Parandhu Po: `நடிகர் சிம்புவுக்கு எப்போது திருமணம்?' – மிர்ச்சி சிவா அளித்த பதில் இதுதான்

இயக்குநர் ராம் இயக்கத்தில், மிர்ச்சி சிவா, அஜு வர்கீஸ், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பறந்து போ’. ஜூலை 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான  இத்திரைப்படம் மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் மதுரையில் நேற்று( ஜூன் 7) ‘பறந்து போ’ படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கின்றனர்.  பறந்து போ அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சிவா, “ இரண்டு படங்களுக்கு ஓகே சொல்லி இருக்கிறேன். அதில் ஒன்று சுந்தர்.சி சாரின் ‘கலகலப்பு 3’. … Read more

திருபுவனம் அஜித்குமார் மரண வழக்கு விசாரணையை ஆக.20-க்குள் முடிக்க வேண்டும்! சிபிஐக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு…

மதுரை: காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட திருபுவனம் கோவில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கு விசாரணையை ஆகஸ்டு மாதம் 20-க்குள் முடிக்க வேண்டும் என சிபிஐக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தையடுத்த மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார்மீது நகை திருடியதாக கோவிலுக்கு வந்த நிகிதா என்பவர் கொடுத்த  புகாரின் பேரில், தனிப்படை போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது, அஜித்குமாரை காட்டுமிராண்டித்தனமாக அடித்தும், உடலில் சூடு வைத்து கொடுமைப்படுத்தி கொன்றுள்ளது, வீடியோ மூலம் அம்பலமானது. … Read more

ரெனால்ட் 2025 ட்ரைபர் எம்பிவி எதிர்பார்ப்புகள் என்ன? | Automobile Tamilan

இந்தியாவின் குறைந்த விலையில் 7 இருக்கை கொண்ட ட்ரைபர் மாடலின் மேம்படுத்தப்பட்ட டிசைன், வசதிகளுடன் கூடுதலாக பாதுகாப்பு சார்ந்த அம்சங்களை பெற்றதாக உறுதியான கட்டுமானத்துடன் எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் ஜூலை 23 ஆம் தேதி வெளியாக உள்ளது. 2025 Renault Triber டரைபர் காரில் உள்ள 1.0 லிட்டர் 72hp பவரை 6,250rpm-லும், 96 Nm டார்க் 3,500rpm-ல் வழங்கக்கூடிய மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. கூடுதலாக டர்போ பெட்ரோல் ஆப்ஷன் … Read more

கடலூர் ரயில் விபத்தில் பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு: இபிஎஸ் வேதனை

சென்னை: கடலூர் செம்மங்குப்பம் பகுதியில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளாகியதில் பள்ளி மாணவர்கள் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன், படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு … Read more

சீனாவின் புகழ்பாடுகிறார் ராகுல்: பாஜக மூத்த தலைவர் விமர்சனம்

புதுடெல்லி: பாஜக மூத்த தலை​வர் அமித் மாள​வியா சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: சீன ராணுவ தொழில்​நுட்​பத்​தின் புகழ் பாடு​வதை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வாடிக்​கை​யாக வைத்​துள்​ளார். நாடாளு​மன்​றத்​துக்கு உள்​ளே​யும், வெளி​யே​யும் சீன ராணுவ தொழில்​நுட்​பம், ஆயுதங்​களுக்கு ஆதர​வாக அவர் தொடர்ந்து குரல் எழுப்பி வரு​கிறார். கடந்த 2021-ம் ஆண்டு மக்​களவை கூட்​டத்​தின்​போது, லடாக்​கில் சீனா​வின் மோதல் போக்கை ஆதரிக்​கும் வகையில் ராகுல் பேசி​னார். சீன மாடல் கண்​காணிப்பு ட்ரோன்​களை நாம் ஏன் … Read more

கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து: கேட் கீப்பர் மட்டும் காரணம் இல்லை?

cuddalore school van train accident : கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உயிரிழப்பு!

Bun Butter Jam: "விஜய் அண்ணா செய்வது பிரமிப்பா இருக்கு…" – பட நிகழ்வில் ராஜு பேச்சு

பிக்பாஸ் பிரபலம் ராஜு ஜெயமோகன் நடிப்பில் உருவாகியுள்ள பன் பட்டர் ஜாம் திரைப்படம் வரும் ஜூலை 18ம் தேதி வெளியாகவிருக்கிறது. பிக்பாஸ் தான் காரணம்! இந்த திரைப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய ராஜு, “பாக்கிய ராஜ் சாருக்கும், நெல்சன் ..திலீப் குமார் சாருக்கும் நன்றி. எனக்கு இந்த வாய்ப்பு கிடைக்க பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியும், அதில் என்னை ஜெயிக்க வைத்த மக்களும் தான் காரணம். படத்தில் மட்டும்தான் நடிப்பேன், இதுமாதிரி மேடைகளிலும் … Read more

பள்ளி வேன்மீது ரயில் மோதல்: உயிரிழந்த மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி! முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: பள்ளி வேன்மீது ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என  முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இந்த விபத்து குறித்து தகவல்அறிந்த முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் அமைச்சர்கள், ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். கடலூர் – செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8) காலை பள்ளி வாகனம் மீது ரயில் மோதியது. இந்த விபத்தில் பள்ளி … Read more

இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் கீழ் பென்ட்லி அறிமுகம்.! | Automobile Tamilan

மிகப்பெரிய ஆட்டோமொபைல் குழுமங்களில் ஒன்றான ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா பிரைவேட் லிமிடெட் (SAVWIPL) நிறுவனம் என்ற பெயரில் செயல்பட்டு வரும் நிலையில், இந்திய சந்தையில் பிரிட்டிஷ் சொகுசு பிராண்டான பென்ட்லி கார்களை சந்தைப்படுத்தல், விற்பனை மற்றும் விற்பனைக்குப் பிந்தைய செயல்பாடுகளையும் நிர்வகிக்கும். பென்ட்லி இந்தியாவின் பிராண்ட் இயக்குநராக அபே தாமஸ் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பெங்களூரு மற்றும் மும்பையில் தொடங்கி, பின்னர் புது டெல்லி உட்பட முக்கிய நகரங்களில் டீலர்களை துவங்க திட்டமிட்டுள்ளது. … Read more