இதேபோன்று, அதன் எக்ஸ் வலைதளத்தின் வழியேயும் செய்திகள் தரப்படுகின்றன. இந்நிலையில் இந்தியாவில் செயல்பட்டு வந்த, அதன் எக்ஸ் வலைதள கணக்கு திடீரென நேற்று முடங்கியது. இதனால், செய்திகளை படிக்க முடியாமல் வாசகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், இதற்கும் மத்திய அரசுக்கும் தொடர்பு இல்லை என பதிலளிக்கப்பட்டது. … Read more